நீதிபதிகள்: தமிழக ஆளுநர் – அரசு மோதலுக்கு சுமுக தீர்வு காணாவிட்டால் நீதிமன்றம் தலையிட நேரிடும்..!

தமிழக அரசுக்​கும், ஆளுநருக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்​தில் நீங்களே சுமுக தீர்வு காணா​விட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண் போம் என உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழக ஆளுநராக ஆர்.என்​.ரவி கடந்த 2021-ஆம் ஆண்டு நியமிக்​கப்​பட்​டத்தில் இருந்தே, தமிழக அரசுக்​கும், அவருக்​கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தி மொழி, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வரும் நிலை​யில், அதற்கு ஆதரவான கருத்துகளை ஆளுநர் ஆர்.என்​.ரவி தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

தமிழக அரசு தயாரித்து வழங்​கும் ஆளுநர் உரையை சட்டப்​பேர​வை​யில் வாசிக்​காமல், சில பகுதிகளை நீக்கியும், சேர்த்​தும் படித்து சர்ச்​சையை ஏற்படுத்​தினார். மேலும் அவை நிகழ்ச்​சிகளில் பங்கேற்​காமல் வெளியேறினார். தமிழகத்​தில் அரசு நிகழ்ச்​சிகளின் தொடக்​கத்​தில் தமிழ்த்​தாய் வாழ்த்​தும், நிறைவாக தேசிய கீதமும் பாடப்​பட்டு வரும் நிலை​யில், நிகழ்ச்​சி​யின் தொடக்​கத்​தி​லும் தேசிய கீதம் பாட வேண்​டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இதற்​கிடையே, சட்டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​படும் மசோதாக்கள் மற்றும் பல்வேறு திட்​டங்​களுக்கான அரசாணை​களுக்கு ஒப்புதல் அளிக்​காதது உள்ளிட்ட பிரச்​சினை​களுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்​.ரவிக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல, தமிழகத்​தில் உள்ள பல்கலைக்​கழகங்​களில் துணைவேந்​தர்களை நியமிக்​கும் விவகாரம் தொடர்பாக​வும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்​துள்ளது. உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் ஜே.பி.பர்​திவாலா, ஆர்.ம​காதேவன் அமர்​வில் இந்த வழக்​குகள் நேற்று விசா​ரணைக்கு வந்தன.

அப்போது, மத்திய அரசு தரப்​பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்​கடரமணி,ஆளுநருக்கு எதிரான வழக்​குகளை ஒரு வாரத்​துக்கு தள்ளிவைக்க வேண்​டும். ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரங்​களில் தீர்வு காணப்​பட்​டுள்ளதா, அல்லது பழைய நிலையே தொடர்​கிறதா? தமிழக அரசு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்கள் பி.வில்​சன், அபிஷேக் சிங்வி, ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு தொடர்​கதை​யாகவே உள்ளது. இன்னும் முடிவுக்கு வரவில்லை.

தற்போதுகூட துணைவேந்​தர்கள் நியமனத்​தில் பிரச்​சினை எழுந்​துள்ளது. தமிழக அரசின் அனைத்து அதிகாரங்​களி​லும் ஆளுநர் தலையிடு​கிறார். இதில் உச்ச நீதி​மன்றம் தலையிட்ட பிறகும், அவரது போக்​கில் முன்னேற்றம் இல்லை. துணைவேந்​தர்கள் நியமனம் தொடர்பான கூடுதல் மனுவை​யும் இந்த வழக்​குடன் சேர்த்து விசா​ரித்து, ஆளுநர் தரப்​பில் பதில் அளிக்க நோட்​டீஸ் பிறப்​பிக்க வேண்​டும். இவ்வாறு வாதம் நடந்​தது.

இதையடுத்து நீதிப​தி​கள், ‘‘தமிழக அரசின் இந்த கூடுதல் மனுவுக்கு தனியாக நோட்​டீஸ் பிறப்​பிக்க வேண்​டியது இல்லை. இந்த வழக்​கோடு சேர்த்து விசா​ரிக்​கப்​படும். மேலும், ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்​தில் நீங்களே சுமுக தீர்வு காணா​விட்​டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண்​போம்’’ என ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் அறிவுறுத்தி விசா​ரணையை அடுத்த வாரத்​துக்கு தள்ளி​வைத்​தனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த ஆயுதப்படை காவலர் கைது..!

வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட கடலூர் ஆயுதப்படை காவலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த சம்பத் வழுதரெட்டியைச் சேர்ந்த கடலூர் ஆயுதப்படை முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பாண்டியன் என்பவரிடம் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் பாண்டியன் தனக்கு அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நல்ல பழக்கம் உள்ளதால் யாருக்காவது அரசு வேலை கேட்டால் சொல்லுமாறு சம்பதிடம் தெரிவித்து இருந்தாராம். இதையடுத்து சம்பத் தனது மகன் ஞானவேல் BE முடித்துள்ளதாகவும் அவருக்கு அரசு வேலை கேட்டு பாண்டியனிடம் அணுகியுள்ளார்.

அப்போது, பாண்டியன் உங்கள் மகனுக்கு நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி மேலும் சில அரசு பணி நியமன உத்தரவுகளை காண்பித்தும், ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார். இதனை நம்பிய சம்பத் தெரிந்தவர், தெரியாதவர் என அங்கும் இங்கும் கடனை வாங்கி பாண்டியன் வங்கி கணக்கில் ரூ.4.50 லட்சம் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு பாண்டியன் வேலை வாங்கித் தராமல் இன்று, நாளை என இழுக்கடித்து உள்ளார்.

இதனால் மனம் நொந்துபோன சம்பத் வேலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை பணத்தையாவது திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் பணம் வரவில்லை ஆகையால் விழுப்புரம் குற்றப்பிரிவில் புகார் சம்பத் கொண்டார். இது குறித்து சம்பத் அளித்த புகாரின்பேரில் பாண்டியன் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

பொருட்கள் ஏற்ற கூடாது என சொல்லி பயணியை அடித்த அரசு பேருந்து நடத்துனர்.!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பொருட்கள் ஏற்ற கூடாது” என சொல்லி பயணியை அடித்த அரசு பேருந்து நடத்துனர்.!