பிரனாயி விஜயன் கேள்வி: “பாரத் மாதா கி ஜெய்..” உருவாக்கியது ஒரு முஸ்லீம்…! இது சங் பரிவாரங்களுக்குத் தெரியுமா..!?

மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் பிறகு சுமார் 5 ஆண்டுகழுகு பிறகு இப்போது அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டது. இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று நாடு முழுக்க எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக நாடு முழுக்க கூட்டங்களும் நடந்து வருகிறது. இதற்கிடையே மலப்புரத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘ஜெய் ஹிந்த்’ போன்ற முக்கிய முழக்கங்களை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள் என்பது சங் பரிவாரங்களுக்குத் தெரியுமா என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய நிலையில், அச்சட்டத்திற்கு எதிராகக் கேரள மாநிலம் மலப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன், “ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளிடம் நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன். முஸ்லீம்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படும் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த கலாச்சார வரலாற்றையே அழிக்க முயல்வதாகும். இஸ்லாமியர்கள்: ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கத்தை உருவாக்கியவர் அசிமுல்லா கான் என்ற இஸ்லாமியர். இங்கு வந்த சில சங் பரிவார் தலைவர்கள் தங்கள் எல்லோரையும் பார்த்து ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கமிடச் சொல்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு இந்த கோஷத்தை உருவாக்கியவர் யார் என தெரியாமல் போய்விட்டது. இந்த கோஷத்தை உருவாக்கியவரின் பெயர் அஜிமுல்லா கான்.. இது சங் பரிவாரங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன.. குடியுரிமையில் பிற நாட்டு முஸ்லீம்களை புறக்கணித்தது ஏன்? இந்த கோஷத்தை உருவாக்கியது ஒரு முஸ்லீம் என்பதால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பதும் எனக்குத் தெரியாது. இதேபோல ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை உருவாக்கியவர் நாட்டின் முன்னாள் தூதர் அபித் ஹசன் சஃப்ரானி. இது மட்டுமா.. தேச பக்தி பாடலான ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற பாடலையும் முகம்மது இக்கல் என்பவர் தான் இசையமைத்தார்.

இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்: முஸ்லிம்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் அல்லது இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முழக்கமிடும் சங்பரிவார் அமைப்புகள் முதலில் இந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டை ஆண்ட முஸ்லீம் மன்னர்கள், முஸ்லீம் ஆய்வாளர்கள் மற்றும் முஸ்லீம் அதிகாரிகள் நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஒளிரச் செய்வதில் பெரும் பங்கு வகித்துள்ளனர். நாட்டிற்குச் சுதந்திரத்தைப் பெறுவதில் மற்ற பிரிவினருடன் முஸ்லிம்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர்” என கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் தெரிவித்தார்.