GST குறித்து கேள்வி கேட்ட பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து பாஜகவினர்..!

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் முருகானந்தம் அவர்களை ஆதரித்து பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, பிரச்சாரத்துக்கு வந்த பா.ஜ.க.வினரிடம் ஏராளமான பெண்கள் கேள்வி எழுப்பிய நிலையில், திருப்பூர் ஆத்துப்பாளையத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்த பா.ஜ.க.வினரிடம் சங்கீதா ஜி.எஸ்.டி. வரி குறித்து கேள்வி எழுப்பினார். ஆத்திரமடைந்த பா.ஜ.க. பிரமுகர் சின்னசாமி அந்த பெண்ணிடம் தரக்குறைவாக பேசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.