ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் சார்பில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் இதுவரை செய்து முடிக்கப்பட்ட திட்டப்பணிகளுக்காக ரூ.80 கோடி நிலுவைத் தொகை பாக்கியுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் ரோடு போடுதல், பேட்ச் ஒர்க் மேற்கொள்ளுதல், மழை நீர் வடிகால் கட்டுதல், குப்பை அள்ளுதல், சிறு பாலம் கட்டுதல், பூங்கா உருவாக்குதல், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவை தவிர, ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளும் செய்யப்படுகின்றன. குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், கோயமுத்துார் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில், கோயமுத்துார் மாநகராட்சி பகுதிகளில் கடந்த நான்கு மாதமாக முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கான பில்கள், ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் உள்ளன. ரூ.80 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்ட பில்களுக்கு தொகை வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்., முதல் பில் தொகை கோப்புகளில் ஆணையர் கையெழுத்திடாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், கொரோனா பரவல் காலம் என்பதால் பணிகளை ஒப்பந்ததாரர்கள் தொய்வின்றி செய்து வருகின்றனர். ஆணையர் குமாரவேல் பாண்டியனை இட மாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது காலத்தில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்காமல் பணியிட மாறுதல் பெற்றுச் சென்றால் ஒப்பந்த நிறுவனத்தினர் நெருக்கடியையும், இழப்பையும் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என தெரிவித்தனர்.

இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட, சூலுார் காவல் ஆய்வாளருக்கு, எஸ்.பி., பாராட்டு சான்றிதழ்

கோயம்புத்தூர் மாவட்டம் , சூலுார் அருகே பாரதிபுரத்தில், கடந்த மாதம் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். சூலூர் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து, எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும், குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர் மீதும், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தார்.இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் ஏழு காவல்துறையினருக்கு, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கடயநல்லூர் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடயநல்லூர் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லணையில் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நீர்வளத்துறை சார்பில் நீர்வள அமைப்புகள் விரிவாக்கம், புதுப்பித்தல் புனரமைத்தல் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக ரூ.1036கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்புகள் ஆய்வு

மயிலாப்பூர் – பட்டினப்பாக்கத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்புகளை நேற்று ஊரக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மயிலை வேலு மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில், பகுதிச் செயலாளர் முரளி, வட்டச் செயலாளர்கள், குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் மா.மதிவாணன் கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மருந்து வழங்கல்


ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மருந்தை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவாணன் அவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயந்தி அவர்களிடம் வழங்கினார்.

ஒன்றிணைவோம் வா மூலம் சேலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ மு.க. ஸ்டாலின் வழங்கல்


சேலம் அஸ்தம்பட்டி பயணியர் மாளிகையில் ஒன்றிணைவோம் வா மூலம் சேலத்தில் 11 சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 10,49,698 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ வீதம் 5,250 டன் அரிசி வழங்கும் திட்டத்தை 5 குடும்ப அட்டைத்தார்களுக்கு‌ உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கில்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் 11 சட்டமன்ற தொகுதியில் 23,797 மனுக்கள் பெறப்பட்டு, 1100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதில் 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி சேலம் விமான நிலையத்தில் வரவேற்பு