ஜெகன் மோகன் ரெட்டி மீதான தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அவர் மீது மர்ம நபர் ஒருவர் தூரத்திலிருந்து கல்லை வீசி தாக்கினார். அந்த கல் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிறிய ரத்தக் காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்த அதிகாரிகள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு உடனடியாக முதலுதவி செய்தனர். ஜெகன் மோகன் ரெட்டி நெற்றியில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில், “ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு சம்பவத்துக்கு கண்டனங்கள். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நாகரீகத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Jagan Mohan Reddy: ‘குழந்தைகளின் கல்வி மேம்பாடும் சீராக தொடர வேண்டுமா அல்லது அது இருளில் மூழ்க வேண்டுமா..!’

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 175 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகள் ஒரே கட்டமாக மே 13-ம் தேதி வாக்குப்பதிவு தொடங்கி ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணப்படுகிறது.

இந்நிலையில், இந்த தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பேருந்து யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மாநிலத்தின் பாலநாடு மாவட்டத்தில் அவர் யாத்திரை மேற்கொண்டார். அப்போது, ஜன சேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தங்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.

அதுசமயம் கிராம மக்களிடம் பேசிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, “தீமை மற்றும் வஞ்சகத்துக்கு எதிரான போருக்கு நீங்கள் தயாரா? இது எம்எல்ஏ மற்றும் எம்பி-க்களை மட்டும் தேர்வு செய்யும் தேர்தல் அல்ல. விவசாயிகளுக்கு கொடுத்த உத்தரவாதம் தொடரவும், பெண்களுக்கு அதிகாரமளிக்கவும், குழந்தைகளின் கல்வி மேம்பாடும் சீராக தொடர வேண்டுமா அல்லது அது இருளில் மூழ்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது.

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். ஆலோசித்து முடிவெடுங்கள். சில ஊடக நிறுவனங்கள் பொய் பரப்புகின்றன. கழுதையை குதிரையாக வர்ணிக்கின்றன. இப்படித்தான் பொய் பரப்பப்படுகிறது. இது சதி வேலை. சந்திரபாபு நாயுடுவுடன் அவர்கள் இணைந்து செயல்படுகிறார்கள். அவருக்கு வாக்களித்தால் வேலை கிடைக்கும் என சொல்கிறார்கள். இதற்கு முன்பு அவரது ஆட்சி காலத்தில் எத்தனை பேருக்கு அவர் அரசு பணியை வழங்கினார் என அவரால் சொல்ல முடியுமா?

ஆளும் அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் 2.31 லட்சம் மக்கள் அரசு வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். உங்களுக்கு ‘ஃபேன்’ வேண்டுமா (தனது கட்சியின் சின்னத்தை குறிப்பிட்டு) அல்லது துருப்பிடித்த ‘சைக்கிள்’ (தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம்) வேண்டுமா என முடிவு செய்யுங்கள்” என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்.