காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு அருகே அருகே காந்தியின் உருவப்படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினாார். அவருடன் துணை முதல்மைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், ராஜ கண்ணப்பன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்ச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.ஏல்.ஏ.க்கள் பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., ப.ரங்கநாதன் மற்றும் செய்தித் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

என்ன கொடும சார்…!? விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர்..

தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதோபோல விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கிராமசபை கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கிருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன், கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பனை எட்டி உதைத்தார். கூட்டத்தில் இருந்த ராசு என்பவரும் விவசாயியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட இருவர் மீதும் காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.