கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். குறிஞ்சிப்பாடி எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணி பெருமாள் கோயில் மற்றும் கடைவீதி வழியாக சென்று மீண்டும் எம்ஜிஆர் சிலை வந்நடைந்தது.

பேரணியில் குறிஞ்சி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், ஆகியோர் கலந்து கொண்டு சாலை விதிகளை மதிப்போம், விபத்தில்லா பயணம் செய்வோம், போதையில் பயணம் நொடியில் மரணம், தலைக்கவசம் உயிர்க்கவசம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

மேலும் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த் உதவி கோட்ட பொறியாளர்கள் பரமேஸ்வரி, ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் வினோத், வெங்கடேஷ் இளநிலை பொறியாளர் ஜெகன், உதவி பொறியாளர் ராஜ சுவேதா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜா அரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள்… லாட்டரி விற்பனை படு ஜோர்!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள்… லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை..!!

நாமக்கல் மாவட்டத்தில்  ஆட்சியர் ச.உமா அவர்களின் தலைமையில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் 30 -06-2023 (வெள்ளிகிழமை) நடைபெற்றது. இதில்,கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மனுவிற்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அப்பொழுது அரசு  மதுபான கடைகளுக்கு அருகில் சந்து கடைகள் இருப்பதாக அதிக அளவில் புகார்கள் விவசாயிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜூ இது குறித்து வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இதற்கு மட்டும் 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இது  தொடர்புடைய 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இப்பொழுது சந்து கடைகள் எதுவும் இல்லை என்று காவல் கண்காணிப்பாளர் ராஜூ தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர் . ஈஸ்வரன் மேலும் பேசுகையில், காவல்துறை கூறியது போன்று சந்து கடைகள் எதுவும் மூடப்படவில்லை அதற்கு மாறாக அது அதிகரித்த வண்ணமே உள்ளது மற்றும் அதிக அளவில் லாட்டரி சீட்டுகளும் விற்கப்படுகின்றது என்று அவர் கூறினார்.

இதுமட்டுமின்றி, கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றது என்று தெரிவித்தனர் . இது குறித்து காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் தங்களை மிரட்டுவதாகவும் விவசாயிகள் கூறினர்.

மேலும் நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சியர் ச.உமா அவர்கள் உடனடியாக விவசாயிகளின் குறைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.