மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா அவர்கள் தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நடத்தினர். நடத்தும் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியை தடுப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம் பட்டியில் சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த சுங்கச்சாவடியை கடந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன், மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திடீரென சிட்டம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் ஈடுபட்டனர்.
இந்த சுங்கச்சாவடியை வாகனங்கள் கடந்து செல்ல முடியாதவாறு சுங்கச்சாவடி முன்பு அமர்ந்து கோஷமிட்டனர். இந்த கோஷத்தில் .மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும்,, கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியை தடுப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
ஆகையால்,மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா அவர்களை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்றுகை போராட்டத்தால் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி இருபுறமும் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேல் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர்.