கோயம்புத்தூரில் ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் ரத்ததானம்

உலக சுகாதார நிறுவனம் சார்பில் குருதி பிரிவுகளை கண்டறிந்த காரல் லாண்ஸ்டெய்னர் பிறந்த நாளான ஜூன் 14 ம் தேதி ரத்த கொடையாளர் தினமாக 2005 முதல் அனுசரித்து வருகிறது. அந்த வகையில்ன் ரத்த கொடையாளர்கள் தினம் இன்று அனுசரிக்கபடுகிறது.

இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, மாநகர காவல் துறை ஆணையர் தீபக் எம்.தமோர், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், கோவை சரக டி.ஜ.ஜி முத்துசாமி, மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் ரத்த தானம் செய்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் கோவிட் -19 சில நாட்களுக்கு முன்பு நாளொன்றுக்கு ஏற்பட்ட தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்று பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு குறைந்துள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போதைய தொற்றின் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்வதற்காகவும் இன்று மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

சரோஜ் குமார் தாக்கூருக்கு E.R. ஈஸ்வரன் வாழ்த்துக்கள் தெரிவிப்பு


நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள சரோஜ் குமார் தாக்கூர் அவர்களை மரியாதை நிமித்தமாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி சுற்றுப்பயணம் //பிரதமர மோடி உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களை சந்திப்பு

தமிழகத்தில் கோவிட் -19 சில நாட்களுக்கு முன்பு நாளொன்றுக்கு ஏற்பட்ட தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்று பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு குறைந்துள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். 17-ந் தேதியன்று டெல்லியில் பிரதமர மோடி உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். தமிழகத்தின் அப்போதைய தொற்றின் நிலையை பிரதமரிடம் எடுத்துரைத்து, செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி போன்ற சில திட்டங்களுக்கு விரைவாக அனுமதி பெற முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.

அமைச்சர் மா. மதிவாணன் கோவிட் -19 நிராவண பொருட்கள் வழங்கல்


அமைச்சர் மா. மதிவாணன் நேற்று ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீராபள்ளி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கோவிட் -19 நிராவண பொருட்களை சீராபள்ளி பேரூர் செயலாளர் திரு. செல்வராஜ் அவர்களின் ஏற்பாட்டில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் KRN. இராஜேஷ் குமார் அவர்கள் தலைமையில் வழங்கினார்.

கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற அலுவலகம் திறப்பு

கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனின் பயன்பாட்டுக்கான சட்டமன்ற அலுவலகம் இன்று பூஜை புனஸ்காரங்களுடன் மங்களகரமாக திறக்கப்பட்டது.

இராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டத்தை அமைச்சர் கே. என் . நேரு ஆய்வு


பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அமைச்சர் கே. என் . நேரு அவர்கள் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் முத்தரசநல்லூரில் உள்ள இராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் பணிகள் குறித்து ஆலோசனை


திருச்செங்கோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் “மக்கள் இயக்கம்” இலக்குக்கு வலுசேர்க்கும் வகையில் Ascot Group &Capital land சார்பில் ரூ. 20 லட்ச ருபாய் மதிப்பீட்டில் வழங்கிய 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனைக்கு வழங்கினர்.

எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய கூடாது:பெட்ரோல்-டீசல் விலையைமத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,  கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.