Jammu and Kashmir assembly election 2024: ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 24 இடங்களுக்கு போட்டியிடும் 90 சுயேச்சைகள் உட்பட 219 வேட்பாளர்களின் தலைவிதியை 23 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தீர்மானிக்கவுள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் செப்டம்பர் 18 -ஆம் தேதி 24 தொகுதிகள் 25 -ஆம் தேதி 26 தொகுதிகள் மற்றும் அக்டோபர் 1 -ஆம் தேதி மீதமுள்ள 40 தொகுதிகள் என மொத்தமுள்ள 90 சட்டப் பேரவை உறுப்பினர்கலுக்கு 3 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற உள்ளன. மேலும் அக்டோபர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் படி, ஜம்முவில் உள்ள 3 மாவட்டங்களில் 8 சட்டமன்றத் தொகுதிககள் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் 4 மாவட்டங்களில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகள் என ஆகமொத்தம் 24 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் 90 சுயேச்சைகள் உட்பட 219 வேட்பாளர்களின் தலைவிதியை 23 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தீர்மானிக்கவுள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள முதற்கட்ட தேர்தலில் 23 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.