வள்ளல் பெருமானின் நாடு நம் வீடு கிராம மேம்பாட்டு திட்டம் தொடக்க விழாவில் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜாராம் பேசினார்.!

கடலூர் மாவட்டம்ம் வடலூர் அருகே மேட்டுக்குப்பம் கிராமத்தில் ஞானாலாயா வள்ளலார் கோட்டம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து வள்ளல் பெருமானின் நாடு நம் வீடு கிராம மேம்பாட்டு திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமை நடைபெற்றது. இந்த விழாவில் ஞானாலயா வள்ளலார் கோட்டம் நிறுவனர் ஞானானந்த சுவாமிகள் திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

மேலும் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்கள் வள்ளல் பெருமானின் நாடு நம் வீடு திட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசினார். இந்த விழாவிற்கு என்.எல்.சி. பொது மேலாளர் செந்தில்குமார், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ், முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நாயனார் ,டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் மாரியப்பன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

காவல்துறைக் கண்காணிப்பாளர் இந்து மக்கள் கட்சி தலைவருக்கு சம்மன்…!

மதுரை, விக்கிரமங்கலம் பகுதியை சேர்ந்த பால் பண்ணை உரிமையாளர் சுமதி. இவரது வீட்டில் கடந்த 16-ம் தேதி அன்று மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். இந்த சம்பவத்தில் வீட்டுக்குள் படுகாயமடைந்த சுமதி மயங்கி கிடந்த அவரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் சமூக வலை தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவில், குண்டு வீச்சு, கள்ளத் துப்பாக்கி, வீச்சருவாள், கத்தி, பெருகிவரும் ஆயுதக் கலாச்சாரம், சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு, திமுக ஆட்சியில் அச்சத்தில் மக்கள், என்று பதிவிட்டிருந்தார்.

காவல்துறை விசாரணையில் இந்த சம்பவம் குடும்ப தகராறினால் நடத்தப்பட்டது என தெரியவந்தது. எனவே, குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் குண்டு வீசியதை சட்டம் ஒழுங்கு பிரச்னை போல பதிவிட்டிருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை, செக்கானூரணி காவல் நிலையத்தில் நாளை அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சம்மன் அனுப்பி உள்ளார்.