ATM-மில் பணம் எடுக்க ATM கார்டை போட்டு ரூ.3 ஆயிரம் பதிவு செய்தால் ATM-மில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.4 ஆயிரம் வந்ததால் ATM-மில் பணம் எடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், யாகுத் புரா பகுதியில் ATM மையம் ஒன்று அமைத்துள்ளது. நேற்று ATM-மில் பணம் எடுக்க சென்ற நபர் தனது கார்டை போட்டு ரூ.3 ஆயிரம் பதிவு செய்தார். அப்போது ATM-மில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.4 ஆயிரம் வந்தது.
அதேபோல் மற்றொரு நபருக்கும் ரூ.3 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.4 ஆயிரம் வந்தது. ஆனால் அவர்களின் கணக்கில் ரூ.3000 மட்டும் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த தகவல் காட்டு தீ போல் அப்பகுதியில் பரவியது. இதனால் ATM-மில் பணம் எடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
ஒவ்வொருவரும் போட்டி போட்டு கார்டை போட்டு பணத்தை எடுத்தனர். நேரம் செல்ல செல்ல அதிக அளவு கூட்டம் கூடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தகவல் தெரிவித்தார். காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர். மேலும் காவல்துறை வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.