ஊரடங்கு காலத்தில் போதிய வருமானமின்றி அவதிப்பட்டு வரும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி, திருச்சி கருமண்டபம் 45-வது வட்ட திமுக சார்பில், சுமார் 1500 நபர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் கே.என் . நேரு அவர்கள் வழங்கினார்.
Category: தமிழகம்
Tamilnadu
கோயம்புத்தூர் திமுக சார்பில் கோவிட் -19 சிகிக்சை மையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்
கோவிட் -19 பெறுந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வரிசையில், முதலமைச்சரின் கோவிட் -19 தடுப்பு நிவாரண நிதிக்காக கோயம்புத்தூர் கலைஞர் கருணாநிதி கல்லூரியில் இயங்கும் கோவிட் -19 சிகிச்சை மையத்திற்கு ஆக்ஸிஜன் செரிவூட்டிகளை திமுக கோயம்புத்தூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை. சேனாதிபதி அவர்களின் மூலம் வழங்கப்பட்டது.
அதிகரிக்கும் ஆதரவு: பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை முறை
மதுரை பிளாட் புரோமோட்டர்ஸ் அசோசியேஷன் சார்பில், அய் யர் பங்களா பார்க் டவுன் – குலமங்கலம் பிரதான சாலையில் நேரு மேல்நிலைப் பள்ளியில் கோவிட் -19 சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்படுகிறது. 100 படுக்கை வசதிகளைக் கொண்ட இங்கு 24 மணி நேரமும் முறையான கவனிப்பு, இலவச சித்தா,மருந்துகளும் வழங்கப் படுகின்றன.
இதுவரை 100-க்கும் மேற் பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சிகிச்சை மையப் பொறுப்பாளர்களும், புரோமோட்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகளுமான வல்லப்பன், கந்தசாமி, முத்துவேல், மாணிக்கம் ஆகியோர் தெரிவித்தனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கோவிட -19 தடுப்பு குறித்து தலைமை செயலாளர் நேரில் ஆய்வு
திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் கோவிட -19 தடுப்பு நடவடிக்கைகள், ஏற்படுத்த வேண்டிய மருத்துவ கட்டமைப்புகள் ஆகியவை குறித்து, தமிழக தலைமைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, கொடிசியா ‘ஏ’ அரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகள் வசதிகளை வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டார்.
தமிழ்நாடு வனத்துறை சார்பாக அமைச்சர் கே.என் . நேரு அவர்கள் 25000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்
கலைஞர் பிறந்தநள் விழாவை முன்னிட்டு: சேலம் – ஆத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
சேலம் -ஆத்தூர் ரோட்டரி சங்கமும் ஜாண்டியர் டிராக்டர் கம்பெனி இனைத்து ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர், N95 முககவசம், மருத்துவர்கள் கவச உடை முககவசம், ஆக்சிஜன் சரி பார்க்கும் கருவி, ரத்தம் அழுத்தம் கருவி ஆக்ஸிஜன் மீட்டர் என அனைத்து உபகரணங்களும் 12 லட்ச ரூபாய்க்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ராஜா செயலாளர் பாபு பொருளாளர் சந்தோஷ் முன்னாள் ஆளுநர் நிர்மல் பிரகாஷ் துணை ஆளுநர் ஹீரோ செந்தில் ,வினஸ் சண்முகம் சுந்தரம் ஆகியோர் தலைமையில் ஆத்தூர் கோட்டாட்சியர் துரை தலைமையில் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவர் கண்ணனிடம் அனைத்துப் பொருளிலும் ஒப்படைக்கப்பட்டது .
சேலம் -ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தேவையான அனைத்து உபகரணங்களும் கொடுக்கப்பட்டது. நோயாளி அனைவருக்கும் உடனடியாக மருத்துவ உதவி செய்ய ஏதுவாக தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வருகிறது என்று மருத்துவர் கண்ணன் கூறினார் .இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆத்தூர் தாசில்தார் வரதராஜன் பாரத் டைம்ஸ் நிறுவனர் உசேன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கழக உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மயிலாப்பூர் கோவிட் -19 தடுப்பூசி மையத்தை சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆய்வு
ஆன் வெல் என்ற வாகன சேவையை கோவிட் -19 நோயாளிகளுக்காக அமைச்சர் கே.என் . நேரு தொடங்கி வைத்தார்
பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரசு சித்தா கோவிட் -19 மையத்தை அமைச்சர் கே.என் . நேரு பார்வையிட்டார்
கோயம்புத்தூர் அரசு மருத்துவம்னையில் ஊழியர்களின் அலட்சியம்
கோயம்புத்தூர் போத்தனூர் பகுதியை சேர்ந்த டீ விற்பனை செய்யும் தொழிலாளி ரவி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் கோவிட -19 பாதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
நேற்று ஸ்கேன் எடுப்பதற்காக நோயாளியை அழைத்து சென்ற ஊழியர்கள் காலி ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி அழைத்து சென்றுள்ளார்கள். ஸ்கேன் மையம் முன்பு ஸ்டெச்சரை நிறுத்திவிட்டு ஊழியர்கள் சென்றதால் நோயாளி மூச்சுதினறி உயிரிழந்தார். அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலச்சியத்தால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.