1970-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியில் செயல்பட்டு வரும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி. இந்தக் கல்லூரியில் முதல்வராக 2018-ம் ஆண்டு முதல் கோ.கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு அந்தப் பதவியையும் கோ.கீதா வகித்து வந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மாணவர்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் மேலும் கோ.கீதா மீது, கல்லூரி கல்வி இயக்குநர் பதவிக்கு வர 5 கோடி பணம் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை முறைகேடாகப் பேராசிரியர்களை நியமனம் செய்து பெற்றதாகவும் கோ.கீதா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அவர் அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கோ.கீதா மீது புகார் எழுந்ததுள்ளன. தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் தனராஜன் திருவாரூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநர் கோ.கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.