சீமான்: நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை…! அதற்குள் இப்படி அலறினால் எப்படி..?

நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை கைதான் ஓங்கி இருக்கிறேன் அதற்குள் இப்படி அலறினால்.. எப்படி? என சீமான் தெரிவித்தார். கடந்த ஜனவரி 8 -ஆம் தேதி கடலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீமானின் பேச்சுக்கு எதிராக தமிழ்தேசிய, பெரியாரிய இயக்கங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் நீலாங்கரையிலுள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்று கைதாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் இன்று பதிலளித்தார். அப்போது, “நானும் பிரபாகரனும் இருக்கும் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. படம் முதல் முதலில் வெளியான போதே இது எடிட் செய்யப்பட்டது என்று கூறியிருக்கலாமே. 15 ஆண்டுகளாக எங்கு படுத்து இருந்தீர்கள். பெரியாரைத் தாக்கி பேசும் போது உடனடியாக பதிலுக்கு பிரபாகரனை தாக்கி பேச தொடங்கி இருக்கிறீர்கள். கொளத்தூர் மணி என்பவரை நான் மிகவும் மதிக்கிறேன்.

ஆனால் நான் சோவையும், குருமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு போய் சி.பா.ஆதித்தனாரின் காலில் விழுந்து நாம் தமிழர் கட்சியை வாங்கி வந்தேன் என்று பொய்யாக கூறுகிறீர்களே நியாயமா? நாம் தமிழர் கட்சி என் தாத்தனுடையது. தமிழ் தந்தையினுடையது. ஒவ்வொரு தமிழனுக்கும் இதில் உரிமை இருக்கிறது. அந்தக் கட்சிக்கு நாம் தமிழன் என்று பெயர் வைப்பதற்கு நான் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்?

சோவுக்கும் குருமூர்த்திக்கும் நாம் தமிழர் கட்சியுடன் சம்பந்தம் இருக்கிறதா? எத்தனை நாட்களுக்கு இந்த கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவீர்கள்? நான் உங்களை எதிர்த்து பேசமாட்டேன் என்கிற ஒரே தைரியத்தில் தானே இப்படி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். பெரியார் உங்களுக்கு தேவை எனில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள். அடிப்படையிலே பெரியார் பிழையானவர். தமிழ், தமிழர், தமிழர் அரசு இன்று பேசுவது பித்தலாட்டம் என்றும், திராவிட எழுச்சியை தடுப்பதற்கு செய்யக்கூடிய அயோக்கியத்தனம் என்றும், அவ்வாறு பேசுவது ஆரியர்களுக்கு செய்கிற கைக்கூலித்தனம் என்றும் பெரியார் பேசியிருக்கிறார்.

தமிழ் முட்டாள்களின் பாசை, தமிழ் சனியன், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ் சனியனை விட்டு ஒழியுங்கள், தமிழில் என்ன இருக்கிறது? தமிழ் உங்களை படிக்க வைத்ததா? என்றெல்லாம் பெரியார் கேள்வி எழுப்பியிருந்தார். என் நிலத்தில் அப்படி பேசுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் கன்னடர். நீங்கள் என் நிலத்தில் வந்து அமர்ந்து கொண்டு தமிழ் முட்டாள்களின் மொழி என்று கூறுகிறீர்கள். என் மொழியை தாழ்த்தி பேசுவதற்கு உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது? நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை கைதான் ஓங்கி இருக்கிறேன் அதற்குள் இப்படி அலறினால்.. எப்படி?

பெண்ணிய உரிமைக்காக பேசிய பெரியார், தாலியை அறுத்து எறிய சொன்னார். திராவிடர் கழகம் அதை செய்தது. அதே பெரியார், கருப்பையை அறுத்து எறிய சொல்லியிருந்தார். பெண்கள் என்ன பிள்ளை பெற்றுக்கொள்ளும் இயந்திரமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். பெரியாரியம் பேசும் பெருமக்கள் குறிப்பாக, அக்கா அருள்மொழியோ, அம்மையார் கனிமொழியோ, மதிப்பிற்குரிய அம்மையார் சுந்தரவல்லியோ கருப்பையை அறுத்து எறியவில்லையே? குழந்தை பெற்றிருக்கிறீர்களே! இதுதான் பெரியாரை பின்பற்றும் லட்சமணமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான்: கர்ப்பப்பையை வெட்டி எறிய பெரியார் சொன்னார்.. ஏன் கருப்பையை அறுத்து எறியவில்லையே..!?

தந்தை பெரியார் பெண்கள் என்ன பிள்ளை பெற்றுக்கொள்ளும் இயந்திரமா? கருப்பையை அறுத்து எறிய சொல்லி இருந்தார். ஆனால், பெரியாரியம் பேசும் பெருமக்கள் குறிப்பாக, அக்கா அருள்மொழியோ, அம்மையார் கனிமொழியோ, மதிப்பிற்குரிய அம்மையார் சுந்தரவல்லியோ கருப்பையை ஏன் கருப்பையை அறுத்து எறியவில்லையே? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஜனவரி 8 -ஆம் தேதி கடலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீமானின் பேச்சுக்கு எதிராக தமிழ்தேசிய, பெரியாரிய இயக்கங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் நீலாங்கரையிலுள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்று கைதாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் இன்று பதிலளித்தார். அப்போது, “நானும் பிரபாகரனும் இருக்கும் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. படம் முதல் முதலில் வெளியான போதே இது எடிட் செய்யப்பட்டது என்று கூறியிருக்கலாமே. 15 ஆண்டுகளாக எங்கு படுத்து இருந்தீர்கள். பெரியாரைத் தாக்கி பேசும் போது உடனடியாக பதிலுக்கு பிரபாகரனை தாக்கி பேச தொடங்கி இருக்கிறீர்கள். கொளத்தூர் மணி என்பவரை நான் மிகவும் மதிக்கிறேன்.

ஆனால் நான் சோவையும், குருமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு போய் சி.பா.ஆதித்தனாரின் காலில் விழுந்து நாம் தமிழர் கட்சியை வாங்கி வந்தேன் என்று பொய்யாக கூறுகிறீர்களே நியாயமா? நாம் தமிழர் கட்சி என் தாத்தனுடையது. தமிழ் தந்தையினுடையது. ஒவ்வொரு தமிழனுக்கும் இதில் உரிமை இருக்கிறது. அந்தக் கட்சிக்கு நாம் தமிழன் என்று பெயர் வைப்பதற்கு நான் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்?

சோவுக்கும் குருமூர்த்திக்கும் நாம் தமிழர் கட்சியுடன் சம்பந்தம் இருக்கிறதா? எத்தனை நாட்களுக்கு இந்த கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவீர்கள்? நான் உங்களை எதிர்த்து பேசமாட்டேன் என்கிற ஒரே தைரியத்தில் தானே இப்படி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

பெரியார் உங்களுக்கு தேவை எனில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள். அடிப்படையிலே பெரியார் பிழையானவர். தமிழ், தமிழர், தமிழர் அரசு இன்று பேசுவது பித்தலாட்டம் என்றும், திராவிட எழுச்சியை தடுப்பதற்கு செய்யக்கூடிய அயோக்கியத்தனம் என்றும், அவ்வாறு பேசுவது ஆரியர்களுக்கு செய்கிற கைக்கூலித்தனம் என்றும் பெரியார் பேசியிருக்கிறார்.

தமிழ் முட்டாள்களின் பாசை, தமிழ் சனியன், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ் சனியனை விட்டு ஒழியுங்கள், தமிழில் என்ன இருக்கிறது? தமிழ் உங்களை படிக்க வைத்ததா? என்றெல்லாம் பெரியார் கேள்வி எழுப்பியிருந்தார்.

என் நிலத்தில் அப்படி பேசுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் கன்னடர். நீங்கள் என் நிலத்தில் வந்து அமர்ந்து கொண்டு தமிழ் முட்டாள்களின் மொழி என்று கூறுகிறீர்கள். என் மொழியை தாழ்த்தி பேசுவதற்கு உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது? நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை கைதான் ஓங்கி இருக்கிறேன் அதற்குள் இப்படி அலறினால்.. எப்படி?

பெண்ணிய உரிமைக்காக பேசிய பெரியார், தாலியை அறுத்து எறிய சொன்னார். திராவிடர் கழகம் அதை செய்தது. அதே பெரியார், கருப்பையை அறுத்து எறிய சொல்லியிருந்தார். பெண்கள் என்ன பிள்ளை பெற்றுக்கொள்ளும் இயந்திரமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். பெரியாரியம் பேசும் பெருமக்கள் குறிப்பாக, அக்கா அருள்மொழியோ, அம்மையார் கனிமொழியோ, மதிப்பிற்குரிய அம்மையார் சுந்தரவல்லியோ கருப்பையை அறுத்து எறியவில்லையே? குழந்தை பெற்றிருக்கிறீர்களே! இதுதான் பெரியாரை பின்பற்றும் லட்சமணமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வைகோ காட்டம்: தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க சீமான் முயற்சி..!

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தி பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார்.

தந்தை பெரியாரைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிர்வினையாக கட்சி வேறுபாடு இல்லாமல் தமிழகத்தில் போராட்டங்களும், நீதிமன்றங்களில் முறையீடு செய்வதும் நடந்து வருகின்றன.

சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்சினையில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை ஜனவரி 20 -ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக்கிளை, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

பொது இடத்தில் அமைதியை குலைத்தல், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல் முதலான பிரிவுகளில் சீமான் மீது 60-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை எதனைப் பற்றியும் சிறிதும் பொருட்படுத்தாமல், அகம்பாவத்துடன் மேலும் மேலும் சீமான் உளறி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது. தமிழ்நாடு அரசு, இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, விசாரித்து, உரிய தண்டனையை உடனடியாக அளிக்க வேண்டும். நாகரிக அரசியலை விரும்புகிற அனைவரும் இத்தகைய ‘தீய சக்திகளுக்கு’ தக்க பாடம் புகட்டிட தொடர்ந்து அணிதிரள வேண்டும்” என வைகோ தெரிவித்துள்ளார்.