1,315 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமரேசன் மற்றும் சிலர், தாங்கள் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றனர். பாலகுமரேசன் முப்பிலிவெட்டி பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மனைவி சண்முகலட்சுமிடம் தாங்கள் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால் நல்ல சம்பளத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சண்முகலட்சுமி ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார்.
ஆனால் அரசு பள்ளி ஆசிரியர் வேலையை வாங்கித் தராமல் இழுத்தடித்து உள்ளனர். இதனால் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கயவன் கைகளில் சிக்கி கொண்டதே என்று பதறிய சண்முகலட்சுமி தொண்டு நிறுவனத்தின் மீது தூத்துக்குடி குற்றப் பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி குற்றப் பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டது . இந்த விசாரணையில், பாலகுமரேசன் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் 1,315 பேரிடம் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மொத்தம் ரூ.36 கோடியே 13 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பாலகுமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.