என்னதான் கல்வி திட்டம்..? எதற்காக படிக்கின்றார்கள் என்று அரசுக்கும் தெரியாது.... எதற்காக படிக்க வைக்கின்றோம் என்று படிக்க வைப்பவர்களுக்கு தெரியாது .... எதற்காக படிக்கின்றோம் என்று படிப்பவர்களுக்கும் தெரியாது.... ஒருவழியாக இது படித்தால் வேலை கிடைக்கும், அது படித்தால் வேலை கிடைக்கும் என்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எதை எதையோ ... குருட்டு வாக்காக படித்துவிட்டு வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதித்து திரும்பி கட்டிவிடலாம் என்ற ஏக்கத்தில் அண்டா, குண்டா , தெரிந்தவர் தெரியாதவர் என்று வட்டிக்கு கடன் வாங்கி படிப்பவர்கள் பலர்.ஆனால் படித்து வேலை தேடினால் படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலை. சரி இந்த வேலையாவது செய்து படிப்பிற்காக பட்டக் கடனை அடைக்கலம் அதற்குள் ஆன்லைனில் வேலை... வீட்டிலிருந்தே பல லட்சம் சம்பாதிக்கலாம்’ என்ற ஆசை வார்த்தைகளைக்காட்டி மோசடி செய்த கும்பல் நாடெங்கும் சுற்றி வருகின்றது. இவர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகும் மக்கள் ஏராளம்.சேலம், தாதகாப்பட்டியைச் சேர்ந்த கோதை என்பவருக்கு கடந்த ஆண்டு வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வர, அதை நம்பி, அதிலிருந்த லிங்கை கோதை பதிவிறக்கம் செய்து இதில் ஒரு வங்கிக் கணக்குக்குப் பணம் செலுத்தினால் வேலை வழங்கப்படும் என்று நம்பி ஏமாந்தார் என்பது கடந்தகாலம்.வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பகுதி நேர வேலை மற்றும் அதிக சம்பளம் என்று கூறி செய்தியை அனுப்புகின்றனர். அதை நம்பும் இன்றைய தலைமுறையினர் ஏமாற்றப்படுவது வாடிக்கையான ஒன்றாக தொடர்கின்றது. சமீபத்தில் புனேவில் இருந்து இரண்டு வெவ்வேறு நபர்கள் பகுதி நேர வேலை மோசடியில் விழுந்து மொத்தம் ரூ 33 லட்சத்திற்கும் அதிகமாக இழந்துள்ளனர்.ஆன்லைன் பணிகளைச் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற போலி வாக்குறுதியின் பேரில் ஒரு பெண் மருத்துவராகப் பணிபுரியும் ஒருவர், மார்ச் 28 முதல் ஏப்ரல் 22 வரை சைபர் குற்றவாளிகளிடம் ரூ.23.83 லட்சம் பணத்தை இழந்தார்.பெண் மருத்துவருக்கு யூ டியூப் வீடியோக்களில் உள்ள 'லைக்' பட்டனை கிளிக் செய்வது போன்ற எளிய பணிகளை வழங்கினர். இந்த பணிகளை முடித்ததற்காக ஊதியமாக ரூ.10,275 பெற்றுள்ளார். அதன்பின்னர், அவர்களின் கிரிப்டோகரன்சி திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று மோசடி நபர்கள் உறுதியளிக்க அந்த பெண் மருத்துவர் எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில், பணத்தை டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டு, இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.23.83 லட்சத்தை மாற்றினார்.பெண் மருத்துவர் தனது கிரிப்டோகரன்சி முதலீட்டை திரும்பப் பெற முடிவு செய்தபோது, மோசடி செய்பவர்கள் கூடுதலாக ரூ.30 லட்சம் கேட்டுள்ளனர், அனால், அவர் பணம் செலுத்த மறுக்க... அதன்பின்னர், மோசடி செய்பவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.. அதன்பிறகே, தான் ஆன்லைன் மோசடியில் சிக்கியதை உணர்ந்தார்.இதே போல் புனேவில் உள்ள தெர்கானைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், 'யூ டியூப் வீடியோவுக்கு லைக் செய்தால் ஒரு லைக்கிற்கு ரூ.50 சம்பாதிக்கலாம் என்றும், ஒரு நாளைக்கு ரூ.5,000 வழங்குவதாக வந்த செய்தி மற்றும் ப்ரீபெய்டு பணிகளில் முதலீடு செய்தால், 30 சதவீதம் லாபம் ஈட்டலாம் என்றும் கூறப்பட்டது. அதிக பணம் சம்பாதிக்கும் என்ற ஆசையில் அந்த நபர் வழிமுறைகளைப் பின்பற்றி, சில மணிநேரங்களில் 500 ரூபாய் சம்பாதித்தார்.பின்னர் பொறியாளருக்கு ஒரு இணைப்பு அனுப்பப்பட்டு, அந்த இணைப்பு வழியாக வீடியோக்களை விரும்புமாறு கூறப்பட்டது. அவர்களை நம்பி, பொறியாளர் அவருக்கு வழங்கப்பட்ட UPI ஐடிக்கு ரூ.12,000 பரிமாற்றம் செய்தார். அவர் ரூ.16,000 சம்பாதித்தார். அவர் ஏப்ரல் 14 அன்று மூன்று பரிவர்த்தனைகள் மூலம் ரூ.5 லட்சத்தை அனுப்பினார். பின்னர், தனது பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், மேலும் பணம் அனுப்ப வேண்டும் என்று மோசடி நபர்கள் கூறினர். தனது பணத்தை மீட்பதற்கான நம்பிக்கையில், பாதிக்கப்பட்டவர் ஏப்ரல் 19 ஆம் தேதி புதிய குழுவில் சேர்ந்து, ஏப்ரல் 20 ஆம் தேதி 7பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 3.96 லட்சத்தை மாற்றினார். மொத்தம் ரூ.8.96 லட்சத்தை மோசடி செய்தவர்களிடம் இழந்தார் என்பது வேதனையான விஷயம்.
என்று தெரிவித்துள்ளனர்.இந்த 2 சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மோசடி செய்பவர்களால் தொடர்பு கொள்ளப்பட்டனர். அனைத்து தகவல்தொடர்புகளும் மெசேஜிங் செயலிகள் மூலம் செய்யப்பட்டன. இந்த மோசடி வேகமாக அதிகரித்து வருகிறது. சைபர் மோசடி மூலம் சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கான பணத்தை திருடி வருகின்றனர். எனவே மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.