ஹரியானா சட்டப் பேரவைக்கு வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!

ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஹரியானாவில் மொத்தமுள்ள 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு அக்டோபர் 5-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் என்றும், வரும் 16-ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹரியானாவில் ஆளும் பாஜக, எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியின்றி தனித்து போட்டியிடும் நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. மேலும் ஆம்ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. எனவே ஹரியானாவில் நான்கு முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.