ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் சென்னை வித்யா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தது கண்டிக்கத்தக்க்து என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள வித்யா மெட்ரிக் பள்ளி ஒன்றில் ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஆசிரியர்கள் பாதத்தை கழுவ வைப்பது எல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் என்று தெரியவில்லை.
ஆசிரியர்களை கொண்டாட வேண்டும். நாங்கள் கொண்டாடும் வகையில் யாரும் கொண்டாடியதில்லை. ஆனால், அவர்களின் பாதங்களை கழுவுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார், அதோடு, இனி இதுபோன்று நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “ஆன்மிகம் இல்லாத அரசியல் இப்போது செய்யமுடியாது என தெரிவித்துள்ளார்.