Amba Prasad: அமலாக்கத்துறை விசாரணைக்கு முன் புத்தாண்டு திருவிழா முன்னிட்டு ’ஜியா ஹர்ஷயே’ என்ற காணொலியை வெளியிட்ட அம்பா பிரசாத்

ஐஏஎஸ் கனவுகளை உதறித் தள்ளிவிட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர் அம்பா பிரசாத் அரசியலுக்கு வந்தவர். பார்காகோ தொகுதியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வாக தேர்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில், அம்பா பிரசாத் மிரட்டி பணம் பறித்தல், மணல் கடத்தல், நிலஅபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

அம்பா பிரசாத் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த மாதம் நடத்திய சோதனையில் ரூ. 35 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத பணம், டிஜிட்டல் சாதனங்கள், போலி முத்திரைகள், கையால் எழுதப்பட்ட ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனிடையில், அம்பா பிரசாதிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். அதற்கு செல்வதற்கு சற்று முன்பு ஜார்க்கண்ட் மாநில புத்தாண்டு திருவிழா கொண்டாட்டத்தை ஒட்டி தானே ஆடி, பாடி பதிவு செய்த ’ஜியா ஹர்ஷயே’ என்ற வீடியோ பாடலை அம்பா பிரசாத் வெளியிட்டார்.