சோலைக்கண்ணன் கண்டனம்: மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார்..!

மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் கோரிக்கை வைத்துள்ளது. இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்” சென்னையில் நடைபெற்ற சைவ சமய மாநாட்டிற்க்கு செல்லும் போது உளுந்தூர் பேட்டை அருகே வாகன விபத்து ஏற்பட்டதற்க்கு காரணம் நம்பர் பிளைட் இல்லாத குல்லா போட்ட தாடி வைத்தவர்கள் என்றும். ரெம்ப தூரம் தூரத்தி வந்து பேரி கார்ட்டை உடைத்து வந்து எங்கள் கார் மீது மோதினார்கள் என்றும், நேர்மையானவர்களாக இருந்திருந்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பார்கள். ஆனால் மோதி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் என்றும் என்னை கொல்ல சதி என்றும் மதுரை ஆதீனம் பேட்டி அளித்திருந்தார்.அதனை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

ஆனால் காவல்துறை மூலமாக தற்பொழுது அந்த வாகன விபத்து நடந்த வீடியோ (CCTV) வெளியிட்டு தற்போது வைராலாகி உள்ளது. அந்த வீடியோவில் மதுரை ஆதீனம் வந்த வாகனமும், ஆதீன வாகனத்தின் மீது மோதிய வாகனமும் இரு வழி பாதையில் வரும் போது நான்கு வழி சாலை பிரிவு சந்திப்பில் ஆதினம் கார் பின்னால் வந்த வாகனம் லேசாக உரசி உள்ளது என்று அந்த வீடியோவை உற்று ஆய்வு செய்யும் பொழுது உண்மை நிலை நன்றாக தெரிய வருகிறது.

இதில் ஆதினம் வந்த வாகனம் மிக வேகமாக சென்ற பொழுது தான் விபத்து ஏற்பட்டுள்ளது.உடனே இதனை பெரிய பிரச்சனை ஆக்கி என்னை கொல்ல தாடி வைத்த குல்லா போட்ட மத தீவிரவாதிகள் சதி திட்டமிட்டு உள்ளார்கள் என்று மதுரை ஆதினமடத்தின் புனிதத்தை கெடுக்கும் விதமாகவும் மத பிரச்சனையை உண்டாக்கும் விதமாகவும் மதுரை ஆதீனமாக இருந்து கொண்டு வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான விஷப் பேச்சை பரப்பி மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கிய 293-வது மதுரை ஆதினமாக இருக்கும் ஞானசம்பந்த தேசிய பரமாச்சியாருக்கு இந்து மக்கள் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

மத தீவிரவாதிகள் மதுரை ஆதீனத்தை எதற்காக கொல்ல வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து அப்படி என்ன ஆதீனம் பேசி விட்டார். தீவிரவாதிகள் கொல்ல வேண்டுமென்று நினைத்தால் இப்படி அறையும் குறையுமாக சிறிய விபத்தை ஏற்படுத்தி விட்டு செல்ல மாட்டார்கள்.யாரையாவது கொல்ல வேண்டுமென்று மத தீவிரவாதிகள் நினைத்தால் அவர்களை குறி வைத்து கொன்று விட்டுத்தான் செல்வார்கள்.அதற்கு உதாரணம் இந்து இயக்கத் தலைவர்கள் படுகொலை. பஹல்காம் தாக்குதல்.

என் வாகனத்தின் மீது இடித்தவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால் காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் தப்பி சென்று விட்டார்கள் என்று கூறும் ஆதீனம் அவர்கள் தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் நேர்மையாக புகார் அளித்து இருக்கலாமே? ஏன் புகார் அளிக்கவில்லை ஆதீனத்தின் பேச்சில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் எழுகிறது.

மதுரை ஆதீனம் அவர்கள் ஒரு மதத்தின் மீது பழி போட்டு ஒரு தவறான பொய்யான குற்றச்சாட்டால் மதுரை ஆதீன மடத்துக்கு மட்டுமல்ல திருஞானசம்பந்தர் பக்தர்களாகிய எங்களுக்கும் அவமானமாக உள்ளது. இதற்கு முன்பாக ஆதீனத்தின் டிரைவர் மீதும்.குத்தகை தாரர்கள் மீறும் என்னன கொல்ல சதி நடக்கிறது என்று இதே ஆதீனம் கொலை குற்றச்சாட்டு கூறினாரே தவிர, இந்த கொலை மிரட்டல் சம்பந்தமாக யார் மீதும் இதுவரையில் முறையாக காவல்துறையிடம் மதுரை ஆதினம் புகார் அளிக்க வில்லை.

இது போன்று பொய்யான கொலை முயற்சி குற்றச்சாட்டை ஒரு மதத்தின் மீது சம்பத்தமில்லாமல் சுமத்தி குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவது மதுரை ஆதீனமாக இருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல . காவல்துறை பாதுகாப்பிற்காகவோ அல்லது விளம்பர நோக்கத்திற்காகவோ மதுரை ஆதீனத்தை பின்னால் இருந்து தவறாக யாரேனும் இயக்குவது போல் தெரிகிறது.மதுரை ஆதீனத்திற்கு பின்னால் ஒரு சதிகார கூட்டமே இருக்கிறது.

கடந்த 2012-ல் நித்தியானந்தாவை 293-வது ஆதினமாக நியமிக்கும் பொழுது அதனை எதிர்த்து ஒரு வருடமாக போராடி மதுரை ஆதீன மடத்தை விட்டு நித்தியானந்தாவை கஷ்டப்பட்டு வெளியேற்றினோம். அதன் பிறகு 292-வது சன்னிதானம் இறக்கும் பொழுது மதுரை ஆதீன மடத்திற்கு 293-வது சன்னிதானமாக இவர் தான் வரவேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்புகள் ஆதரவளித்தோம்.

ஆனால் மதுரை ஆதினத்தின் நடவடிக்கைகள் சரி இல்லாத காரணத்தால் நாங்கள் மடத்திற்க்கு செய்வதை நிறுத்தி விட்டோம். மேலும் மதுரை ஆதீனமாக பதவியேற்ற பின்பு மதுரை ஆதீன மடத்தில் தினந்தோறும் அன்னதானம் போன்ற கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றமாலும், ஆதீன மடத்தை மின்சார சிக்கனம் என்று ஆதீன மடத்தை இருளில் போடுவதும், மடத்திற்குள் யார் வருகிறார்கள் செல்கிறார்கள் என்று கண்காணிப்பு சிசிடிவி கேமராவை அணைத்து வைப்பதும், மதுரை ஆதீனமாக பதவி நியமனம் செய்த திருவாவடுதுறை ஆதீனத்தையும், தர்மபுர ஆதீனத்தையும் கேவலமாக பேசுவதும் பிராமண சமூகத்தையும், அரச்சகர்களையும் அசிங்கமாக இழிவு படுத்தி பேசுவதும் நடக்கிறது.

மடத்திற்கு ஆசி வாங்க வரும் பக்தர்களை அவமரியாதை செய்வதும், மடத்தின் சொத்துக்களில் இருந்து வரும் வாடகை, ஒத்திக்கு இருக்கும் நபர்களிடம் பாதகாணிக்கை என்ற பெயரில் லட்ச கணக்கில் வசூலிப்பதும், அரசியல்வாதிகளை போல் அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பு மற்றும் பொது மேடையில் தான் தோன்றி தனமாக வாய்க்கு வந்த படி சர்ச்சையை உண்டாக்கும் வகையில் பேசுவதும், பிறகு அதனை மறுப்பதும் நடக்கிறது.

அமைச்சர் சேகர்பாபுவை சினேக் பாபு என்று நக்கலடித்து பேசுவதும் பிறகு சேகர்பாபும் நானும் நண்பர்கள் என்று கூறுவதும் மடத்திற்க்கு வருபவர்களை முன்னால் விட்டு பின்னால் அவர்களை தவறாக பேசுவதும், சித்திரை திருவிழா நடந்து கொண்டிருக்கின்ற இவ்வேலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வீதி உலா வரும்பொழுது சிவனடியார்கள் சிவ வாத்தியம் அடித்து விட்டு மடத்திற்க்குள் சிவனடியார்கள் கொண்டு வந்த உணவு சாப்பிட கூட அனுமதி மறுப்பதும், மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடக்கும் திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு ஒரு பச்ச தண்ணீர் கூட மடத்தின் சார்பாக கொடுக்க மறுப்பதும்,மதுரை ஆதீன மடத்தை வணிக வளாகமாக மாற்றுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக மதுரை ஆதீனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவி வருகிறது.

1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான சுவாமி திருஞானசம்பத்தரால் உருவாக்கப்பட்ட மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக இருக்கும் ஒருவர் கூறும் குற்றச்சாட்டை சாதாரணமான விசமயாக எடுத்து கொள்ளாமல் வாகன விபத்து சம்பந்தமாக மதுரை ஆதீனம் அவர்களையும் அவருடன் உடன் வந்தவர்களையும்,வாகனத்தை உரசிய நபர்களையும் அழைத்து உரிய முறையில் விசாரித்து உண்மை நிலையை மக்கள் மத்தியில் தமிழக காவல்துறையும், தமிழக அரசும் தெளிவுபடுத்த வேண்டும்.

சமீபகாலமாக மதுரை ஆதீன மடத்தை களங்கப்படுத்தும் விதமாகவும்,மடத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் விதமாகவும் அவரது நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுது மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிய வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி மனநலம் பாதிக்கப்பட்டவரோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரோ மதுரை ஆதீனமாக இருக்க முடியாது.

எனவே இந்து சமய வளர்ச்சிக்காகவும் இந்து சமயத்தை பாதுகாக்கவும். இந்து சமய ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகவும் மன்னர்கள், ஜமீன்தார்கள்,செல்வந்தர்கள் என தானமாக கொடுத்த சுமார் 1000 கோடிக்கு மேல் இருக்கும் மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களையும், ஆதீன மடத்தின் புகழையும் புனிதத்தையும் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு மதுரை ஆதீன மரபுகளை மீறி தான்தோன்றி தனமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் மதுரை ஆதீனமாக செயல்படும் 293-வது திருஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியராக மதுரை ஆதீன மடத்தில் மடாதிபதியாக வகிக்க தகுதி அற்றவர்..

அவரை உடனடியாக மதுரை ஆதீனம் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டுமென விரைவில் இந்து மக்கள் கட்சி ஏற்பாட்டின் பேரில் அனைத்து இந்து அமைப்புகளையும், சைவ ஆதினங்களையும் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தெரியப்படுத்தி கொள்கின்றோம்.” என சோலைக்கண்ணு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

துரை வைகோ கண்டனம்: அப்பாவி மக்களின் பிணங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் மதவாத வலதுசாரிகள்

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலை அப்பாவி மக்களின் பிணங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் மதவாத வலதுசாரி அரசியல் சக்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என துரை வைகோ வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவியைக் கண்டித்தும், வஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மதிமுக சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் குழந்தைகளும் பெண்களும் கதற கதற அவர்களின் தந்தையர்களும் கணவர்களும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். காக்கா குருவிகளை சுடும் போது கூட வன்மத்தோடு சுட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு வன்முத்தோடு சுட்டிருக்கிறார்கள் சுடப்பட்ட அப்பாவி மக்களுக்கு எந்த அரசியலும் தெரியாது, வன்மமும் தெரியாது தாக்குகின்ற தீவிரவாதிகளின் குருற நோக்கமும் தெரியாது எதற்காக நாம் சுட படுகிறோம் என்றும் தெரியாது. இது மதம் சார்ந்ததா என்றால் அதுவும் கிடையாது. எந்த மதமும் இது போன்ற இழி செயல்களை ஆதரிப்பதில்லை.

இந்து மதமும் இஸ்லாமோ கிறிஸ்தவமோ எந்த மதமும் இதுபோன்ற இழிசெயலை ஆதரிப்பதில்லை. இது போன்ற இழி செயல்கள் மிகப்பெரிய பாவச் செயல் என்றே அனைத்து மதமும் கூறுகிறது. மதத்துக்கும் இதற்கும் என்னையா சம்பந்தம்? ஆனால் இதை மதப் பிரச்சனையாக திசை திருப்புகிறார்கள். இந்த மேடையின் முன்னால் அமர்ந்திருக்கிற மதுரையில் உள்ள நம் மாமாக்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இதை ஆதரிக்கிறார்களா? கிடையாது.

ஆனால் சமூக வலைதளங்களில் எதை பரப்பிக் கொண்டுள்ளார்கள் இந்த மதவாத சக்திகள்? என்ன அக்கிரமம்? இந்த துயர சம்பவத்தை வைத்து, இந்த கொடும் செயலை வைத்து, சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் பிணங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் மதவாத வலதுசாரி அரசியல் சக்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களே அது உங்கள் கையில் தான் உள்ளது. பாகிஸ்தான் துணை பிரதமர், காஷ்மீர் விடுதலைப் போராட்ட வீரர்கள் இதை செய்திருக்கலாம் என்று ஒரு அபாண்டமான விஷமத்தனமான கருத்தை முன்வைக்கிறார்.

நான் ஒன்றை சொல்கிறேன். விடுதலைப் போராட்ட வீரர்கள் தங்கள் உயிரை துச்சம் என்று நினைத்து போராடக் கூடியவர்கள். ஒருபோதும் இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினரை எதிர்ப்பார்கள். துப்பாக்கி ஏந்திய காவல்துறையை தாக்குவார்கள். ஆனால், இது போன்ற அப்பாவி மக்களை ஒருபோதும் தாக்க மாட்டார்கள். ஈழ விடுதலைப் போரிலும் சரி, பாலஸ்தீனத்திலும் சரி அப்படி யாரும் நடந்து கொள்ளவில்லை.

இதற்கெல்லாம் காரணம் யார்? நான் அரசியலுக்கு வந்த ஏழு வருடத்திற்கு முன்பாக சொன்னேன், வலதுசாரி சக்திகள் தான் இவைகளுக்கு காரணம் என்று. இந்த தீவிரவாத இளைஞர்களுக்கு இளம் வயதிலேயே மதரீதியிலான வன்மத்தை ஊட்டி இருப்பார்கள். பின் கையில் துப்பாக்கியை கொடுத்து அனுப்புகிறார்கள். இதற்கு காரணம் இஸ்லாமிய வலதுசாரி சக்திகள். உத்தரப்பிரதேசம் ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி உண்பதற்காக அடித்துக் கொள்கிறானே அது இந்துத்துவ வலதுசாரி சக்திகள். இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களை கொன்று குவித்தானே அது சிங்கள இனவாத வலதுசாரி சக்திகள். ரொகிங்கியா முஸ்லிம்களை கொன்று குவித்தார்களே அது புத்த மதவலதுசாரி சக்திகள்.

நம் தமிழ்நாட்டில் சாதி அரசியலை செய்து கொலைகளுக்கு காரணமான சக்திகளும் வலதுசாரி சக்திகள் தான். இந்த வலதுசாரி அரசியல் நம் நாட்டை விட்டு எப்போது வெளியேறுகிறதோ அன்றுதான் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட இது போன்ற துயர சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும். மக்கள், அரசியலில் ஈடுபடுபவர்களை அவர்களின் மக்கள்நல பணிகளை பார்த்து, அவர்கள் செய்யும் செயல்கள் நன்மையா தீமையா என்பதை பார்த்து தலைவர்களையும், அரசியல் இயக்கங்களையும் தேர்ந்தெடுங்கள். ஒருபோதும் சாதி மதத்தை வைத்து தேர்ந்தெடுக்கக்கூடாது என்று என் அன்பான பணிவான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் சையத் அடில் ஹுசைன் என்ற இஸ்லாமிய இளைஞனும் ஒருவர். இவர் சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற முயற்சித்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். குதிரை சவாரி மூலம் சொற்ப வருமானம் ஈட்டி தனது ஏழைக் குடும்பத்தை பராமரித்து வந்தவர். நமது சகோதரன் கொல்லப்படுகிறானே என்ற ஆதங்கத்தில் தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கியை பறிக்கும் போராட்டத்தில் வீர மரணம் அடைந்துள்ளார். இந்துக்களை காப்பாற்றும் போராட்டத்தில் அவன் இறந்திருக்கிறான்.

சாவது யார் சுடுவது யார் என்று அவன் மதத்தை பார்க்கவில்லையே. அது அல்லவா மனிதநேயம். அந்த தீவிரவாத செயல் இந்தியாவுக்கு எதிரானது மட்டுமல்ல இஸ்லாத்திற்கும் எதிரானது மனிதநேயத்திற்கும் எதிரானது. ஒரு இந்து சகோதரி அவர் கண்முன்னே அவரது தந்தை சுட்டுக் கொல்லப்படுகிறார். தன் இரண்டு குழந்தைகளை காப்பாற்ற பதறி அடித்து ஓடியுள்ளார் அதை பார்த்த முசாஃபிர் என்ற வாகன ஓட்டி அவர்களை காப்பாற்றி அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துவிட்டு, நண்பர் சமீருடன் சென்று அந்தப் பெண்ணின் தந்தையின் சடலத்தின் முன் இரவு முழுவதும் காவல் காத்திருக்கிறார். அந்தப் பெண்மணி சொல்கிறார், காஷ்மீரில் என் தந்தையை இழந்தேன்; அதே சமயம் இரண்டு சகோதரர்கள் கிடைத்துள்ளார்கள் என்று. இது அல்லவா மனிதநேயம்.

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. தமிழ்நாட்டை தாண்டி உத்திரபிரதேசம், ஜார்கண்ட், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு சென்றால், அங்கு கல்வி இல்லை, வேலையில்லை. அவர்கள் வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு சாரை சாரையாய் வந்து கொண்டு இருக்கிறார்கள். அதைப்பற்றி எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஒன்றிய அரசிடம் பதில் உண்டா? 100 நாட்கள் வேலை திட்டம் பல பகுதிகள் வறட்சியான பகுதிகளாக, வானம் பார்த்த பூமியாக விவசாயமே செய்ய முடியாத பகுதிகளாக, தொழிற்சாலைகளே இல்லாத பகுதிகளாக உள்ளது. அவர்கள் இந்த 100 நாள் வேலையைத்தான் நம்பி உள்ளனர். அதை வைத்துத்தான் அவர்களின் இல்லங்களில் அடுப்பெரிகிறது. ஆனால், அதற்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசிடம் பதில் உண்டா? இல்லை.

இதையெல்லாம் மடைமாற்றத்தான் இந்த வஃபு திருத்த சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த வஃபு திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரான சட்டம். ஜனநாயக மாண்பிற்கு எதிரான சட்டம். இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிரான சட்டம் இந்த வஃபு சட்டத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முற்றிலும் எதிர்க்கிறது.திருப்பதி கோவில் நிர்வாகத்தில் ஒரு கிறிஸ்தவரை நியமிப்பதும், சீக்கியரின் பொற்கோவில் நிர்வாகத்தில் ஒரு இஸ்லாமியரை நியமிப்பதும் எவ்வளவு தவறானதோ அது போலதான் இதுவும்.

கோவில்களில் ஆறுகால பூஜைகள் நடக்கட்டும், மசூதிகளில் ஐவேளை தொழுகைகள் நடக்கட்டும், தேவாலயங்களில் ஜெப கூட்டங்கள் நடக்கட்டும், அதேபோல பகுத்தறிவு பிரச்சாரமும் நடக்கட்டும் என்று கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் முழங்கி, மதநல்லிணக்கத்திற்கு அரணாக விளங்குபவர் எங்கள் தலைவர் வைகோ அவர்கள். மதிமுக தொடர்ந்து போராடும் அவர் வலியுறுத்திய மதநல்லிணக்கத்தை நாடு முழுவதும் கொண்டு சேர்த்து இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள இந்த சட்டத்தை எதிர்த்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் மறுமலர்ச்சி திமுக தொடர்ந்து போராடும் என்று பதிவு செய்கிறேன். ஒன்றிய பாஜக அரசு உடனடியாக இந்த வஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என துரை வைகோ பேசினார்.

இரா. முத்தரசன் கண்டனம்: ஆளுநர் ரவியின் நடடிக்கைகள் அதிகார அத்துமீறலின் உச்ச கட்டம்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையில் கூட்டியிருப்பது அதிகார அத்துமீறலின் உச்சகட்டம் என சிபிஐ தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரா. முத்தரசன் கூறுகையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட R.N. ரவி, ஆரம்ப நாளில் இருந்தே மக்களால் தேர்வு செய்து, அமைக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஆளுநருக்கு வழங்கியுள்ள கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றாமல், மக்கள் நலனுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தும் மலிவான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் மாண்புக்கும், மரபுக்கும் தீராக்களங்கம் ஏற்படுத்தும் தரம் தாழ்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் எதிர்த்து வரும் தேசியக் கல்விக் கொள்கையை ஆளுநர் மாளிகை வழியாக செயல்படுத்த முயன்று வருகிறார். அரசியலமைப்பு சட்டரீதியாக இணை வேந்தர் பொறுப்பிலுள்ள மாநில அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்காத துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான தாக்குதல் தளமாக பல்கலைக் கழகங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை பட்டியலிட்டு, அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற பொறுப்புக்கு R .N . ரவி தகுதியற்றவர் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் தரவுகளுடன் விரிவான புகார் மனு குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு நேரில் சமர்பித்து, அதன் மீது நடவடிக்கை கோரப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து எந்த விதமான தகவலும் கிடைக்கப் பெறாத நிலையில் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

தமிழ்நாடு அரசின் முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு கடந்த 08.04.2025 ஆம் நாள் விரிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி, ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட சட்ட திருத்த மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தது சட்டவிரோதமானது என திட்டவட்டமாக கூறியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 142 வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 200-ன்படி ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி, ஆற்ற வேண்டிய கடமைப் பொறுப்புகளை நினைவூட்டி, அதற்கான கால எல்லைகளையும் வரையறுத்து சுட்டிக் காட்டியுள்ளது. ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்கள் அனைத்தும், அனுப்பி வைக்கப்பட்ட தேதியில் ஒப்புதல் பெறப்பட்டதாகும். அவைகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் வழியாக ஒப்புதல் பெறப்பட்ட சட்ட திருத்த மசோதாக்களில், பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநரை நீக்கிவிட்டு, அந்தப் பொறுப்பில் மாநில முதலமைச்சரை நியமிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில், பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட முதலமைச்சர், கடந்த 16.04.2025 ஆம் தேதி பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி, அரசின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சூழலில் நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இப்போது, சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர், வரும் 25, 26, 27 தேதிகளில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மூன்று நாள் மாநாடு, நீலகிரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எனவும், இந்த மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என்று அறிவித்திருப்பதும் ஒரு அசாதாரண நிலையை, நெருக்கடியை உருவாக்கும் திட்டமாக தெரிகிறது. ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை தடுக்க வேண்டிய குடியரசுத் துணைத் தலைவர், அவருடன் இணைந்து செயலாற்றுவது அரசியலமைப்பு சட்ட நெருக்கடியை உருவாக்கும் அரசியல் சதியா? என ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற நாக்பூர் குரு பீடத்தின் சேவகர்களாக செயல்படும் ஆளுநர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்கும் துணை வேந்தர்கள் மாநாட்டை பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும். ஆர்.என்.ரவியின் தொடரும் அதிகார அத்துமீறல்களை தடுத்து நிறுத்த, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு நேரடி நடவடிக்கையில் ஈடுபட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திமுக கண்டனம்: “தமிழகத்தில் கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் சதி”

சென்னையில் “அகத்திய முனிவர் நடைபயணம்”என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைபயணம் நடத்தப்பட்டது, தமிழகத்தில் கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் சதி’ என திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சி.வி.எம்.பி.எழிலரசன் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு நேர் எதிரானது மத்திய பாஜக அரசு முன்வைக்கும் காசியின் ஒற்றை கலாச்சாரம். இப்படியிருக்க “காசி தமிழ்ச் சங்கமம்” என்ற பெயரில் ‘காசியுடன் தமிழ்நாட்டுக்கு இருக்கும் கலாச்சாரத் தொடர்பை மீண்டும் கொண்டு வருவோம்’ என்ற முழக்கத்துடன் கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாசிச பாஜக அரசு நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் கரு பொருளாக ‘அகத்திய முனி’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நேற்று சென்னையில் அகத்திய முனிவர் நடைப்பயணம் என்ற பெயரில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைபயணம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மதவெறி அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தி, மக்களின் ஒற்றுமையை சிதைத்து வரும் பாஜக தற்போது எதிர்கால தலைமுறையான பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் மதவெறி நஞ்சினை விதைக்கத் தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இந்திய இந்து கலாச்சாரத்தை பாதுகாக்கிறோம்; தேசிய உணர்வை வளர்கிறோம் என்ற பெயரில் தங்களின் இந்துத்துவ அரசியல் செயல்திட்டத்தை மாணவர்களிடம் பரப்பி அவர்களின் அறிவியல், பகுத்தறிவு சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையை ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பல்வேறு மாணவர் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசு தற்போது ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் ஆன்மிகத்தின் பெயரால் மாணவர்களிடையே சாதிய, மதவாத உணர்வுகளை விதைக்கும் வஞ்சக செயலில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறது.

உலக நாடுகள் அனைத்தும் AI (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வரும் நிலையில், இங்குள்ள மத்திய பாஜக அரசு கல்வியில் மதத்தைத் திணிக்கும் பிற்போக்குத் தனத்துக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருகிறது. பகுத்தறிவுக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து சமத்துவ சமுதாயத்தை நிறுவிட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வரும் தமிழகத்தில், கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் இத்தகைய சதி திட்டத்துக்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், அறிவியலுக்கு எதிரான பாஜகவின் மதவாதப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, திமுக மாணவர் அணி சார்பில் மாணவர்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” என சி.வி.எம்.பி. எழிலரசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆ.ராசா கண்டனம்: ஒட்டுமொத்த பெண்களை நடிகை கஸ்தூரி கேவலப்படுத்தி இருக்கிறார்..!

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆ.ராசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘பிராமண சமுகம் ஒடுக்கப்படுகிறது’ என்ற பெயரில் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு இருக்கிறது. ஊடகத்தின் கவனத்தை ஈர்க்க திராவிட இயக்கத் தலைவர்களைக் குறிப்பாகத் தந்தை பெரியார், டாக்டர் கலைஞர் உள்ளிட்டவர்களை அந்த ஆர்ப்பாட்டத்தில் இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார்கள். ‘பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்’ என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டடு இருக்கிறார்கள்.

பண்பாட்டு அடிப்படையில் விந்திய மலைக்கு வடக்கே ஒரு வாழ்க்கை முறையும், விந்திய மலைக்கு தெற்கே ஒரு வாழ்க்கை முறையும் இருந்தது என்ற வரலாறு ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை? வானவியல், கணிதம், கட்டக்கலை, சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் பழந்தமிழர் சிறந்து விளங்கிக் கொண்டிருந்த காலத்தில், கி.மு. 3000-ஆம் ஆண்டில் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் தங்கள் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இடம் தேடி கைபர் போலன் கணவாய் வழியே உள்ளே நுழைந்தனர். கொஞ்சக் காலத்தில் பிராமணர்கள் மதத் தலைமையைக் கைப்பற்றினார்கள்.

இவர்களின் மனுதர்மம் வடக்கே உள்ள வாழ்வியல் முறையை வகுத்துத் தந்தது. பிறப்பால் மக்கள் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று பிரிக்கப்பட்டனர். கடவுளிடம் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் பிராமணர்கள் என்றும், அரசாளப் பிறந்தவர்கள் சத்திரியர்கள் என்றும், வணிகம் செய்யப் பிறந்தவர்கள் வைசியர்கள் என்றும் இந்த மூன்று தரப்பினருக்கும் சேவை செய்யப் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் மனுதர்மம் கூறுகிறது.

அந்த மனுதர்மம் மூலம் பிராமணர்கள் மற்ற சமூகத்தினரை அடக்கி ஒடுக்கி கீழ்நிலைக்குத் தள்ளினார்கள். சூத்திரர்கள், உயர் சாதியினர் வாழும் பொதுத் தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டது. கல்வி கற்கும் உரிமையும் பறிக்கப்பட்டது. கோயில்களின் உள்ளே சென்று வழிபடவும் உரிமை இல்லை. பொதுக் குளங்கள், கிணறுகளில் நீர் எடுக்கவும் உரிமை இல்லை 61601 மனுதர்மம் பெயரில் தீண்டாமை கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. தமிழர்கள் சமத்துவ வாழ்வியல் முறையைக் கடைப்பிடித்தார்கள்.

வள்ளுவர் தனது குறளில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்’ என்று குறிப்பிடுகிறார். சங்க காலம்தொட்டு, ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டு வரை தமிழர்கள் சமத்துவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஆண், பெண் சமத்துவம் தமிழர் வாழ்வில்மேலோங்கியிருந்தது. ஆனால், பிராமணர்கள் கடவுளின் பெயரால் மற்றவர்களை உயர்ந்தவர்கள் என்று சொல்வதுதான் இன்றைய பிரச்னைக்கு காரணமாக விளங்குகிறது.’மனிதராகப் பிறந்த அனைவரும் சமமானவர்களே’ என்ற அறிவியல் உண்மைக்கு மாறாக தம்மை உயர் சாதியினராகக் காட்டிக் கொள்ளக் குறிப்பிட்ட வகுப்பினர் இப்போதும் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் அவர்கள் நடத்தியிருக்கும் ஆர்ப்பாட்டம். அது பாதுகாப்பு வலியுறுத்தல் ஆர்ப்பாட்டம் அல்ல.

தன் சமூக பெருமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.பிரதமர் மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராக இருப்பவர்களின் 90 விழுக்காட்டுக்கும் மேலானோர் பிராமணர்கள். மற்ற பிரிவினர் இவர்களைக் காட்டிலும் தகுதி பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத் துறைகளை நிர்வகிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அதுபோலவே, நீதியரசர்களில் மிகப் பெரும்பான்மையினர் உயர் ஜாதியினராக உள்ள நிலை பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து வருவதை உயர் பொறுப்பில் உள்ளோரே சுட்டிக்காட்டும் நிலை உள்ளது..

தமிழ்நாடு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டு முறையை சட்டப்படி நடைமுறைப்படுத்தி மனிதர்கள் யாராயினும் அவர்களுக்கு பாரபட்சம் காட்டாமல், கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தென்னகத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பிராமணர்கள் தங்களை உயர் சாதியினராகவும், மற்றவர்கள் தங்களைவிடத் தாழ்ந்தவர்களாகவும் எண்ணிச் செயல்படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?இந்து மதத்தில் ஏறத்தாழ 90 சதவிகித மக்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக பட்டியலினத்தவராகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில், 1916ஆம் ஆண்டு தொடங்கிய நீதிக்கட்சி, திமுக போன்ற திராவிட இயக்கங்கள் இந்த 90 சதவிகித மக்களின் சுயமரியாதைக்காகப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

திராவிட இயக்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தந்தை பெரியார் முன்னெடுத்து நடத்திய போராட்டங்களாலும் வேள்விகளாலும்தான் இன்றைக்கு ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், “பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம். ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்’ என முழக்கமிட்டார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

ஒடுக்கப்பட்டவர்கள் உயர்வுக்கு வருவதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல்தான் அவர்கள் மீது இன்றைக்கும் களங்கத்தை வீசுகிறார்கள்.”பிராமணர் அல்லாதார் பதவிகளுக்கு வந்தால் லஞ்சம் வாங்குவார்கள்’எனச் சொல்லி ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை மிக மோசமாகஇழிவுபடுத்தியிருக்கிறார் முன்னாள் நடிகை கஸ்தூரி. டிவி விவாதநிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகை கஸ்தூரி, ‘திறமை அடிப்படையில் பிராமணர் அல்லாதார் பதவிகளுக்கு வந்ததால் லஞ்சம் வாங்குகின்றனர்என்று பேசி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகத்தினர் என ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரையும் மிக மோசமானவர்களாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார்.

பிராமணர் சமூகம் உயர்வானது நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் ‘குற்றப்பரம்பரை’ வர்ணம் அடித்திருக்கிறார்.”தெலுங்கர்கள் அந்தப்புரத்துச் சேவகர்கள்” எனச்சர்ச்சை கருத்தைச் சொல்லிவிட்டு, “அப்படி சொல்லவில்லை’ என வியாக்கியானம்பேசுகிறார். சினிமாவில் மார்க்கெட் போன பிறகு தன்னை நிலைநிறுத்திக்கொள்ளஊடக வெளிச்சம் தன் மீது விழ…அதன் மூலம் அரசியல் அங்கீகாரம் பெற..பிற சமுதாயத்துக்கு பெண்களையும் அதிகாரிகளையும்கேவலமாகச் சித்தரிப்பதை அனுமதிக்கவே முடியாது. இது இன்னொரு ஆரிய ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு. அதனைத் திராவிட மாடல் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஆரியத்தை எப்போது தலைதூக்க விடமாட்டோம்.

தெலுங்கர்களை மட்டுமல்ல.. பெண்களையே கஸ்தூரி கேவலப்படுத்தியிருக்கிறார். ‘அந்தப்புரத்து சேவகர்கள்’ என்று ஒரு பெண்ணே பெண் இனத்தையே கேவலமாகச் சித்தரிப்பவர்களுக்கு மற்ற இனத்தைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? இந்து கோயில்களுக்குப் பெண்களை நேர்ந்து விடுவதைச் சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்து, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைச் சென்னை மாகாண சட்டமன்றத்தில் 1947-ல் நிறைவேற்றி தேவதாசிகளுக்குத் திருமணம் செய்யும் உரிமையைத் பெற்றுத் தந்த மண் தமிழ்நாடு. இங்கே ஆரியம் வெற்றி பெறாது.

“பட்டியலின மக்களுக்கு இருப்பதுபோல, பிராமணர்களைப் பாதுகாக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்” என அந்த ஆர்ப்பாட்டத்தில் முழங்கியிருக்கிறார்கள். பட்டியலினத்தவரை மிகவும் கீழ் சாதியினராக நினைப்பவர்கள், அவர்களுக்கு இருப்பது போலவே சிறப்புச் சட்டம் வேண்டும் என்பதைக் கேட்டு சிரிக்கத்தான் தோன்றுகிறது. எல்லா சமூகத்தினரைப் போலவே பிராமண சமுகமும் எந்த பிரச்னையும் இல்லாமல் இங்கே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏதோ நாளும் அநீதி இழைக்கப்படுவதாகவும், அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு ஒடுக்கப்படுவதாகவும்கூறி பொய்யான தோற்றத்தைக் கட்டமைக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

அரசுத் துறை உயர் பதவிகள் என்றாலும் தனியார்த் துறை பணிகள்என்றாலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் அனைத்து உயர் அதிகாரங்களையும் அனுபவித்துக் கொண்டு, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை,ஒதுக்கி வைக்க முயற்சி நடக்கிறது என்றெல்லாம் கூப்பாடு போடுவது,பட்டியல் சமூக மக்களுக்கான சிறப்புச் சட்டங்களைக் கேலி செய்யும் முயற்சி.அனைத்து சமுகத்தினரும் பாதுகாப்பாக வாழ்வதற்கோ, விரும்பிய தொழிலை நிம்மதியாக செய்வதற்கோ எந்தவொரு தடையும் தமிழ்நாட்டில் இல்லை என்பது நாடறிந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்கிறது. சாதி மோதல்களோ மதக் கலவரமோ இல்லாமல், ‘எல்லோருக்கும்

“எல்லாம்” என்ற கொள்கையைக் கடைப்பிடித்துச் செல்கிறது. சமாதான சகவாழ்வு, சமத்துவ நல்லிணக்கம் என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது. சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் தமிழ் மண்ணில் சமூக அமைதியைக் குலைக்க, ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அவதூறு பிரசாரத்தை மேற்கொண்டு பீதியைக் கிளப்புவது உள்நோக்கம் கொண்டது.பிராமண சமூகத்தினருக்கு எதிராக எந்த சிறு வன்முறையும் தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் நடைபெறவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கான சட்டத்தை நீர்த்துப் போக வைப்பதற்காகவோ அல்லது தங்கள் சமூகம் மோசமாகப் பாதிக்கப்படுவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கவோ திட்டமிடுகிறார்கள் என்பது அப்பட்டமாகவே வெளிப்பட்டிருக்கிறது.

திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களிலேயே ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம் என்றிருக்கிறது; அவற்றில் திமுக என்றும் உறுதியாக இருக்கிறது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அதனை நிறைவேற்றியும் வருகிறது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. திராவிட மாடல் ஆட்சியின் முதன்மையான இலக்கு ‘அனைவருக்கும் அனைத்தும்; எல்லோருக்கும் வளர்ச்சி; எளியோருக்கும் ஏற்றம்’ என்பதுதான். வாய்ப்புகளை உருவாக்கி, புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு அந்த வாய்ப்புகள் சென்றடையச் செய்யவே நாளும் பாடுபட்டு வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு. வன்முறையிலோ வெறுப்பு அரசியலிலோ என்றைக்கும் நம்பிக்கையற்ற அரசு இது! வெறுப்பின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடவும் திராவிட மாடல் ஆட்சிக்குக் களங்கம் கற்பிக்கவும் எடுக்கப்படும் முயற்சிகள் ஒருபோதும் இம்மண்ணில் வெற்றி பெறாது என ஆ.ராசா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராவண வதம் என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு சீமான் கண்டனம்..!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ராவண வதம் என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வருகின்ற அக்டோபர் 27 அன்று இராவண வதம் என்ற பெயரில் சிலர் நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ்கொண்டவன் எங்கள் இராவணப் பெரும்பாட்டன். பத்து கலை என்பதை பத்து தலை எனத் திரித்து நம்பவியலாத ஆரிய புராண கதைகளை கட்டமைத்து அருவருக்கத்தக்க தோற்றத்தை உருவாக்கி அவமதித்ததோடு, தொல்தமிழ் மூதாதை இராவணப்பெரும்பாட்டன் உருவத்தை எரிப்பதை ஒவ்வொரு ஆண்டும் விழாவாகக் கொண்டாடுவதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதன்று என்று கூறி இருந்தார்.

இதேபோல் உலகின் எந்த மூலையில், எந்த வடிவில் தமிழர் மூதாதை இராவணப்பாட்டன் இழிவுப்படுத்தப்பட்டாலும் அது உலகத்தமிழர் அனைவரையும் அவமதிப்பதற்கு ஒப்பாகும். மானத்தமிழினம் அதனை இனியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன். நாம் தமிழர் கட்சி தம்முடைய பண்பாட்டு பாசறையான வீரத்தமிழர் முன்னணி மூலம் உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் இராவணப்பெருவிழாவை விரைவில் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, ஆஸ்ரேலிய வாழ் தமிழ்ச்சொந்தங்கள் ஓர்மையுடன், ஓரணியில் ஒன்றுதிரண்டு, இராவணப்பெரும்பாட்டனை அவமதிக்கும் கொடுஞ்செயலைத் தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தங்களது நடவடிக்கை உலகத்தமிழர் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் தவறான செயல் என்பதை இராவண வதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக உணர்ந்து, நிகழ்வுப் பணிகளை நிறுத்த வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

ரா.முத்தரசன் கண்டனம்: மாநிலங்களுக்கான வரி பகிர்வில் தமிழகத்துக்கு பாரபட்சம்..!

“தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி நிதி ஒதுக்கியிருப்பது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டிற்குரிய நிதியினை வழங்கிட வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாஜக தனது பத்தாண்டு கால ஆட்சியில் பாகுபாடு காட்டியது. தனது கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒரு நீதியும், பிற எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு அநீதியும் இழைத்து வந்தது. அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற வாய்ப்பளிக்கவில்லை.

தோல்விக்கு பின்னரும் தனது வெறுப்பு அரசியலை பாஜக கைவிடவில்லை என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியுள்ளது. மாநிலங்களுக்கு வரி பகிர்வு விடுவிப்பில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்குடன் குறைந்த நிதி ஒதுக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஒன்றிய அரசு என்பது, அனைத்து மாநிலங்களையும் சமமாக பாவிக்கும் பெருந்தன்மை வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கின்ற கொடிய நடைமுறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

கூட்டாட்சி தத்துவத்தை நிராகரித்து ஒரு கட்சி ஆட்சி எனும் சர்வாதிகார போக்கை கைவிட்டு ஜனநாயக பண்புகளை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும். தமிழகத்திற்கு ரூ.7268 கோடி நிதி ஒதுக்கியிருப்பது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டிற்குரிய நிதியினை வழங்கிட வேண்டுமாய், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என ரா.முத்தரசன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி மீதான தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அவர் மீது மர்ம நபர் ஒருவர் தூரத்திலிருந்து கல்லை வீசி தாக்கினார். அந்த கல் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிறிய ரத்தக் காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்த அதிகாரிகள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு உடனடியாக முதலுதவி செய்தனர். ஜெகன் மோகன் ரெட்டி நெற்றியில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில், “ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு சம்பவத்துக்கு கண்டனங்கள். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நாகரீகத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.