Bhagwant Mann: கெஜ்ரிவால் கைதை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு ..!

நாட்டின் தலைநகரம் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ஆம் தேதி டெல்லி அரசால் கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. 2022 -ஆம் ஆண்டு ஜூலை 31 புகார் எழுந்ததையடுத்து கலால் கொள்கை டெல்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.

இந்த கலால் கொள்கைக்கு ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

அமலாக்கத் துறையின் விசாரணையை அடுத்து அவரை வரும் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இது பாஜவின் அரசியல் பழி வாங்கும் செயல் என குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி, இந்தியா கூட்டணி கட்சியினர், கெஜ்ரிவால் கைதை கண்டித்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரும் போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் ஷஹீத் பகத் சிங் நகர் மாவட்டம் கட்கர் கலனில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்க ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது.

அமைச்சர் அதிஷி மர்லினா பரபரப்பான குற்றச்சாட்டு: பாஜகவில் சேருமாறு தன்னை மிரட்டுகிறார்கள்..!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜகவில் சேருமாறு தன்னை மிரட்டியதாக டெல்லி அமைச்சர் அதிஷி மர்லினா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அதிஷி மர்லினா, பாஜகவில் சேருங்கள்; இல்லாவிடில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்கொள்ள தயாராகுங்கள் என தன்னை அச்சுறுத்தியதாக புகார் அளித்துள்ளார். அரசியல் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜகவில் இணைய வேண்டும். பாஜகவில் சேராவிடில் அடுத்த மாதமே அமலாக்கத்துறை தன்னை கைது செய்யும் என பாஜக மிரட்டியதாக அதிஷி மர்லினாபுகார் தெரிவித்திருக்கிறார்.

தனது நெருங்கிய நண்பரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், பாஜகவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்றும் அதிஷி மர்லினா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அதிஷி மர்லினா, மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கத்துறையால் நான், சவுரவ் பரத்வாஜ், துர்கேஷ் பாடக், ராகவ் சட்டாவை கைது செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளது.

அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் சௌரவ் பரத்வாஜ் மற்றும் என்னை கொண்டு வந்துள்ளனர். கெஜ்ரிவால், சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் இருந்தும் ஆம் ஆத்மி ஒற்றுமையாக வலுவாக இருப்பதாக பாஜக உணர்கிறது. தற்போது ஆம் ஆத்மியின் அடுத்தகட்ட தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர் என அதிஷி மர்லினா தெரிவித்தார்.

சுனிதா கேஜ்ரிவால் சூளுரை: “சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் அடைக்க முடியாது..!”

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணிக் கட்சியினர் சார்பில் மெகா பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பேசிய கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், “பிரதமர் மோடி எனது கணவரை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார். கேஜ்ரிவால் ஓர் உண்மையான தேசபக்தர். அவர் நேர்மையானவர். ஆனால் பாஜகவினர் கேஜ்ரிவால் சிறையில் இருப்பதால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.

கேஜ்ரிவால் ஒரு சிங்கம். அந்தச் சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது. இந்தத் தருணத்தில் நான் கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தை வாசித்துக் காட்ட விரும்புகிறேன்” எனக் கூறி அந்தக் கடிதத்தையும் வாசித்துக் காட்டினார். புதிய இந்தியாவை உருவாக்குவோம்.. கேஜ்ரிவால் அனுப்பியுள்ள அக்கடிதத்தில், “நாங்கள் உங்களிடம் இன்று வாக்கு கேட்கவில்லை. மாறாக 140 கோடி இந்தியர்களும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்குமாறு கேட்கிறேன்.

இந்தியா பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகப்பெரிய தேசம். இந்தச் சிறையினுள் இருந்துகொண்டு நான் எப்போதும் பாரத மாதாவை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நாம் அனைவரும் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார் என கடிதத்தில் இருந்ததை சுனிதா கேஜ்ரிவால் வாசித்துக் காட்டினார்.

அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசம்: உண்மையில் 100 கோடி ஊழல் நடந்தால், பணம் எங்கே..!?

நாட்டின் தலைநகரம் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ஆம் தேதி டெல்லி அரசால் கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. 2022 -ஆம் ஆண்டு ஜூலை 31 புகார் எழுந்ததையடுத்து கலால் கொள்கை டெல்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.

இந்த கலால் கொள்கைக்கு ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று அரவிந்த் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டார். அப்போது, “ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத் துறை அழிக்கப் பார்க்கிறது. நான் கைது செய்யப்பட்டுள்ளேன். ஆனால், எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளியாக சொல்லவில்லை. மேலும், ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக சொல்லப்பட்டதில் கொஞ்சம் கூட மீட்கவில்லை. உண்மையில் 100 கோடி ஊழல் நடந்தால், பணம் எங்கே?.

சிபிஐ 31,000 பக்கங்கள், அமலாக்கத் துறை 21,000 பக்கங்கள் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளன. இந்த இரண்டையும் ஒன்றாக படித்தால் கூட எஞ்சி நிற்கும் கேள்வி, நான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்பதே? ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் என் பெயர் நான்கு முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது.

அதிலும் ஒரு முறை ‘சி அரவிந்த்’ என்று இருந்தது. இந்த சி அரவிந்த் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் செயலாளராக இருந்தார். அவர் முன்னிலையில் சிசோடியாஜி என்னிடம் சில ஆவணங்களைக் கொடுத்தார் என்று குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ளது. கோப்புகளை கொடுக்க, அரசு குறித்து விவாதிப்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் தினமும் என் வீட்டுக்கு வந்தனர். பதவியில் இருக்கும் முதலமைச்சரைக் கைது செய்ய இப்படி ஓர் அறிக்கை போதுமா?

இந்த வழக்கில் இதற்கு முன் கைது செய்யப்பட்டு அப்ரூவராக மாறியவர்கள் என் மீது குற்றம்சாட்ட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அமலாக்கத் துறைக்கு ஒரே ஒரு பணி மட்டுமே, அது எப்படியாவது என்னை சிக்க வைக்க வேண்டும் என்பதே. இந்த வழக்கில் நான்கு சாட்சிகளால் நான்கு முறை என் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய 4 சாட்சிகள் போதுமானதா? இந்த வழக்கின் ஒரு சாட்சி என் பெயரை குறிப்பிடாத ஆறு அறிக்கைகளை அளித்திருந்தார். ஆனால் ஏழாவது அறிக்கையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அதேபோல் மூன்றாவது சாட்சியான சரத் ரெட்டி கைது செய்யப்பட்ட பிறகு அவர் பாஜகவுக்கு ரூ.50 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

இதேபோல் அரவிந்த் கேஜ்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், “அமலாக்கத் துறையானது பாரதிய ஜனதா கட்சியால் எதிர்க்கட்சிகளை குறிவைக்க பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகளை மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆம் ஆத்மி கட்சி ஊழலற்றது என்பது தேசத்தின் முன் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொள்ளத் தயார். நீங்கள் விரும்பும் வரை என்னை ரிமாண்டில் வைத்திருக்கலாம். விசாரணைக்கு நான் தயார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு, “அரவிந்த் கேஜ்ரிவால் நாடகம் ஆடுகிறார். அமலாக்கத் துறையிடம் எத்தனை ஆவணங்கள் உள்ளன என்பது அவருக்கு எப்படித் தெரியும்? அவர் சொல்பவை அனைத்தும் அவரது கற்பனையே. கோவா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் மூலம் பெறப்பட்ட பணம் பரிசாக கிடைத்துள்ளது. ஹவாலா மூலம் பணம் வந்ததற்கான அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.

அரவிந்த் கேஜ்ரிவால் ரூ.100 கோடிக்கான பரிசுகளை கேட்டார் என்பதைக் காட்ட எங்களிடம் ஆதாரங்கள் உள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். மழுப்பலாக பதிலளித்து வருகிறார். மேலும், தனது டிஜிட்டல் சாதனங்களின் கடவுச்சொற்களை தரவும் மறுக்கிறார்” என்று வாதிட்டார். இந்த வாதங்களுக்கு பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவலை மேலும் நான்கு நாட்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுனிதா கேஜ்ரிவால் திட்டவட்டம் என் கணவர் நாளை நீதிமன்றத்தில் ஆதாரங்களோடு உண்மையை வெளியிடுவார்”

நாட்டின் தலைநகரம் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ஆம் தேதி டெல்லி அரசால் கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. 2022 -ஆம் ஆண்டு ஜூலை 31 புகார் எழுந்ததையடுத்து கலால் கொள்கை டெல்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.

இந்த கலால் கொள்கைக்கு ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன.

இதன் விளைவாக செப்டம்பர் 22 -ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் விஜய் நாயர் சி.பி.ஐ மூலம் கைது செய்யப்பட்டார், அவரை தொடர்ந்து அக்டோபர் 17 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. 8 மணி நேரம் விசாரணை நடத்தி, நவம்பர் 25 -ஆம் தேதி 7 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 18 -ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிக்கு சம்மன் அனுப்பி 26 -ஆம் தேதி கைது செய்தது. 28 -ஆம் தேதி துணை முதல்வர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார்.

மேலும் அக்டோபர் 4ஆம் தேதி ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்கின் வீடு மற்றும் அவருக்கு நெருங்கியவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தொடர்ந்து கடந்த 16 -ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கவிதாவின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலை சுனிதா கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை மாலை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சந்தித்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சுனிதா கேஜ்ரிவால் பேசுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு, அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியின் தண்ணீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். மத்திய அரசு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்கள் டெல்லியை அழிக்க நினைக்கிறார்களா? மக்கள் தொடர்ந்து துன்பத்தில் தவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா என்ன?. இந்த வழக்கால் அரிவிந்த் கேஜ்ரிவால் மிகவும் வேதனை அடைந்துள்ளார்.

மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை சுமார் 250-க்கும் அதிமான சோதனைகளை நடத்தியுள்ளது. ஊழல் எனச் சொல்லி அவர்கள் பணத்தைத் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை. அரவிந்த் கேஜ்ரிவால் மார்ச் 28-ம் தேதி நீதிமன்றத்தில் அனைத்தையும் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்தார். மதுபான ஊழல் வழக்கின் பணம் எங்கே சென்றது என்பதைத் தெரிவிப்பார். அனைத்து ஆதாரங்களையும் அளிப்பார்” இவ்வாறு சுனிதா கேஜ்ரிவால் என பேசினார்.

ஆம் ஆத்மி கட்சி பிரதமர் வீடு முற்றுகை போராட்ட அறிவிப்பால் டெல்லியில் காவல்துறை பலத்த பாதுகாப்பு

நாட்டின் தலைநகரம் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ஆம் தேதி டெல்லி அரசால் கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. 2022 -ஆம் ஆண்டு ஜூலை 31 புகார் எழுந்ததையடுத்து கலால் கொள்கை டெல்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.

இந்த கலால் கொள்கைக்கு ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன.

இதன் விளைவாக செப்டம்பர் 22 -ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் விஜய் நாயர் சி.பி.ஐ மூலம் கைது செய்யப்பட்டார், அவரை தொடர்ந்து அக்டோபர் 17 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. 8 மணி நேரம் விசாரணை நடத்தி, நவம்பர் 25 -ஆம் தேதி 7 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 18 -ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிக்கு சம்மன் அனுப்பி 26 -ஆம் தேதி கைது செய்தது. 28 -ஆம் தேதி துணை முதல்வர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார் .

மேலும் அக்டோபர் 4ஆம் தேதி ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்கின் வீடு மற்றும் அவருக்கு நெருங்கியவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தொடர்ந்து கடந்த 16 -ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கவிதாவின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. இதனை தொடர்ந்து தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் இன்று பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து இருந்தனர். ஆகையால் டெல்லி காவல்துறை பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளனர்.

அமலாக்கத் துறை அதிரடி: “அரவிந்த் கேஜ்ரிவால் கைதாக வாய்ப்பா..!?”

டெல்லி ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 3 முறை சம்மன் அனுப்பிய நிலையிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் இன்று அவர் கைது செய்யப்படலாம் என்று அக்கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக புதன் பின்னிரவில் எக்ஸ் சமூகவலைதளத்தில் கருத்திட்ட டெல்லி சட்டம், பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி, “நாளை (வியாழன்) காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் டெல்லி சுகாதார அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் நேற்றிரவு 11.52 மணிக்கு பதிவு செய்த ட்வீட்டில், “நாளை (வியாழன்) காலை முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்துகிறது. கைது செய்யப்பட வாய்ப்பு” என்று பதிவிட்டுள்ளார்.

இதுபோல் அக்கட்சிப் பிரமுகர்கள் பலரும் இதே அச்சத்தை வெளிப்படுத்தி சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டின் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சாலைகள் காவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது. மற்றொருபுறம் ஆம் ஆத்மி அலுவலகம் முன் கட்சித் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

அரவிந்த் கேஜ்ரிவால்: “வெறும் பேச்சுக்களால் மட்டும் இந்தியா உலகின் குருவாக மாறிட முடியாது..!”

77-வது சுதந்திர தின விழாவில் வடக்கு டெல்லியில் உள்ள சத்ரசால் மைதானத்தில் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டார். டெல்லி மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்த அவர், சுதந்திரப்போராட்ட வீரரகள், ராணுவ வீரர்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “நான் இன்று சற்று சோகமாக இருக்கிறேன். மணிப்பூர் எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களை கொல்கின்றனர். ஹரியாணாவிலும் ஒரு பிரிவைச் சேர்ந்த மக்கள், மற்றொரு பிரிவினருடன் சண்டையிடுகின்றனர்.

நமக்குள் நாம் சண்டையிட்டுக்கொண்டால் நம்மால் எப்படி விஸ்வகுருவாக மாற முடியும்? நாம் விஸ்வகுருவாகி, முதல் நாடாக மாறவேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒரு குடும்பம் போல வாழவேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் டெல்லி அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாட்டிலுள்ள அரசுப்பள்ளிகளின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்காத பட்சத்தில் நாடு விஸ்வகுருவாக மாறமுடியாது. ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டிலுள்ள 10 லட்சம் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும் என்று நான் கணக்கிட்டுள்ளேன்.

ஆண்டொன்றுக்கு ரூ.1.20 லட்சம் கோடி என்பது இந்தியா போன்ற நாட்டிக்கு பெரிய விஷயம் இல்லை. நாட்டிலுள்ள 17 கோடி குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க ரூ. 7.5 லட்சம் கோடி தேவைப்படும். தற்போது அனைத்து அரசுகளும் இந்தத் தொகையைச் செலவழித்து வருகின்றன என தெரிவித்தார்.