3 வயதில் ஆசிட் தாக்குதலில் பார்வையிழந்த மாணவி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை!

3 வயதில் கஃபி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பார்வையை இழந்த மாணவி 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது பள்ளியில் முதலிடம் பிடித்து கஃபி அசத்தியுள்ளார். அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புதானா கிராமத்தை சேர்ந்த கஃபி (Kafi). என்ற மாணவி 2011 -ஆம் ஆண்டு தனது மூன்று வயதில் கஃபி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பார்வையை இழந்தார். மூன்று வயதில் இருந்தே பல்வேறு சிரமங்களை சந்தித்த கஃபி சண்டிகரில் செக்டார் 26 இல் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் ஆடியோ புக்குகள் மூலம் கஃபி பயின்று வந்தார்.

இந்நிலையில் நடந்து முடிந்த 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது பள்ளியில் முதலிடம் பிடித்து கஃபி அசத்தியுள்ளார்.  கஃபி டெல்லி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் ஊடகத்துக்குப் பேட்டியளித்த கஃபி, 3 அண்டை வீட்டார் தன் மீது அமிலத்தை ஊற்றினார்கள்.

ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிக்சையால் தான் உயிருடன் இருப்பதாகவும், உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களால் என் பார்வையைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் ஆசிட் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. தன்னை கொடூரமாக நடத்தியவர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதி முடித்த கஃபி சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்து இருக்கிறேன். மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது எனது கனவு என கஃபி தெரிவித்தார்.

குருகிராமில் மசூதிக்கு தீ: அரியானா வன்முறை பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

அரியானாவில் நூஹ் மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நேற்றுமுன்தினம் புனிதநீர் எடுத்து வந்த யாத்திரையை மற்றொரு சமூகத்தினர் தடுத்து நிறுத்த முயன்றதில் வன்முறை வெடித்தது. இதில், 120 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறையினரின் 8 கார்கள் உள்பட 50 வாகனங்கள் மற்றும் கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 காவல்துறையினர் உள்பட 4 பேர் மற்றும் குருகிராம் பகுதி மசூதிக்கு தீ வைத்ததில் 19 வயதான துணை இமாம் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 காவலர்கள் உள்பட மொத்தம் 80 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நூஹ் மாவட்டத்தில் வன்முறையினால் பாதித்த பகுதியை மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நூஹ்வில் நிலைமை இன்னும் சீராகவில்லை. பதற்றம் நீடிக்கிறது. இரு சமூகத்தினரும் அமைதியாக வாழ்ந்து வந்தனர். இந்த அமைதியை சீர்குலைக்கவே இந்த வன்முறை சம்பவம் திட்டமிடப்பட்டுள்ளது. 20 கம்பெனி அதி விரைவு படையை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது,’’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, உள்துறை அமைச்சர் அனில் விஜ், முதன்மை செயலர், அரசு மற்றும் டிஜிபி, ஏடிஜிபி காவல்துறை மூத்த அதிகாரிகள் உடன் வன்முறை பாதித்த நூஹ் நிலைமை குறித்து முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, “இந்த வன்முறை மிகப் பெரிய சதி திட்டம் போல் தோன்றுகிறது. யார் குற்றவாளியாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் கலவரத்தை தூண்ட சதி நடந்துள்ளது. இந்த வன்முறை தொடர்பாக 44 எப்ஐஆர் பதியப்பட்டு 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,’’ என்று தெரிவித்தார். இதற்கிடையே, நேற்று குருகிராமில் உள்ள அஞ்சுமன் ஜமா மசூதிக்கு 60 பேர் கொண்ட வன்முறை கும்பல் தீ வைத்ததில் மசூதியின் துணை இமாம் மவுலானா சாத், உயிரிழந்தது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.