மத்திய பிரதேசத்தில் ‘நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்’ என்ற பெயரில் நிலக்கரி சுரங்க நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச சிங்ராலி மாவட்டத்தில் இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர், முதன்மை விஜிலென்ஸ் அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. மொத்தம் 25 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.3.8 கோடி ரொக்கம் பறிமுதல் செய்து, இது தொடர்பாக 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளனர்.