ரீல்ஸ் பார்த்தபடி பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்..! பயணிகளை காப்பாற்றிய தனியார் பேருந்து ஓட்டுநர்..!

திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த பேருந்தை, ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்தபடி இயக்கியது சமூக வலைதளங்களில் பரவல்.

ஒருபுறம் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் ஜாலியாக ஒரு கையில் ஸ்டீயரிங்.. மறு கையில் செல்போன்..! ரீல்ஸ் பார்த்தபடி பேருந்தை இயக்கிய அரசு ஓட்டுநர் மறுபுறம் காற்று பலமாக வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது ஓட்டுநர் மீது கண்ணாடி துண்டுகள் தலை, கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் பட்டு காயம் ஏற்பட்டும், பயணிகளின் உயிரை பாதுகாக்க தனக்கு ஏற்பட்ட படுகாயங்களை பொருட்படுத்தாமல் பேருந்தை லாவகமாக இயக்கி சாலையோரம் நிறுத்திய தனியார் ஓட்டுநர் இங்க என்ன நடக்குதுன்னு புரியல.

கில்லாடி நடத்துனர்.. அரசு பேருந்தில் நூதன பணமோசடி..!

ஓட்டுனராக சத்தியமூர்த்தி என்பவரும் நடத்துனராக நேரு என்பவரும் இருந்த அரசு குளிர்சாதன பேருந்து சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். னர். இந்த பேருந்து வடலூரில் பயணிகளை இறக்கி விடுவதற்காக நேற்று முன்தினம் நின்றது. அப்போது அங்கு வந்த சிதம்பரம் பணிமனையை சேர்ந்த பயணசீட்டு பரிசோதகர்கள், பேருந்தில் ஏறி பயணிகளிடம் பயணசிட்டை வாங்கி பரிசோதனை செய்தனர்.

அப்போது அந்த பயணசீட்டுகள் அனைத்தும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பயணசீட்டுகள் என்பதும், இதில் ஏதோ குளறுபடி நடந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பயணசீட்டு பரிசோதகர், பேருந்து நடத்துனர் நேருவிடம் விசாரணை நடத்தினார். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். இதனால் பயணிகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதால் பேருந்தை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பணிமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும் சேலம் பணிமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அங்குள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு அதிகாரிகள், நடத்துனர் நேருவிடம் விசாரணை நடத்திய போது, அவர் சேலத்தில் இருந்து ஏறிய பயணிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு பயணசீட்டு கொடுத்துள்ளார். பின்னர் பயணிகள் அவர்களின் ஊர்களில் இறங்கும் போது, அந்த பயணசீட்டை வாங்கி வைத்துக்கொண்டு அதே பயணசீட்டை மற்ற பயணிகளுக்கு கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. பயணிகள் செலுத்திய பயணசீட்டு தொகைக்கும், நடத்துனர் வைத்திருந்த தொகைக்கும் வித்தியாசம் வந்துள்ளது. இதையடுத்து நடத்துனர் நேருவை அதிகாரிகள் நேற்று பணியிடை நீக்கம் செய்தனர்.