தாத்தா அஸ்தியை ஜப்பானின் இருந்து கொண்டு வாருங்கள்..!

அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சியை நிறுவிய வரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரனும் மேற்கு வங்க பாஜக துணைத் தலைவருமான சந்திர குமார் போஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆளுமை, புத்திசாலித்தனம், அசாதாரண தைரியம், தன்னலமற்ற தன்மை மற்றும் சுதந்திர போராட்டத்துக்கான அர்ப்பணிப்பு ஆகியசெயல்பாடுகளால் இந்தியர்களின் இதயங்களில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சுதந்திரத்தை விரும்பும் மக்களின் இதயங்களிலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்றென்றும் ஒரு ஹீரோவாக திகழ்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திர மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது. இதன்படி நேதாஜி 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ல் விமான விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 18-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த தருணத்தில், ஜப்பானின் ரென்கோஜியில் உள்ள அவருடைய அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் என அந்த கடித்ததில் சந்திர குமார் போஸ் கூறியுள்ளார்.

இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் “காதலி வாடகைக்கு!”

தனிமையில் தவிக்கும் இளைஞர்களைக் குறிவைத்து கேர்ள் பிரண்டை வாடகைக்கு விடும் பிஸ்னஸை ஒரு நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் கேர்ள் பிரண்ட் மட்டுமின்றி பாய் பிரண்டையும் கூட நாம் வாடகைக்கு எடுக்கலாமாம் காதல் குறித்தும் காதலிப்பது குறித்தும் இங்கே ஏகப்பட்ட கவிதைகளும் பாடல்களும் இருக்கிறது. நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் யாராவது ஒருவரைக் காதலித்து இருப்போம். அவர்களுடன் ஒரு பிணைப்பைக் கொண்டிருந்திருப்போம்.

ஆனால், இந்த பிணைப்பை நீண்ட கால கனெக்ஷனாக மாற்றுவது என்பது பலருக்கும் வராது. அதிலும் டெக்னாலஜி நிறைந்த இந்த நவீன உலகில் இது குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. வாடகைக்கு எடுக்கலாம்: பலரது காதலும் இங்கே தோல்வியில் முடிய இதுவே முக்கிய காரணமாகும். இதன் காரணமாகவே இப்போது பலரும் திருமணமாகாமலும் பெண் கிடைக்காமலும் இருந்து வருகின்றனர். நம்ம ஊரில் அரேஞ் மேரேஜ் முறையால் சிங்கிலாக சுற்றும் நபர்கள் குறைவாகவே உள்ளனர்.

இருப்பினும், வெளிநாடுகளில் இப்படி தனியாகச் சுற்றுபவர்கள் ரொம்பவே அதிகம். இந்த தனிமையால் இவர்களுக்கு மனஅழுத்தம் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பல பிரச்சினைகளுக்கு நவீன தீர்வை கொடுக்கும் ஜப்பான் தான் இதற்கும் ஒரு தீர்வைக் கொடுத்துள்ளது. நமது நாட்டை விட அங்கே வயதானாலும் சிங்கிளாக சுற்றும் நபர்கள் ரொம்பவே அதிகம். இதற்குத் தீர்வாக ஜப்பான் மக்கள் தங்கள் பார்ட்னர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமாம். காதலன், காதலி என யார் வேண்டும் என்றாலும் ஒரு மணி நேரத்திற்கு இத்தனை வாடகை எனச் செலுத்தி எடுத்துக் கொள்ளலாம்.

இதெல்லாம் ஒரு பிஸ்னஸா.. இதற்கு அந்நாட்டு அரசு தடை விதிக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஜப்பான் மக்கள் அதிகப்படியானோர் சிங்கிளாக இருப்பதால் அவர்களுக்குத் தனிமை உணர்வு அதிகரித்து மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறதாம். இதனால் விபரீத முடிவுகளையும் அவர்கள் எடுக்க நேரிடுகிறதாம். எனவே, அதைத் தடுக்க இந்தத் திட்டத்தை முன்மொழிந்ததே அரசின் குழு தானாம். எனவே, இது 100% அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்த திட்டம் தான்.

இதைக் கேட்டு உடனே குஷியாக வேண்டாம்.. இந்த சேவைக்கான கட்டணம் ஒன்றும் மலிவானது இல்லை.. காதலியை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் ஒரு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.3000 என்ற விகிதத்தில் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு வாடகைக்கு எடுக்க வேண்டுமாம்.. இது தவிர கேர்ள் பிரண்டை தேர்வு செய்யத் தனியாக ரூ.1,200 கட்ட வேண்டுமாம். முதல் முறை இந்த சேவையைப் பயன்படுத்தும் போது இலவசமாக கேர்ள் பிரண்டை தேர்வு செய்யலாம். இருப்பினும், அதன் பிறகு தேர்வு செய்ய ரூ.1,200 கட்ட வேண்டும் என்பதே முக்கியமான விஷயம்.