அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் உயிரிழப்பு..!

மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் மாடுபிடி இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு தமிழர் திருநாளை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் நேற்று காலை 6.30 மணி அளவில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுக்க, வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என 10 சுற்றுகள் நடத்தப்பட்டதில் 800-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதில் மாடுபிடி வீரர்கள் 31 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர், 19 பார்வையாளர்கள் காவலர்கள் 4, ரிப்போர்ட்டர் ஒருவர் என ஆகமொத்தம் 65 பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில், 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன் கலந்து கொண்டார். களத்தில் சீறிப்பாய்ந்த காளை ஒன்று நவீனின் மார்பில் முட்டியதில் பலத்த காயமடைந்த நவீனை, ரத்தக் காயங்களுடன் அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாடுபிடி வீரர் நவீன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி முதல் பரிசாக காரை தட்டி தூக்கிய கார்த்தி..!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி முதல் பரிசாக காரை தட்டி தூக்கிய மாடுபிடி வீரர் திருப்பரங்குன்றம் கார்த்தி. மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிகட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்தின மதுரை மாநகராட்சி சார்பில் 51.18 லட்ச ரூபாய் செலவில் வாடிவாசல் மாடுபிடி வீரர்களுக்கான முன்னேற்பாடுகள் காளைகளுக்கு முன்னேற்பாடுகள் என்று அனைத்தையும் டெண்டர் விடப்பட்டு பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டன.

இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வழக்கமாக சுத்து வாடிவாசல் இல்லாமல் ரயில் தண்டவாள அமைப்பில் நீளமான வாடிவாசல் அமைக்கப்பட்டது. மேலும் வாடிவாசல் தொடங்கி மாடு சேகரிக்கும் இடம் வரை 1.8 கிமீ தூரத்திற்கு 8 அடி உயரத்தில் இரும்பு கிராதி கொண்டு இரு அடுக்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி ஆன்லைன் மூலம் தகுதி சான்றிதழ் பெற்ற காளைகள் பதியப்பட்டு அதில் 1100 காளைகள் பங்கேற்க டோக்கன் ஆன் லைன் மூலம் வழங்கப்பட்டது.

அதே போல் மாடுபிடிவீர்கள் ஆன்லைன் மூலம் பதியப்பட்ட 900 பேருக்கு பங்கேற்க ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுக்க, வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என 10 சுற்றுகள் நடத்தப்பட்டதில் 800-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன . மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றுக்கு 50 பேர் என பேர் களமிறங்கினர். கால்நடை துறை சார்பில் கால்நடைத்துறை 21 மருத்துவர்கள் தலைமையில் 65 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதேபோல மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி இந்திரா தலைமையில் 75 மருத்துவ பணியாளர்கள் மாடுபிடி வீரர்கள் தகுதியை பரிசோதனை செய்த பின் களத்திற்கு அனுப்பினர். காயம் அடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிகிச்சை அளித்தனர். இதுவரை மாடுபிடி வீரர்கள் 31 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர், 19 பார்வையாளர்கள் காவலர்கள் 4, ரிப்போர்ட்டர் ஒருவர் என ஆகமொத்தம் 65 பேர் காயமடைந்துள்ளனர். மொத்த மாடு பிடி வீரர்களில் மருத்துவ பரிசோதனைக்கு வந்தவர்கள் 629 பேருக்கு அரசின் சார்பாக மொத்தமாக ரூ 1 கோடி insurance செய்யப்பட்டு இருந்தது.

மேலும் மதுரை மாநகராட்சி சார்பில் நடமாடும் கழிவறை, குடிநீர் வசதி காளைகளுக்கு உணவு, நீர் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் 2 இடங்களில் எல்இடி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்திக்கு முதல் பரிசாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும், 15 காளைகளை அடக்கிய குன்னத்தூர் அரவிந்திற்கு இரண்டாவது பரிசாக பைக் மற்றும் கன்று , 13 காளைகளை அடக்கிய திருப்புவனத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முரளிதரன் மூன்றாவது பரிசாக பைக் மற்றும் கன்று வழங்கப்பட்டது.

மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மலையாண்டி சிறந்த காளைக்கு யாக முதல் பரிசாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் டிராக்டர், மேயர் சார்பில் கன்றுடன் கூடிய பசுமாடு வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு ரொக்கம், தங்க காசு, பேன், கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.