கடனை திரும்பக் கேட்ட வங்கி மேலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அமைச்சர் கீதாஜீவன் ஆதரவாளர்..!

கொடுத்த கடனை திரும்பக் கேட்ட வங்கி மேலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அமைச்சர் கீதாஜீவனின் தீவிர ஆதரவாளரும், திமுக பகுதிச் செயலாளருமான ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்பேட்டை திமுக பகுதிச் செயலாளராக இருப்பவர் ஜெயக்குமார் அமைச்சர் கீதாஜீவனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

ஜெயக்குமார், தூத்துக்குடி துறைமுகம் சாலையில் உள்ள ஒரு தனியார் கடன் பெற்றுள்ளதாகவும் அதனை முறையாக செலுத்தாததால் வங்கி மேலாள‌ர் கடனைத் திருப்பி செலுத்தக் கோரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், காமராஜ் உள்பட பலர் வங்கி மேலாளரை தாக்கியதோடு கொலைமிரட்டல் விடுத்தாகத் தெரிகிறது.

இதனை தொடர்ந்து பலத்த காயமடைந்த வங்கி மேலாளர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த தகவல் தூத்துக்குடிமத்தியப் பாகம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு BNS act: 296, 115, 118, 351ன் கீழ் வழக்குப் பதிவு (FIR: 167/2025) செய்து திமுக பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் உள்பட நான்கு பேர் மீது வழக்குச் செய்தனர்.

நேற்று தஞ்சாவூர் இன்று மதுரை..! காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இளைஞர்..!

நேற்று தஞ்சாவூரில் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஜெராக்ஸ் கடையில் பணியாற்றும் இளம்பெண் மீது இளைஞர் ஒருவர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் மீண்டும் தமிழகத்தை அதிர வைத்துள்ளது.

கடந்த நவம்பர் 17 -ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை பகுதியிலுள்ள ஜெராக்ஸ் கடையில் பணிபுரியும் இளம்பெண்ணை இளைஞர் சித்திக் ராஜா என்பவர் காதலிக்க வற்புறுத்தி அந்தப் பெண் மீது இளைஞர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காயமடைந்த பெண் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். பணிபுரியும் இளம்பெண் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் குறித்து ஒத்தக்கடை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், ஒரு இளைஞர், ஜெராக்ஸ் கடைக்கு வந்து, அந்த இளம்பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்க ஒருகட்டத்தில் கோபமடைந்த இளைஞர், அந்த இளம்பெண்ணை சரமாரியாக தாக்குகிறார். இந்தக் காட்சி அப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. நேற்று தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளியின் உள்ளேயே கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகி மீண்டும் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.