கர்நாடகாவில் லவ் ஜிகாத் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டு..!

கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத் தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத் கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ஃப‌யாஸ் நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து. ஹுப்ளி காவல்துறை ஃபயாஸை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், நேஹா முதலில் என்னை காதலித்தார். பின்னர் குடும்பத்தினரின் எதிர்ப்பால் பிரிந்து சென்றார். திருமணம் செய்ய மறுத்ததால் அவரை கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏபிவிபி மாணவ அமைப்பினர், பாஜக, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர், நேஹா ஹிரேமத் கொலைக்குநீதி வேண்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் லவ் ஜிகாத் அதிகரித்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அஜீத்குமார் வீட்டில்: லோக் ஆயுக்தா திடீர் சோதனையில் ரூ.2½ கோடி மதிப்பு சொகுசு கார் சிக்கியது

கர்நாடக மாநிலத்தில் அரசுத்துறை பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. இந்த பிரிவு அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்தி ஊழல் செய்த அரசு அதிகாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர்.

அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை காட்டிலும், அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து, புகார்கள் வந்த அரசு அதிகாரிகள் பற்றிய தகவல்களை லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்து வந்தனர். அவர்களது சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் பணிகளும் நடந்து வந்தது.

இந்நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில், பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தாராக இருந்து வருபவர் அஜீத்குமார் ராய். இவரது வீடு, அலுவலகங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கொடிகேஹள்ளி அருகே சககாரநகரில் உள்ள வீடு, சந்திரா லே-அவுட்டில் உள்ள வீடு ஆகிய இடங்களிலும் காவல்துறை சோதனை நடத்தினார்கள். அப்போது தாசில்தார் அஜீத்குமார் ராய்க்கு சொந்தமான 11 இடங்களிலும் இந்த சோதனை நடந்திருந்தது.

அப்போது அஜீத்குமார் ராய் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 5 சொகுசு கார்கள், 10 வீடுகள் இருப்பதற்கான சொத்து ஆவணங்கள் காவல்துறையிரிடம் சிக்கியது. அவரிடம் இருக்கும் சொகுசு கார்களின் மதிப்பு மட்டும் ரூ.2½ கோடி என்று கூறப்படுகிறது. அஜீத்குமார் ராய் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அதனால் அங்குள்ள அஜீத்குமார் ராய்க்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

அவரது வீட்டில் இரவு வரை தொடர்ந்து சோதனை நடைபெற்றது. ஏற்கனவே தாசில்தார் அஜீத்குமார் ராய் முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.