ராசிபுரம் நகராட்சியில் பரபரப்பு: திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமா..!?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 24 -திமுகவும் 2- அதிமுக மற்றும் 1 சுயேட்சை வேட்பாளர் என 27 வார்டுகள் உள்ளன. ராசிபுரம் நகராட்சி நகர்மன்ற தலைவராக திமுக நகர செயலாளர் என்.ஆர்.சங்கரின் மனைவி கவிதா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தேர்தல் நடந்து முடிந்து 5 மாதங்களில் பார் வசூல், காய்கறி கடை வசூல், தரைகடை, தள்ளு வண்டி கடை வசூல், மற்றும் அரசு பணிகளில் டெண்டர் விடுவது என நகராட்சியில் வரும் வருமானம் அனைத்துமே நகர்மன்ற தலைவர் எடுத்து கொள்வதாகவும், மற்ற கவுன்சிலர்கள் புலம்பி வந்ததாகவும் தெரிகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 1948-ல் மிகப்பழமையான நகராட்சி ஆகும். ராசிபுரம் நகராட்சியில்நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 27 வார்டுகளில் 24 -திமுகவும் 2- அதிமுக மற்றும் 1 சுயேட்சை வேட்பாளர் என வென்று திமுகவின் அசத்தலான வெற்றி பெற்றது. இந்த சூழலில், திமுகவில் முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் சதீஷ், முன்னாள் திமுக நாமக்கல் மா.செ.வும், முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திசெல்வனின் தீவிர ஆதரவாளர். என உடன்பிறப்புகள் சொல்கிறார்கள்.

இந்நிலையில், 12- வது வார்டில் தன் மனைவி சசிரேகாவுக்கு சீட் கேட்டு கிழக்கு மா.செ. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி.யிடம் சதீஸ் பேச அவரோ, ‘பார்த்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டு பின்னர் சீட் தர மறுத்திருக்கிறார் என ஒரு செய்தியும் அரசால் புரசலாக பேசப்படுகிறது. அதிருப்தி அடைந்த சதீஷ், 12-வது வார்டில் தன் மனைவி சசிரேகாவை சுயேச்சையாக களமிறக்கி வெற்றி பெற சுயேச்சை வேட்பாளரிடம் திமுக மரண அடி வாங்கியதும் என்பதும் மறுக்கமுடியாத ஒன்றாகும். மேலும் ராசிபுரம் நகராட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் சதீஸின் மனைவி சசிரேகா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளரான சசிரேகா சதீஷ் என்பவர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுகொள்ள 14 கவுன்சிலர்களும் தற்போது சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சகல வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்பியுமான ராஜேஷ்குமார் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதுவரை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் எந்த நேரத்திலும் தற்போதைய நகர்மன்ற தலைவர் கவிதா சங்கருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.