முதோல் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: இனி பணம் போடாவோ., பணம் எடுக்கவோ முடியாது.,

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பல வங்கிகள் விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்வதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கான தங்களது உரிமைகளை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது முதோல் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதனால் இந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் பணம் எடுக்கவோ மற்றும் பணம் போடவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியானது இந்தியாவில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்து அதன் நிதி நிலை சரியில்லாத வங்கிகளை தொடர்ந்து செயல்படுவதற்கு தடை விதித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள முதோல் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வங்கியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த வங்கியிடம் தற்போது போதிய மூலதனம் இல்லை என்றும் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் சுத்தமாக இல்லை என்றும் முடிவு செய்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் இந்த வங்கியின் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபாசிட்டை திருப்பிச் செலுத்துவதற்கும் புதிய டெபாசிட் பணத்தை பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் புதிதாக பணம் போடவோ அல்லது தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு 99 சதவீத முழுத் தொகையையும் டெபாசிட் மற்றும் கடன் உத்தரவாத நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவாதம் அளித்துள்ளது. இதனால் இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.