ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக எஸ்.எம்.சந்த் பாஷா பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் சந்த்பாஷாவிற்கும் பலமனேர் நகரைச்சேர்ந்த சபீஹா என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தொடர்ந்து பெண் குழந்தைகளை பெற்றதால் சந்த்பாஷா மற்றும் அவரது பெற்றோர், சகோதரிகள் சபீஹாவை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் 3 முறை காவல் நிலையத்தில் புகார் அளித்து சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் முதல் சந்த்பாஷா பெற்றோர் மற்றும் சகோதரிகள் இணைந்து ஆண் வாரிசு வேண்டி சந்த்பாஷாவிற்கு வேறு திருமணம் செய்து வைப்பதாக கூறி வீட்டின் மேல் மாடியில் சபீஹாவின் கை விரலை உடைத்து தனி அறையில் அடைத்து வைத்து சாப்பிட உணவு கூட வழங்காமல் சித்தரவதை செய்து வந்துள்ளனர். இதனால் சபீஹா அந்த அறையில் உள்ள குளியல் அறையில் தண்ணீர் பிடித்து குடித்து உயிர் வாழ்ந்துள்ளார்.
சபீஹா பல நாட்களாக வெளியே வராமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சபீஹாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சபீஹாவின் பெற்றோர் இதுகுறித்து பலமனேர் காவல்துறையில் புகார் அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.