மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பயணித்த பயணிக்கு ரூ.200 அபராதம் Gpay செய்த பெண்..!

மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பயணித்த பயணிக்கு ரூ.200 அபராதம் Gpay செய்த பெண்..!

சென்னை மாநகராட்சி அறிவிப்பு: பொது இடங்களில் குப்பை கொட்டினால் இனி ரூ.5,000 அபராதம்..!

சென்னை மாநகராட்சி வெளியிட்டசெய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டுவது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாதது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டை மேம்படுத்தவும் கடந்த 5 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்த அபராத தொகை தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் தூக்கி எறியப்படும் குப்பை, வாகனங்களில் இருந்து குப்பை கொட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு அபராதம் ரூ.500-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல தனிநபர் இல்லங்களில் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் கழிவுகளுக்கு ரூ.100-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.5,000 ஆகவும் அபராதம் விதிக்கப்படஉள்ளது.

அங்கீகரிக்கப்படாத பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கும் கழிவுநீர் கால்வாய்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோருக்கும் தனியார் மற்றும் பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்போருக்கும் அபராத தொகை ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மரக்கழிவுகளை கொட்டினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

இதுதவிர மீன் வளர்ப்பு, இறைச்சி கழிவுகளை தரம் பிரிக்காமல் கொடுப்பவர்களுக்கு ரூ.5,000,கடை வியாபாரிகள், விற்பனையாளர்கள் குப்பை தொட்டி வைக்கவில்லை என்றால் ரூ.1,000, குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் பொது நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் 12 மணி நேரத்துக்குள் தூய்மைபடுத்தாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும்.

எனவே பொதுமக்கள் சென்னைமாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்களது வீடுகள், கடைகளில் குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பையை முறையாக மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். கட்டுமான கழிவுகளை அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் கொட்ட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

மாநகராட்சி ஆணையர் அதிரடி: கால்வாய்களில் குப்பை கொட்டியவர்களுக்கு 2 லட்சம் அபராதம்

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் நான்காவது மண்டலம் கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், ஜவகர் கால்வாய் மற்றும் இணைப்பு கால்வாய் ஆகிய கால்வாய்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனைத்தொடர்ந்து கால்வாய்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி, மாநகராட்சி ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து வடக்கு வட்டார துணை ஆணையர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழு நான்காவது மண்டல அலுவலர் தலைமையில் நேற்று கால்வாய்களை ஒட்டியுள்ள பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டது.

சோதனையில் கால்வாய்களில் குப்பை கொட்டிய வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுனங்கள் ஆகியவற்றிற்கு ரூ.2,05,000 அபராதம் விதிக்கப்பட்டது. கால்வாய்களில் குப்பைகளை கொட்டி நீர்நிலைகளின் ஒட்டத்திற்கு தடை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளர்.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் கஞ்சா கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மற்றும் அண்ணா பேருந்து நிலைய கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விழிப்புணர்வு பதாகைகளை விற்பனையாளர்களிடம் வழங்கி தெரிவிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகளவு இளைஞர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், போதைப்பொருட்களுக்கு அடிமையாகி சமூக சீர்கேடுகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள். வளரும் இளம் சமுதாயத்தினரை மீட்டு எடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

எனவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்திடும் வகையிலும், சமூக சீர்கேடுகளுக்கு ஆளாகமால் சமுக பொறுப்பாளர்களாக உருவாக்கிடும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக போதையில்லா கன்னியாகுமரி மாவட்டத்தினை உருவாக்கிட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் இணைந்த 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுக்கள் மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர பகுதிகளில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப்பொருட்களான பான்மசாலா, குட்கா, உதட்டிற்குள் வைக்கும் புகையிலை மற்றும் மெல்லும் வாய் புகையிலை முதலியன விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நவம்பர் 2023 முதல் செப்டம்பர் 2024 வரை 11 மாதங்கள் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்களான பான்மசாலா, குட்கா, மற்றும் மெல்லும் வாய் புகையிலை ஆகியவற்றை விற்பனை செய்த 304 உணவு வணிகர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் கடைகள் உரிமம் ரத்து செய்யப்பட்டு 15 நாட்கள் மூடி முத்திரையிடப்பட்டது. அதன் பின்னர் தலா ரூ.25000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ.42.65 லட்சம் வசூல் செய்யப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் காவல்துறை வாயிலாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் உணவு பாதுகாப்புத் துறையின் வாயிலாக முதல் முறையாக கண்டறியப்படும் கடைகளை 15 நாட்கள் மூடி முத்திரையிடப்படுவதோடு, ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையாக கண்டறியப்படும் கடைகளை 30 நாட்கள் மூடி முத்திரையிடப்படுவதோடு, ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். 3-வது முறையாக கண்டறியப்படும் கடைகளை 90 நாட்கள் மூடி முத்திரையிடப்படுவதுன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 3 முறைக்கு மேல் தவறு செய்பவர்கள் மீது காவல் துறை மூலம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்படும்.

சிறுவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா மற்றும் உதட்டிற்குள் வைக்கும் புகையிலை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் பொதுமக்கள் குழந்தைகள் உதவி எண் 1098-ல் புகார் அளிக்கலாம். இதுகுறித்த புகார்கள் இருந்தால் அதனை தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் புகார் எண் 9444042322 என்ற எண்ணுக்கும் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலக எண் 04652 276786 என்ற எண்ணிற்கும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.” என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்தார்.

பயணிகளிடம் கூடுதல் கட்டண வசூலித்த பேருந்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்..!

தருமபுரி – பாலக்கோடு வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் சிலவற்றில், பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார் சென்றது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி தலைமையிலான குழுவினர் 2-ம் தேதி பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி புறவழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரியிலிருந்து பாலக்கோடு நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். மேலும், பேருந்து பயணிகளிடம் பயண சீட்டை பெற்றும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைவிட ரூ.2 முதல் ரூ.5 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, அந்த பேருந்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க மோட்டார் வாகன ஆய்வாளர் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளார்.