பாசிட்டிவ் பே சிஸ்டம் இல்லை என்றால் நீங்கள் கொடுக்கும் செக் செல்லாமல் போகலாம்…

உலகம் முழுவதும் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகமாக இருந்தாலும் காசோலை வழங்கும் பழக்கமும் ஓரளவு நடைமுறையில் இருந்து கொண்டுள்ளது. இந்நிலையில், காசோலை வழங்குவதற்கு சில நிபந்தனைகள் இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 1) முதல் காசோலை பயன்படுத்துபவர்களுக்கு பாசிட்டிவ் பே சிஸ்டம் என்ற முறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரையின்படி கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் பாசிட்டிவ் பே சிஸ்டத்தை கடைபிடிக்க வேண்டும் என தங்களது வாடிக்கையாளர்களுக்குஅறிவுறுத்தியுள்ளதோடு, பாசிட்டிவ் பே சிஸ்டத்தை கடைபிடிக்கவில்லை என்றால் காசோலை செல்லாமல் போகும் என்றும் கூறி வருகின்றன. பாசிட்டிவ் பே சிஸ்டம் என்பது வங்கிகளில் ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள காசோலைகளுக்கு பாசிட்டிவ் பே சிஸ்டம் முறையை பின்பற்றுமாறு இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை பின்பற்றப்படாவிட்டால், அத்தகைய காசோலைகளின் அனுமதியை வங்கிகள் மறுக்க அனுமதிக்கப்படும் என தெரிய வருகிறது. பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உட்பட ஒருசில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பாசிட்டிவ் பே சிஸ்டம் முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

பாசிட்டிவ் பே சிஸ்டம் என்பது பெரிய தொகைகள் கொண்ட காசோலைகளின் முக்கிய விவரங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் செயல்முறையை உள்ளடக்கியது. இந்த செயல்முறையின் கீழ், காசோலை வழங்குபவர் மின்னணு முறையில், குறுஞ்செய்தி, மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் போன்றவற்றின் மூலம், சில குறைந்தபட்ச விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதை மின்னஞ்சல், மொபைல் பேங்கிங் ஆப் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் மின்னணு முறையில் சமர்ப்பிக்கலாம்.

அந்த காசோலை (தேதி, பயனாளியின் பெயர்/பணம் பெறுபவரின் பெயர், தொகை போன்றவை) பெறுபவரின் வங்கிக்கு, அதன் விவரங்கள் CTS ஆல் வழங்கப்பட்ட காசோலையுடன் சரிபார்க்கப்படும். காசோலை கொடுத்த நபர் தந்த விவரங்கள் பொருந்தினால் மட்டுமே காசோலை பெற்றவரின் வங்கி கணக்கிற்கு காசோலையில் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இல்லையெனில், காசோலை செலுத்தப்படாமல் திருப்பித் தரப்படும்.

50,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகள் கொடுப்பவர்கள் பாசிட்டிவ் பே சிஸ்டம் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், அது கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் ரூ. 5,00,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகளுக்கு பாசிட்டிவ் பே சிஸ்டம் கட்டாயம் என வங்கிகள் அறிவித்துள்ளன.

வங்கி கணக்கு எண்:

காசோலை எண்
காசோலை தேதி
காசோலையில் குறிப்பிட்ட தொகை
பரிவர்த்தனை குறியீடு
காசோலை பெறுபவரின் பெயர்
MICR குறியீடு என்பது உள்ளடங்கும் என தெரியவருகிறது.

முதோல் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: இனி பணம் போடாவோ., பணம் எடுக்கவோ முடியாது.,

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பல வங்கிகள் விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்வதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கான தங்களது உரிமைகளை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது முதோல் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதனால் இந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் பணம் எடுக்கவோ மற்றும் பணம் போடவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியானது இந்தியாவில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்து அதன் நிதி நிலை சரியில்லாத வங்கிகளை தொடர்ந்து செயல்படுவதற்கு தடை விதித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள முதோல் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வங்கியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த வங்கியிடம் தற்போது போதிய மூலதனம் இல்லை என்றும் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் சுத்தமாக இல்லை என்றும் முடிவு செய்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் இந்த வங்கியின் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபாசிட்டை திருப்பிச் செலுத்துவதற்கும் புதிய டெபாசிட் பணத்தை பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் புதிதாக பணம் போடவோ அல்லது தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு 99 சதவீத முழுத் தொகையையும் டெபாசிட் மற்றும் கடன் உத்தரவாத நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவாதம் அளித்துள்ளது. இதனால் இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.