சிகாகோவில் மு.க. ஸ்டாலின்: ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள்..!

தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், “நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது” என்ற உணர்வை நம்பிக்கையை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்படுத்தி வருகிறது என்று அமெரிக்காவின் சிகாகோ நகரில், அமெரிக்க வாழ் தமிழர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

அமெரிக்க நாட்டின் சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “தமிழ்நாட்டில் நான் முதலமைச்சராக – திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், எப்படி இருக்குமோ, அதைவிட அதிகமான உணர்வுப்பெருக்கோடு சிகாகோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை எனக்கு ஏற்படுத்தியிருக்கும் உங்களுக்கு, உங்களில் ஒருவனாக – உங்கள் குடும்பங்களில் ஒருவனாக நான் எனது இதயபூர்வமான நன்றியை மீண்டும் மீண்டும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் சென்று அதற்குப் பிறகு, அமெரிக்காவுக்கு லேட்டாக வந்திருந்தாலும் லேட்டஸ்டாக வரவேற்பு கொடுத்திருக்கிறீர்கள்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசும்போது கூட சொன்னார், நான் எங்கள் பகுதிக்கு வர வேண்டும், எங்கள் ஊருக்கு வர வேண்டும் என்று ஒரு போட்டியே நடந்தது, அதில் சிகாகோ வெற்றி பெற்றுள்ளது. அப்படி வெற்றி பெற்றிருக்கக்கூடிய சிகாகோவிற்கு வந்து உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இதே சிகாகோவிற்கு நம்முடைய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமெரிக்க பயணத்தின்போது வந்திருக்கிறார். நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புதல் தந்த பிறகு தலைவர் கருணாநிதி அமெரிக்கப் பயணத்தில் எங்கு எல்லாம் சென்றார் என்று எடுத்துப் படித்தேன். 1971-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் நாள் வாஷிங்டனுக்கு வந்த தலைவர் கருணாநிதி பல்வேறு இடங்களை பார்வையிட்டிருந்தார். அதிலும் குறிப்பாக, ஆர்லண்டோ நகரில் நடைபெற்ற கலைவிழாவில் கலந்துகொண்டு, அங்கிருந்து நீரூற்றைப் பார்த்து ஒரு கவிதை எழுதி, அங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். அதை நான் முரசொலியில் படித்து பார்த்தேன். அந்த கவிதையில் சொல்லியிருக்கிறார்:

“ஆர்லந்தோ எனும் நகரில் அரியதோர் ஏரியிலே
அழகிய மத்தாப்பூ ஊற்றொண்டு கண்டேன்
ஒளிவிளக்குப் போடுகின்ற தாளத்திற்கு
ஒரு லயமும் பிசகாமல் ஆடுகின்ற
நீரூற்று ஆட்டக்காரி நாட்டியத்தின்
நேர்த்தி யென்ன சொல்வேன்!” – என்று தொடங்கும் அந்தக் கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அடுத்து, இதே சிகாகோவுக்கு வந்திருந்தார். வந்தவர், சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் நியூயார்க் சென்று, நியூயார்க் தமிழ்ச் சங்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது எப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு தலைவர் கருணாநிதி வந்தாரோ, அதேபோல் இன்று நானும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு இங்கு வந்திருக்கிறேன். நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, தமிழ்நாடு எப்படியெல்லாம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று, இங்கிருந்து தமிழ்நாட்டில் இருக்கும் உங்கள் உறவுகளிடம் நிச்சயமாக பேசிக் கேட்டிருப்பீர்கள்… செய்திகளில் படித்திருப்பீர்கள்… எப்படி இருக்கிறது உங்களிடம் கேட்கிறேன்?.

தொழில் வளர்ச்சியை பொருத்தவரைக்கும், நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும், எந்த நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்தாலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு எப்படியெல்லாம் முன்னிலை வகிக்கிறது – தமிழ்நாட்டில் என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன என்று சொல்லி, தொழில் தொடங்க வாருங்கள் என்று நான் அழைப்பு விடுப்பேன். அதனால்தான், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெருமையை அடைந்திருக்கிறோம்.

எந்த நாட்டுக்கு நான் அரசுமுறைப் பயணமாக சென்றாலும், என் எண்ணம் எல்லாம், அங்கு வாழும் நம்முடைய தமிழர்களை சந்திக்க வேண்டும், அங்கு இருக்கும் தமிழ் அமைப்புகளை சந்திக்க வேண்டும் என்றுதான் இருக்கும். அப்படி நான் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தமிழர்களை சந்தித்திருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அதிகமாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடான அமெரிக்காவில் உங்கள் முகங்களை பார்க்கும் போது, மீண்டும் சொல்கிறேன் பேசாமல் அப்படியே நின்று கொண்டு உங்களையே பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அந்தளவுக்கு உங்கள் பாசமும் அன்பும் என்னை கட்டிப்போட்டிருக்கிறது. இந்தத் தருணத்தில், நான் குறிப்பிட விரும்புவது ஈராயிரம் ஆண்டுகள் அன்னைத் தமிழகம் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன். ‘சிங்க நடையும் சிங்காரத் தெள்ளு நடையும் பொங்கு கடல்நடையும் புரட்சிக் கவிநடையும் தன்னுடைய உரைநடையால் கண்ட கோமான் – தம்பிமார் படைமீது விழியொற்றி வெற்றி கண்டிருக்கும் பூமான். பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்க்கிறார்களோ, அங்கு எல்லாம் வாழ்ந்திருக்கக்கூடிய அறிவுலக ஆசான், ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

“அனைவரும் பிறக்க ஒரு தாய் வயிறு தாங்காது என்ற காரணத்தால் தான், தனித்தனி தாயினுடைய வயிற்றில் பிறந்த அன்பு உடன்பிறப்புகள் நாம்” என்று சொல்வார். நாமெல்லாம் தனித்தனி தாயுடைய வயிற்றில் பிறந்திருந்தாலும் – நாம் எல்லோருக்கும் இந்த உறவை – பாசத்தை ஊட்டிய ஒரு தாய் இருக்கிறார், அவர்தான் தமிழ்த்தாய்.

உளங்கவர் ஓவியமே! உற்சாகக் காவியமே! ஓடை நறுமலரே! ஒளியுமிழ்ப் புதுநிலவே! அன்பே! அழகே! அமுதே! உயிரே! இன்பமே! இனியத் தென்றலே! பனியே! கனியே! பழரசச் சுவையே! மரகத மணியே! மாணிக்கச் சுடரே! மன்பதை விளக்கே! – என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தமிழை தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் இருக்காது.

அந்தத் தமிழ்த்தாயின் குழந்தைகள் நாம் என்பதுதான் நம்முடைய பெரும் அடையாளமாக இருக்கிறது. கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். நம்முடைய தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் மூலமாக, தமிழ்நாட்டை பார்க்க நம்முடைய பண்பாட்டை இறுகப் பற்றிக்கொள்ள நம்முடைய சொந்தங்களை அடையாளம் காண வந்த இளைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி அது.

சூழ்நிலைகளின் காரணமாக தொலைதூர தேசங்களுக்கு வந்து தாய்த் தமிழ்நாட்டின் தொடர்பை இழந்து இன்றைக்கு மீண்டும் தாய் மண்ணின் வாசத்தை தாய் மண்ணின் அரவணைப்பை உணர்ந்த இளைஞர்களின் உணர்ச்சிக் குவியலாக அந்த நிகழ்ச்சி இருந்தது. அதிலும் ராதிகா என்ற மியான்மர் நாட்டைச் சேர்ந்த நம் சகோதரி, பல ஆண்டுகளாக விட்டுப்போன உறவை மீண்டும் கண்டுபிடித்து நா தழுதழுக்க பேசியது என் நெஞ்சிலேயே இருக்கிறது.

தன்னுடைய வள்ளிப்பாட்டியைக் கண்டுபிடிக்க நினைத்த அவர், இப்போது தன் மாமா வீட்டோடு சேர்ந்திருக்கிறார். “அங்கு கலாச்சாரம் எல்லாம் இருக்கிறது. ஆனால், சொந்தக்காரர்கள் குறைவு” என்று சொல்லி அவர் கலங்கியது, உறவுகளை பிரிந்து ஏங்கும் அத்தனை அயலகத் தமிழர்களின் உணர்வின் பிரதிபலிப்பாக இருந்தது. எப்படிப்பட்ட வரலாற்றுக்கும் – பண்பாட்டுக்கும் சொந்தக்காரர்கள் நாம்? இனம், மொழி, நாடு, சாதி, மதம், பால், வர்க்கம், நிறம் என்று எந்தப் பாகுபாட்டுக்கும் இடமளிக்காமல், உலக உயிர்கள் அனைத்துக்குமான பொதுமறையைத் தந்த வான்புகழ் வள்ளுவரை தந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாம்!

ஊரைத் தாண்டிய ஊரும் உலகமும் எப்படி இருக்கும் என்று அறியாக் காலத்திலேயே, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று எல்லோரையும் சொந்தமாக கருதி இலக்கியம் படைத்த புகழுக்குச் சொந்தக்காரர்கள் நாம்! கீழடி கண்டுபிடிப்புகள் மூலமாக, நான்காயிரம் ஆண்டுக்கு முன்பாகவே எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடனும் மேம்பட்ட சமூகமாக வாழ்ந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்! அதனால்தான் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்படவேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்கிறேன்.

இப்படிப்பட்ட பெருமைக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும், அன்புக்கும் சொந்தக்காரர்களான தமிழினம் இன்றைக்கு பல நாடுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கிறோம். அந்த உயர்பொறுப்புகளுக்குக் கடைக்கோடியில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வரமுடியும் என்பதைச் சாத்தியப்படுத்தியது, நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கும் சமூகநீதியும் அதற்காகப் பாடுபட்ட தலைவர்களும்தான்!

இதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், தமிழினத் தலைவர் கலைஞரும் காணப் பாடுபட்ட சமுதாயம்! அதற்காகத்தான், நீதிக்கட்சி ஆட்சி, பெருந்தலைவர் காமராசர் ஆட்சி, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்று, தொடர்ந்து தமிழ்நாடு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்! தலைவர் கலைஞர் கணினிக் கல்விக்கு தந்த முக்கியத்துவத்தால்தான், ஐ.டி. துறையில் தமிழ்நாடு முன்னேறியது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய டைடல் பூங்கா மாதிரி அப்போது வேறு எந்த மாநிலத்திலும் பெரிதாக இல்லை. கருணாநிதி அமைத்த அடித்தளத்தில், உலகத்தை தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்தோம்; தமிழ்நாட்டை உலகம் உள்வாங்கியது. அதற்கு சாட்சியங்களாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்! தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டுமல்ல; உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பரணாக நமது திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ உருவாக்கி இருக்கிறோம். ஜனவரி 12-ஆம் நாளை அயலகத் தமிழர் நாளாக கொண்டாடுகிறோம். அந்த வாரியத்தின் மூலமாக, ‘தமிழால் இணைவோம்’, ‘உலகெங்கும் தமிழ்’, ‘தமிழ் வெல்லும்’ ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களை மேம்படுத்தும் ‘எனது கிராமம்’ என்ற திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அயலகத் தமிழர்க்கு கணியன் பூங்குன்றனார் விருது வழங்கப்படுகிறது! அயல்நாடுகளில் பணிக்குச் சென்று, அங்கு இறக்க நேரிடுபவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுகிறது.

உக்ரைன் நாட்டுக்கு படிக்கச் சென்ற 1,524 மாணவர்களை போர் காலத்தில் மீட்டு வந்தோம். கம்போடியா, தாய்லாந்து, மியான்மரில் இருந்து 83 தமிழர்களை மீட்டு வந்தோம். இஸ்ரேல் நாட்டுக்கு கல்வி கற்கச் சென்று படிப்பை தொடர முடியாத 126 பேரை மீட்டோம். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,398 பேரை அயல்நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மீட்டு வந்தோம்.

மொத்தத்தில், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், “நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது” என்ற உணர்வை நம்பிக்கையை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்படுத்தி வருகிறது. இது அனைத்துக்கும் முத்தாய்ப்பான திட்டம்தான் ‘வேர்களைத் தேடி’ என்று, அயலகத்தில் வாழும் நம்முடைய குழந்தைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம். அதனால்தான், நான் எப்போதும் சொல்வேன்: “இது ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு.

சாதி – மத வேறுபாடுகளை வீழ்த்தும் வல்லமையும், எல்லோரையும் ஒற்றுமைப்படுத்தும் வலிமையும் தமிழுக்குதான் இருக்கிறது. “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற உணர்வு கொண்டவர்கள் நாம். இந்த எண்ணத்தை விதைத்தது திராவிட இயக்கம்! உலகத்தில் வேறு எந்த இனத்துக்கும் இல்லாத பெருமை நம் தமிழினத்துக்கு உண்டு. தங்களின் இன்னுயிரையும் தீக்குத் தின்னக் கொடுத்து, தாய்மொழியைக் காத்த தியாக மறவர்கள் நாம்! அந்தத் தியாக மறவர்களை கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவன் நான் என்ற கர்வம் எனக்குண்டு!

மொழிப்பற்றுக்கும் மொழிவெறிக்குமான வேறுபாட்டையும் – இனப்பற்றுக்கும் இனவெறிக்குமான வேறுபாட்டை அறிந்தவர்கள் நாம்! இங்கு கூடியிருக்கும், உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள். மற்றவர்கள், சூழ்நிலைகளின் காரணமாகவும் பணிகளுக்காகவும் இங்கு வந்திருப்பீர்கள். அப்படி வந்து உங்கள் திறமையால் உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறீர்கள். கிணற்றுத் தவளைகள் அல்ல தமிழர்கள்; வானத்தையே வசப்படுத்தும் வானம்பாடிகள் என்பதற்கான பொருள் நீங்கள்! திறமையால் தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்!

உங்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை. உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். உங்கள் உயர்வுக்குக் காரணமான அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள். உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள். நம்முடைய வரலாற்றின் அடையாளமாக விளங்கும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள்.

சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லுங்கள். உங்களால் முடிந்த செயல்களை தமிழ்நாட்டுக்குச் செய்யுங்கள். தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் உங்கள் குழந்தைகளிடம், “நம்முடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் இங்கு முதலமைச்சராக இருக்கிறார். அவர் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று சொல்லுங்கள். நான் இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரமும் மகிழ்ச்சியான முகங்களும்தான் எப்போதும் என் ஞாபகத்துக்கு வரும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சிகாகோவில் மு.க. ஸ்டாலின்: நாமெல்லாம் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும்..! நாம் எல்லோருக்கும் உறவை, பாசத்தை ஊட்டியது தமிழ்த்தாய் தான்..!

தனித்தனி தாயினுடைய வயிற்றில் பிறந்த அன்பு உடன்பிறப்புகள் நாம்” என்று சொல்வார். நாமெல்லாம் தனித்தனி தாயுடைய வயிற்றில் பிறந்திருந்தாலும் – நாம் எல்லோருக்கும் இந்த உறவை – பாசத்தை ஊட்டிய ஒரு தாய் இருக்கிறார், அவர்தான் தமிழ்த்தாய் என பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தாலிபான்களின் புதிய சட்டம்: இஸ்லாமியர் அல்லாதவர்களும் நட்பாக பழகக்கூடாது. எந்த உதவியும் செய்யக்கூடாது..!

முஸ்லிம் மதத்தை சாராதவர்களிடம் நட்பாக பழக்கூடாது. அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் தாலிபான்கள் கொண்டு வந்துள்ள சட்டம் இன்று உலகளவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக அமெரிக்க படைகள் 2021-ல் வெளியேறிய நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் மீண்டும் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் என்பவர்கள் யார் என்றால் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்களான தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆப்கானிஸ்தானை ஏற்கனவே கடந்த 1996 முதல் 2001 வரை தாலிபான்கள் ஆட்சி செய்தனர். இதையடுத்து மீண்டும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 3 ஆண்டுகள் ஆகியும் கூட ஆப்கானிஸ்தானை உலக நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்த நாடு என்பதால் அங்குள்ள மக்களின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தற்போது ஏராளமான மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். இருப்பினும் கூட இந்த காலக்கட்டத்தில் தாலிபான்கள் தொடர்ந்து ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூடாதுது. தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா மட்டுமே அணிய வேண்டும். பூங்கா, ஜிம் செல்லக்கூடாது. ஹோட்டலில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது என்பது உள்பட பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் தற்போது புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் மொத்தம் 35 வகையான அம்சங்களை கொண்டுள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பெண்கள் கவிதைகள் படிக்கவும், பாடல்கள் பாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வெளியே பொதுவெளியில் பெண்கள் பேசக்கூடாது. உறவு முறையில் வராத ஆண்களும், பெண்களும் எந்த காரணம் கொண்டும் பார்த்து கொள்ளக்கூடாது.

முஸ்லிம் அல்லாத பெண்கள் முன்பாகவும் இஸ்லாமிய பெண்கள் தங்களின் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். ஆண்கள் நீண்ட தாடி வளர்க்க வேண்டும். தளர்வான அதேவேளையில் நீண்ட உடையை அணிய வேண்டும். வழிபாடுக்கு ஏற்றது போல் போக்குவரத்து நேரத்தை மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இஸ்லாமியர் அல்லாதவர்களும் நட்பாக பழகக்கூடாது. அதேபோல் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kim Jong Un: வெள்ளத்தில் 1,000 பேர் உயிரிழந்ததால் 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை..!

வட கொரியாவில் வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட கொரியாவில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் 1,000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் 30 பேருக்கு அதிபர் கிம் ஜாங் உன் மரணதண்டனை விதித்ததாகவும், கடந்த மாதம் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தென் கொரிய செய்தி நிறுவனம்செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு கடும் தண்டணை வழங்க வேண்டும் என்று அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக அந்நாட்டு ஊடகம் கடந்த மாதம் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், 30 அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மண்ணீரலுக்கு பதிலாக கல்லீரலை அகற்றிய மருத்துவர்..! தவறான அறுவை சிகிச்சையால் உயிரிழப்பு..!

அமெரிக்கா வாஷிங்டனில் 70 வயதான வில்லியம் பிரையன் மற்றும் அவரது மனைவி பெவர்லி ஆகியோர் கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள ஒகலூசா கவுண்டியில் உள்ள தங்களுடைய வாடகை வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவருக்கு திடீரென கீழ் இடது வயிற்று வலி ஏற்பட்டது. வில்லியம் பிரையன் தசை ஷோல்ஸ், AL குடியிருப்பாளர் வால்டன் கவுண்டியில் உள்ள அசென்ஷன் சேக்ரட் ஹார்ட் எமரால்டு கோஸ்ட் மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு அவர் மண்ணீரல் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தாமஸ் ஷக்னோவ்ஸ்கி மற்றும் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கிறிஸ்டோபர் பகானி ஆகியோர் தயக்கம் காட்டிய குடும்பத்தினரை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.

பிரையன் மருத்துவர்களுக்கு கட்டுப்பட்டு ஆகஸ்ட் 21 அன்று லேப்ராஸ்கோபிக் ஸ்ப்ளெனெக்டோமி செயல்முறையை மேற்கொண்டார். அறுவை சிகிச்சையின் நடுவில், ஷக்னோவ்ஸ்கி கல்லீரலை வழங்கும் பெரிய வாஸ்குலேச்சரைக் கடந்து பிரையனின் கல்லீரலை அகற்றினார். மண்ணீரலுக்கு பதிலாக கல்லீரலை அகற்றியதால் ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரையன் பரிதாபமாக உயிரிழந்து வில்லியம் பிரையன் குடுப்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

ஆந்திரா கனமழை எதிரொலி ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை..! ஹெலிகாப்டர் மூலம் உணவு, மருந்து விநியோகம்..!

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, ஆந்திராவின் ல் விஜயவாடா வெள்ள மாறியுள்ளது. மேலும் பிரகாசம் அணையின் மதகு, வெள்ளத்தில் சேதமடைந்ததால் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. கனமழை காரணமாக செல்போன் டவர்கள் செயலிழந்தது மட்டுமின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பல லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழலைக்கு தள்ளப்பட்டு, விஜயவாடா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் இருளில் மூழ்கியுள்ளன.

மேலும் ஆந்திராவில் கிருஷ்ணா, பிரகாசம், குண்டூர், விசாகப்பட்டினம், நந்தியால், கோதாவரி மாவட்டங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. படகுகள் மூலம் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிவளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று மேலும் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. மீட்பு, நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

நேற்று காலை முதல் இன்று அதிகாலை 2 மணி வரை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீட்பு குழுவினருடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆந்திராவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவித்து அதற்கான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜயவாடா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த சந்திரபாபு நாயுடு, ‘‘கடந்த 5 ஆண்டு ஜெகன் ஆட்சியில் நடந்த அலட்சியப்போக்கும், முரண்பாடான ஆட்சியும்தான் இந்த வெள்ளத்துக்கு காரணம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைசி நபரை மீட்டெடுத்து, இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை நான் ஆட்சியர் அலுவலகத்தில்தான் இருப்பேன். இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார். வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு ஹெலிகாப்டர், ட்ரோன் மூலம் உணவு, மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Daisuke Hori: 12 வருடமாக ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டுமே தூக்கம்..!

மனிதன் சீரான மனநிலையைப் பேணுவதற்கும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கும் தூக்கம் என்பது மிகவும் அவசியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் வேண்டும் என்பது மருத்துவ ரீதியிலான உண்மை. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அதாவது 30 நிமிடங்கள் மட்டுமே ஒருவர் தூங்குகிறார் என்றால் நம்ப முடிகிறதா..!? ஆம், தனது வாழ்நாளை இரட்டிப்பாக அனுபவிப்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த 40 வயதாகும் Daisuke Hori கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்களே தூங்குகிறார்.

வடக்கு ஜப்பானில் உள்ள Hyogo மாகாணத்தைச் சேர்ந்த Daisuke Hori தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துக்குப் பழக்கப்படுத்தி உள்ளதாகவும், அதன்மூலம் தனது செயல்படும் திறன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். நீண்ட நேரத் தூக்கத்தை விட ஆழமான குட்டித் தூக்கம் உங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், வேலைத் திறனை அதிகரிக்கவும் உதவும், உதாரணமாக மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் குறைந்த நேரம் ஓய்வெடுத்தாலும் அதிக ஊக்கத்துடன் செயல்படுகிறனர் என்று Daisuke Hori தெரிவித்துள்ளார்.

யோமியூரி Yomiuri தொலைக்காட்சி ஹோரியின் அன்றாட செயல்பாடுகளை 3 நாட்களுக்குத் தொடர்ந்து Will You Go With Me? என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்பியது. ஆச்சரியப்படும் வகையில் நாள் ஒன்றுக்கு 26 நிமிடமே தூங்கிய கோரி அதிக சுறுசுறுப்பாக தனது வேலைகளைச் செய்துள்ளார். உணவு உண்பதற்குப் பல மணி நேரத்துக்கு முன்னர் உடற்பயிற்சி செய்வதும், காப்பி குடிப்பதும் தூக்கக்கலகத்தை நீக்கும் என்று தெரிவிக்கிறார் ஹோரி. கடந்த 2016 முதல் குறைந்த தூக்கத்திற்கான பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார் ஹோரி. இதுவரை 2100 பேரை ultra-short sleepers ஆக ஹோரி தயார் படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: சர்வதேச நீதி விசாரணை கோரி கவன ஈர்ப்பு போராட்டம்

ஐநா போர், அரசியல், வன்முறை மற்றும் பிற காரணங்களால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்ட பல லட்சக்கணக்கானோர் பற்றிய தகவல்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 30.08.2011 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக பிரகடனப்படுத்தியது. அதுமுதல் ஆகஸ்ட் 30-ம் நாளானது உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் காணாமல் ஆக்கப்ட்டோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியின் போது பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி ராணுவத்தில் சரணடைந்த பலரும் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கங்கள் சார்பாக பேரணி நடைபெற்றது.

யாழ்ப்பாணம் ஸ்டாலின் வீதியில் துவங்கிய பேரணி, முனியப்பர் ஆலையம் வரையிலும் நடைபெற்றது. இந்தப் பேரணியில் இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார், யாழ்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அதுபோல, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி வேண்டி பல்கலைக்கழக மாணவர்கள், வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பாக தொடர் சுழற்சி முறையிலான 2,750-வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் தபால் நிலையம் எதிரே இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோர் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்தேச விசாரணை வேண்டும், என வலியுறுத்தி கையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிழக்கு மாகாணம் திருகோணமலையில் போலீஸாரின் தடையை மீறி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் சார்பாக கடற்கரையில் போராட்டம் நடைபெற்றது.

STALIN: தமிழகத்தில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

தமிழகத்தில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கிகும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக கடந்த 27-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ நகரை 28-ஆம் தேதி சென்றடைந்தார்.

ஆகஸ்ட் 29- ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், நோக்கியா, பேபால், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதல்வர் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 30- ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான கலிபோர்னியாவின் குபெர்டினோவில் ஆப்பிள் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், கையடக்க கணினி (TAB) மற்றும் ஸ்மார்ட் கைகடிகாரங்கள், Headphones, Airpod போன்ற அணியக்கூடிய மின்னணு பொருட்கள் மற்றும் பாகங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, தயாரித்து சந்தைப்படுத்துவது மற்றும் பல்வேறு தொடர்புடைய சேவைகளை மேற்கொண்டு வருகிறது. 27 நாடுகளில் 530 உலகளாவிய விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் அமைந்துள்ள ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், ஹான் ஹய், பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து பேசியபோது, உலக மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரைபடத்தில் தமிழகத்துக்கான இடத்தை உறுதி செய்ததற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தின் உற்பத்தி சூழலை மேம்படுத்த தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளை கோடிட்டுக் காட்டியதோடு, தமிழகத்தில் திறன் வளர்ச்சி மிகுந்த இளைஞர்கள், பெண் கல்வி மற்றும் அவர்களின் திறன் வளர்ச்சி குறித்தும், தொழில்துறை, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து தளவாட வசதிகள் போன்றவற்றில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவது குறித்தும் எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் இதனை மேலும் வலுப்படுத்தி, ஆசியாவின் உற்பத்தி மையமாக தமிழகத்தை உருவாக்க இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் விளங்கும் தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் அமைந்துள்ள ஆல்பாபெட் அதாவது கூகுள் நிறுவனம்: கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, ஆன்லைன் விளம்பரம், தேடுபொறி தொழில்நுட்பம், கிளவுட் கம்ப்யூட்டிங், கணினி மென்பொருள், குவாண்டம் கம்ப்யூட்டிங், இ-காமர்ஸ் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவனமாகும். கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, தமிழகத்தில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தமிழகத்தில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழகத்தில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்துக்கான திறன் ஆகியவற்றில் AI கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் பேசினார்.

இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கூகுளுடன் இணைந்து எதிர்காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களை அதிநவீன AI திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழகம் தயாராக உள்ளது என தெரிவித்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து அழைப்பு விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Linkedin முதன்மை செயல் அலுவலர் யான் ரோஸ்லான்ஸ்கி மற்றும் உயர் அலுவலர்களை சந்தித்து, டேட்டா சென்டர் விரிவாக்கம், Global Capability Centre (GCC) மற்றும் AI திறன் முயற்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார்.

அமெரிக்காவில் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாட்டில் 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடிக்கு ஒப்பந்தம்..!

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கிகும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக கடந்த 27-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ நகரை 28-ஆம் தேதி சென்றடைந்தார்.

மேலும், சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான 6 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதாவது, அங்கு கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா நகரை கார்ப்பரேட் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் உலகின் நம்பர் 1 குறைக்கடத்தி மற்றும் காட்சி உபகரணங்கள் நிறுவனமான அப்ளைடு மெட்டீரியல்ஸ். உலகளவில் 24 நாடுகளில் 150 நகரங்களில் செயல்பட்டு வரும் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் விற்பனை, சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை சென்னையிலும், சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை கோயம்புத்தூரிலும் அமைத்துள்ளது. இந்நிலையில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை, தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நோக்கியா நிறுவனமானது பின்னிஷ் பன்னாட்டு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் மின்னணு நிறுவனமாகும். இது ஒரு பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். சென்னையில் நோக்கியா நிறுவனம் பன்னாட்டு விநியோக மையம் மற்றும் உற்பத்தி நிலையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.

அதன்படி முதலமைச்சரின் முன்னிலையில் நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்க பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமான பேபால் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை ஆதரிக்கும் பெரும்பாலான நாடுகளில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு உதவுகிறது. காசோலைகள் மற்றும் பண ஆணைகள் போன்ற பாரம்பரிய காகித முறைகளுக்கு மின்னணு மாற்றாக இது செயல்படுகிறது. அதேபோல், இந்த நிறுவனம் சென்னையில் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்க நாட்டின், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்ட் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வரும் ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் செயல்முறை உபகரணங்களை வழங்கும் முன்னணி நிறுவனமாகும். மேம்பட்ட பேக்கேஜிங், ஐஓடி, லைஃப் சயின்ஸ், ஏஆர்.விஆர், எம்இஎம்எஸ், பவர் உள்ளிட்ட பலதரப்பட்ட சந்தைகளில் தொழில்நுட்பத் தலைவர்களுக்கு புதுமைகளை வழங்கும் மேற்பரப்பு மற்றும் பொருட்களை மேம்படுத்தும் அமைப்புகள் அதாவது வெப்ப செயலாக்கம், ஈரச் செயலாக்கம், பிளாஸ்மா சுத்தம் செய்தல் மற்றும் பூச்சு போன்றவற்றை வழங்குகின்றன. இந்நிறுவனம் கோயம்புத்தூரில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.

ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.150 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் சூலூரில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான அரிசோனாவின் சாண்ட்லர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசிப் நிறுவனம். ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான உட்பொதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையரான மைக்ரோசிப் டெக்னாலஜி நிறுவனம். இது பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு 5G, EV, IOT, தரவு மையங்கள் போன்ற ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான கட்டுப்பாட்டான தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையர்.

இந்த நிறுவனம் கடந்த 2012 முதல் சென்னையில் இயங்கி வருகிறது. சென்னை மையம் ஐ.சி வடிவமைப்பு, கணினி உதவி வடிவமைப்பு, பயன்பாடு மற்றும் மென்பொருள் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. சென்னையிலுள்ள இந்நிறுவனத்தில் 550 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.250 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிறுவனம் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இன்பிங்ஸ் ஹெல்த்கேர் ஒரு முன்னோடி சுகாதார தொழில்நுட்ப நிறுவனம்.தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொழில் தொடங்க கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள எல்காட்டில் அலுவலக இடத்தை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.50 கோடி முதலீட்டில் 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு மற்றும் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, நோக்கியா நிறுவனத்தின் சார்பில் தலைமை உத்தி மற்றும் தொழில்நுட்ப அலுவலர் நிஷாந்த் பத்ரா, நிலையான நெட்வொர்க் வணிக குழு தலைவர் சாண்டி மோட்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.