சர்வதேச சாதனை படைத்த 10 மாத பெண் குழந்தை..!

சென்னை, கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் வியட்நாம் நாட்டில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். மணிகண்டனின் மனைவி பெயர் ரேவதி. இவர்களுக்கு மகிழினி என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.

சுட்டியான இந்த குழந்தை உலக நாடுகளின் தேசிய கொடிகள், விலங்குகள், பறவைகள், காய்கறிகள், பழங்களின் புகைப்படங்களை காட்டினால் அதன் பெயர்களைக் கூறும் அளவுக்கு குழந்தை நினைவாற்றலுடன் விளங்கி வருகிறது. எடுத்துகாட்டாக ஒரு கேள்விக்கு 2 பதில்களில் இருந்து சரியான விடையை தேர்வு செய்வதுபோல், குழந்தை மகிழினி காய்கறிகள், பறவைகள், தேசிய கொடிகளின் 2 புகைப்படங்கள் வைத்து, அதன் பெயர் கூறினால் சரியானவற்றை தேர்வு செய்து அசத்துகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சாதனையாளர்களுக்கான “இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டு” போட்டியில் கலந்துகொண்டு ஒரு நிமிடத்தில் தாய் ரேவதி கூறும் 12 நாட்டின் தேசியக் கொடியை ஒரு நிமிடத்தில் மளமளவென சுட்டிக்காட்டி குழந்தை மகிழினி அசத்தி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்காக அக்குழந்தைக்கு சர்வதேச சாதனையாளர் விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. குழந்தை மகிழினியின் இந்த சாதனையை பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

சாலையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது புல்லட் ஏறி விபத்து, அலட்சியமாக சென்ற SSI -யின் மகன்

திருச்சி சாலையில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது அந்த வழியாக புல்லட்டில் வந்த 10-ஆம் வகுப்பு மாணவன் மூன்றரை வயது குழந்தையின் மீது புல்லட் ஏறி விபத்து ஏற்பட்டது. ஆனால் அந்த விபத்திற்கு காரணமாக மாணவன் மூன்றரை வயது குழந்தையின் மீது பைக்கை ஏற்றிவிட்டு நான் கே.கே.நகர் SSI முருகராஜ் மகன் என்று சொல்லிவிட்டு அலட்சியமாக சென்றான். இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது.

எப்படி வேண்டுமானாலும் குழந்தை பிறக்கட்டும்…. அந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை உண்டு..!

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, மனைவி அல்லது கணவன் இருக்கும் போதே வேறு பெண் அல்லது ஆண் உடன் சேர்ந்து வாழ்வது போன்ற உறவுகள் சட்டப்படி செல்லாத திருமணங்களாக கருதப்படுகின்றன. இது போன்ற உறவுகளில் பிறந்த குழந்தைகள், பெற்றோர் சொத்துக்களில் உரிமை கோருவது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதில், சட்டப்படி செல்லாத திருமணங்கள் வாயிலாக பிறந்த குழந்தைகள், பெற்றோரின் பரம்பரை சொத்துக்களில் பங்கு கோர உரிமை உள்ளது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது, உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2011-ல் உத்தரவிட்டது. இதில், சட்டப்படி செல்லாத திருமணங்கள் வாயிலாக பிறந்த குழந்தைகள், பெற்றோர் சொந்தமாக உழைத்து சம்பாதித்த சொத்துக்களில் பங்கு கோர உரிமை உள்ளது. அதே நேரம், பரம்பரை சொத்துக்களில் அவர்கள் உரிமை கோர முடியாது என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சட்டப்படி செல்லாத திருமணங்கள் மற்றும் சட்டப்படி பிரியாத தம்பதியரின் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக சொத்துக்களில் பங்கு கோரும் உரிமை உள்ளது.

இந்து வாரிசு சட்டத்தின்படி, சட்டப்பூர்வ ஆங்கீகாரம் உள்ளது என்று தெளிவுபடுத்தி உள்ளது. எனவே, பெற்றோரின் உழைப்பில் சம்பாதித்த சொத்து மற்றும் பரம்பரை சொத்துக்களின் பங்கு கோர அவர்களுக்கு உரிமை உள்ளது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.