குழந்தைகள் ஓணம் பண்டிகைக்கு போட்ட கோலத்தை அழித்த பெண்மணி

அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் குடியிருப்பது சில நேரங்களில் உதவியாகவும் சில நேரங்களில் உபத்திரவமாகவும் இருப்பது வழக்கம். அந்த வகையில் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த சம்பவம் பலரின் கண்டனங்களைக் குவித்து வருகிறது. கேரளாவில் பிரதானமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தமிழகம் உட்படத் தென் இந்திய மாநிலங்களிலும் சமீபகாலமாக அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் சம்பீஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட தானிசன்ட்ரா ஹெக்டே நகரில் மோனார்க் செரினிட்டி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசிக்கும் குடும்பங்கள் ஒன்றிணைத்து ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பகுதியாக அடுக்குமாடி குடியிருப்பு பொது தளத்தில் உள்ள பகுதியில் சிறுவர் சிறுமிகள் ஒன்றிணைத்து வரைந்த பூக்கோலத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நடுத்தர வயது பெண் ஒருவர் காலால் அளித்துள்ளார். கோலம் போட்டுக்கொள்ள வேண்டியது தானே, பொது இடத்தில் ஏன் போட வேண்டும் என்று கேட்டு அவர் கோலத்தை அழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.