தமிழ்நாடு அரசு அதிரடி: கரூர் மாநகராட்சி ஆணையர் பணியிடமாற்றம்

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிலையில், திடீரென கடந்த செப்டம்பர் மாதம் கரூர் மாநகராட்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

சரவணக்குமார் கரூருக்கு மாற்றப்பட்டதற்கு அரசியல் அழுத்தம் காரணம் என பேச்சுகள் கிளம்பிய நிலையில் இன்று கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி துணை ஆணையராக இருந்த கே.எம்.சுதா, கரூர் மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சிக்கு பேனா பென்சில் வாங்க 50 லட்சமா..!

கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் பேப்பர், பென்சில், பேனா வாங்குவதற்காக 25 லட்சம் மதிப்பீடு தொகையாக இருந்த நிலையில், இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதே பேப்பர், பென்சில், பேனா வாங்குவதற்காக 25 லட்சம் என மொத்தம் 50 லட்சம் ரூபாய் முறை கேடு நடந்திருப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை காரணம் காட்டி அதிமுக கவுன்சிலர்கள் சுரேஷ் மற்றும் ஆண்டாள் தினேஷ் ஆகிய இருவரையும் இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி மேயர் உத்திரவிட்டார். இதனை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.