ரூ.7,261 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்..!

கடந்த 2016-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. கருப்புப் பணப் புழக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 2018 -ஆம் ஆண்டு மார்ச் 31 -ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6.73 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023, மார்ச் 31-ஆம் தேதி 3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் இது 10.80 சதவீதமாகும். இந்தத் தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலேயே அவை வங்கிக்கு வரவில்லை என கருதப்படுகிறது.

2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளில் சுமார் 89% 2017 மார்ச் மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டன. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, 2018 மார்ச் 31 அன்று ரூ.6.73 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2023 மார்ச் 31 அன்று ரூ.3.62 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இது புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 10.8% மட்டுமே ஆகும். இந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் பொதுவாக பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவதில்லை. மேலும், பொதுமக்களின் நாணயத் தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது.

மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் க்ளீன் நோட்டு கொள்கையின்படி, ரூ.2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். ரிசர்வ் வங்கி 2013-2014 ஆம் ஆண்டில் இதேபோன்று ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றது.

பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது எந்த வங்கிக் கிளையிலும் மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம். வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது தற்போதைய அறிவுறுத்தல்கள் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்ட விதிகளுக்கு உட்பட்டது. வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, 2023 மே 23 முதல் எந்த வங்கியிலும் ரூ.20,000/- வரையிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.

2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000/- வரை மாற்றுவதற்கான வசதி 2023 மே 23 முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களும் வழங்கப்படும். 2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் 2023 செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான அவகாசத்தைப் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 97.96% 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுளதாகவும், மீதம் ரூ. 7,261 கோடி மதிப்புள்ள 2000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது. கைவசம் உள்ள நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.