அம்மன் சக்தி தெரியல அவனுக்கு.. கோவில் உண்டியலில் கையை விட்டுவிட்டு விடிய விடிய தவித்த திருடன்

அம்மன் சக்தி தெரியாமல் கோவில் உண்டியலில் கையை விட்டுவிட்டு விடிய விடிய தவித்த திருடனால் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பானது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி கிராமத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருட ஒரு திருடன் வந்தான்.

அப்போது அவன் உண்டியலின் உள்ளே கையை நுழைத்து பணம் எடுக்க முயற்சித்தான். அதில், அவனுடைய கை உண்டியலில் சிக்கி கொண்டது. அதன்பின்னர் அந்த திருடன் கையை வெளியே எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. அவன் விடிய, விடிய கோவில் வளாகத்திலேயே இருந்து உள்ளன. நேற்று காலை அந்த வழியாக கிராம மக்கள் சென்றனர். அப்போது கோவில் உண்டியலில் திருட முயன்ற திருடனின் கை சிக்கி கொண்டதை பார்த்தனர்.

இதுகுறித்து, அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து வந்து அந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினர். அதில் அவன், சேசம்பட்டி அருகே உள்ள சவுளூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பதும், உண்டியலில் பணத்தை திருட முயற்சித்து கை சிக்கி கொண்டதும் தெரியவந்தது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உண்டியலை உடைத்து திருடனின் கை எடுத்தனர்.

இதையடுத்து தங்கராஜை அதியமான்கோட்டை காவல்துறை கைது செய்தனர். கைதான அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர். பெரியாண்டிச்சி அம்மன் சக்தி தெரியாமல் கோவிலில் உண்டியலில் பணத்தை திருட முயன்றபோது கை சிக்கி கொள்ள விடிய, விடிய, தவிக்க வைத்தால் அம்மன் என பக்தர்கள் பரபரப்பாக பை பேசினார்.

உண்டியல் காணிக்கை பணத்தை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்..!

திருவள்ளூர் மாவட்டம்,பள்ளிப்பட்டு அருகே பெருமாநல்லூர் கிராமத்தில் ஓசூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணத்தை எடுப்பதற்காக அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்ட ஆய்வாளர்கள் கலைவாணர் மற்றும் உஷா ஆகியோர் காவல்துறை பாதுகாப்புடன் அங்கு சென்றனர். ஆனால் அவர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு இந்த உண்டியல் பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என தடுத்தனர்.

தங்கள் கோவிலுக்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் ரூ.12 லட்சம் செலவில் நடத்தியதாகவும் இந்த பணத்தை கொடுத்துவிட்டு நீங்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். சுமார் 5 மணி நேரம் கிராம மக்களுடன் காவல்துறையினரும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உண்டியல் காணிக்கை பணத்தை எடுக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.