உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்த ரஜினிகாந்த்..!

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைந்த கொடியை அறிமுகம் செய்தார். இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. நடுவில் வாகை மலர் வைக்கப்பட்டு உள்ளது. அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.

நடிகர் விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சில நாட்களிலே, ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவதாக சொல்லி, பின்னர் பின்வாங்கிய நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைத்து அவர் வாயால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி திமுக சார்பாக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் பேசினார். அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து தனக்கென பாணியை உருவாக்கி உதயநிதி ஸ்டாலின் உள்ளார். தனக்கொரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கு என்று நிரூபிக்கும் வகையில் உதயநிதி செயல்படுகிறார். அதோடு நிற்காமல், எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது. உலகில் எந்தவொரு தலைவருக்கும் இந்த மாதிரி ஒரு நூற்றாண்டை யாரும் கொண்டாடி இருக்க மாட்டார்கள். கொண்டாடவும் முடியாது திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்; அவர்கள் எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி” ராஜ்நாத் சிங் ஏன் கருணாநிதியை 30 நிமிடம் புகழ்ந்தார்? ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை என்று கூறினார் . மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு: எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசினார்.

விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றி கழகம் என்று பதிவு ..!

தமிழ் நடிகர் விஜய் அண்மையில் பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கிடையே அவ்வப்போது கட்சிக்கான அணிகளும் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படும் சூழலில், கடந்த ஜன. 26-ம் தேதி பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்களுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதற்கிடையே, ஏற்கனவே மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு விஜய் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்று டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றார். கட்சியின் பெயரைப் பதிவு செய்யும் பொருட்டு புஸ்ஸி ஆனந்த் தேர்தல் ஆணையத்துக்கு சென்றார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.