வானதி சீனிவாசன்: “நூற்றுக்கணக்கான கொடிகளை தமிழகம் பார்த்துள்ளது..!”

கோயம்புத்தூர் சூலூரிலுள்ள RVS கலை அறிவியல் கல்லூரி தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்றது. கைத்தறி ஆடைகளை அணிந்தபடி மாணவ, மாணவிகள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் மற்றும் நடிகை நமீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். முன்னதாக இருவரும் மாணவ, மாணவிகளுடன் இணைந்து ஆடை அணிவகுப்பில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “கைத்தறி நெசவு குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 7-வது ஆண்டாக கைத்தறி நெசவு ஆடை அணிவகுப்பு போட்டிகளை நடத்தியுள்ளோம். கைத்தறி நெசவாளர்களை ஆதரிக்க வேண்டும், கைத்தறி நெசவு உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆண்டுதோறும் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகளில் பங்கேற்கும் மாணவ – மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள். தமிழகம் இதுபோன்ற நூற்றுக்கணக்கான கொடிகளையும், தலைவர்களையும் பார்த்துள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.