தடுப்பூசி டோக்கன் விநியோகத்தில் குளறுபடி மக்கள் சாலை மறியல்

கோயம்புத்தூர் மாவட்டம் அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தடுப்பூசி போடுவதற்கு குறைவான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை சமரச பேச்சு நடத்தி கலைத்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 250 தடுப்பூசிகள் வீதம் போடப்படுவதாக கூறப்பட்ட நிலையில், 40 டோக்கன்கள் மட்டும் வினியோகம் செய்யப்பட்டது.

இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் சுகாதாரத் துறையிரிடமும் திமுக ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அரிசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தடுப்பூசிகளை தனியாருக்கும், கட்சியினருக்கும் பணத்திற்கு விற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கடந்த 8 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படுமா..!?

கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.


இதில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் அரசு அலுவலக கட்டிடம் இல்லாமல் இருந்து வந்தது. இதனையடுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற அலுவலக கட்டிடம் பல லட்சம் செலவில் கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள காகாவாடி அருகே கட்டி முடிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை அந்த கட்டிடம் திறக்கப்படாமல் அப்படியே பூட்டியே கிடக்கிறது.

உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கோவிட் -19 தொற்று உறுதி

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோவிட் -19 காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. இதற்கிடையில், பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. இதனால் மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயம்புத்தூரில் முக்கிய காவல் அதிகாரிகள் இன்று பொறுப்பேற்பு


தேர்தல் அறிவிப்பில் தொடங்கி ஆட்சிமாற்றம் வரை அதிகாரிகள் மாற்றம் என்பது தமிழக அரசியலில் வழக்கமான நிகழும் ஒன்றாகும். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

இப்படியிருக்க இன்று ஒரே நாளில் ஐஜி, டிஐஜி மற்றும் மாநகர் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளர் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றுள்ளனர்.

இன்று காலை மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்தில் புதிய ஐ.ஜியாக சுதாகர் பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல கோயம்புத்தூர் சரக டிஐஜி ஆக முத்துச்சாமி பதவியேற்றார். கோயம்புத்தூர் மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக முருகவேல் பொறுப் பேற்றுக்கொண்டார்.

அதிமுக கொடி கம்பத்தின் நிறத்தை மாற்றி கருணாநிதியின் உருவ படம் வைத்த மர்ம நபர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே அதிமுக கொடிக் கம்பத்தின் நிறத்தை மாற்றிவிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்தை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் கிராமத்தில் கடந்த 2005-ம் ஆண்டு எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அச்சிலை அருகே அதிமுக கொடி கம்பம் உள்ளது.

இந்நிலையில், எம்ஜிஆர் சிலையின் பீடம் மற்றும் கொடி கம்பத்தின் நிறத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் மாற்றியுள்ளனர். மேலும், கொடி கம்பத்தின் முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த அதிமுகவினர் காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் காவலர் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களை திடீர் சந்திப்பு


திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் மரியாதை நிமித்தமாக ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களை நேற்று சந்தித்து பேசினார்.

எடப்பாடி பழனிசாமி: சசிகலா அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார்

சென்னையில் அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது, சசிகலா அதிமுகவில் இல்லை; அமமுகவினருடன் தான் அவர் பேசி வருகிறார். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார், அது நடக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சீமான் பேட்டி: 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேச்சு

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சீமான், 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேசி உள்ளோம். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை பொறுத்து முடிவு எடுப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.


தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி அனைத்திலும் முதலமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார். அனைத்துத் துறைகளும் வேகமாக இயங்குகின்றன. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்றுகின்றனர்” என்றார்.

கலைஞர் 98வது பிறந்தநாளை முன்னிட்டு  கோவிட் -19 நிவாரணம் வழங்கும் பணி தீவிரம்


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக சார்பில், நான்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3,19,816 குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் -19 நிவாரணமாக ரூ 4 கோடி மதிப்பில் தலா 4 கிலோ அரிசி வழங்குவதற்காக அரிசி பைகள் பேக்கிங் செய்யும் பணியினை நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

காக்கும் கரங்கள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் மதிய உணவு வழங்கல்


முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று மதியம், வேளச்சேரி – திருவான்மியூர், காக்கும் கரங்கள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில், பகுதிச் செயலாளர் திரு.துரைகபிலன் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கினேன். இந்நிகழ்வில், வட்டச் செயலாளர் திரு.ராஜாராமன், கழக நிர்வாகிகள் முன்னணியினர், உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.