கோயம்புத்தூர் மாநகராட்சி கலை அரங்கத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாகன நெரிசலை குறைக்கும் விதமாக தானியங்கி முறையில், இயங்கக் கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம் பணிகளை நேற்று பார்வையிட்டு அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு செய்தார்.


இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் மாண்புமிகு க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கே.என் . நேரு அடுக்குமாடி வாகன நிறுத்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாகன நெரிசலை குறைக்கும் விதமாக தானியங்கி முறையில், இயங்கக் கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம் பணிகளை நேற்று பார்வையிட்டு அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு செய்தார்.


இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் மாண்புமிகு க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா மாநகராட்சி உதவி ஆணையரிடம் கடிதம்


சென்னை, வேளச்சேரி 179 வார்டில் மாநகராட்சி சார்பில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்த கடிதங்களை உதவி ஆணையர், மண்டலம் 13, அவர்களிடம் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா அவர்கள் வழங்கினார். மேலும், இதன் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தார்.

கோவிட் -19 : வறுமை, கடன் தொல்லை – வேலை தேடி கைக்குழந்தையுடன் கால்கடுக்க நடந்தே சென்னை புறப்பட்ட தம்பதி

கோயம்புத்தூர் மதுக்கரை பகுதியை சேர்ந்த ரம்யா நவீன் தம்பதியினர் 1 வயதில் பெண் குழந்தையுடன் சென்னையில் செங்கல் தயாரிக்கும் வேலைக்கு செல்ல நவீன் முடிவு செய்தார். பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால் அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு கடந்த 5 நாட்களாக நடந்து வேலூர் வந்துள்ளார்.

இவர்கள் வேலூர் வழியாக நடந்து செல்வதை வேலூர் அரசு கால்நடை அரசு மருத்துவமனை மருத்துவர் ரவிசங்கர் பார்த்து, அந்த தம்பதியிடம் விசாரித்தார். அப்போது நவீன் கூறுகையில், ‘‘எனது பெற்றோர் வயதானவர்கள். தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி மருத்துவம் பார்த்தோம். நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கோவிட் -19 னால் வேலை இல்லாததால் 2 மாத வாடகை கட்ட முடியவில்லை. \

உணவுக்கும் வழியில்லை. கடன் தொல்லை வேறு. இந்த சுழலில் தான் சென்னையில் வேலையுடன் தங்க இடம் கொடுப்பதாக சொன்னார்கள். அதனால் தான் துணிந்து நடந்தே சென்னைக்கு புறப்பட்டோம் என்றார். அவர்களின் நிலை குறித்து அறிந்த டாக்டர், அந்த தம்பதிக்கு செலவுக்கு பணம் கொடுத்து தனது காரில் சொந்த செலவில் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்டு அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பெரியகுளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் பார்வையிட்டு அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு செய்தார். மேலும், இதன் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் மாண்புமிகு க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் பாதுகாப்பு காவலர் உட்பட 3 பேருக்கு சம்மன்

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததுடன், தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்தார்.


இந்தப் புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகை தாக்கல் செய்த மனு நீதி மன்றத்திற்கு வராததால் இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், அதுவரை மணிகண்டனை கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாப்பு காவலருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், மணிகண்டனின் அரசு ஓட்டுநர், அலுவலக உதவியாளருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், நாளை விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனி மையம் விரிவுபடுத்தி உள்ளதாக கோயம்புத்தூர் ஈ.எஸ். ஐ.மருத்துவமனை டீன் அறிவிப்பு

கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் கோவிட் -19 நோயாளிகள் சிகிச்சைக்கென 240 படுக்கை வசதிகள் கொண்ட தனி மையத்தை தன்னார்வல அமைப்புகள் இணைந்து தத்தெடுத்து உள்ளனர். இதில் ஆக்சிஜன் வசதி, நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், மருந்து மாத்திரைகள் மற்றும் செவிலியர்கள் வசதி போன்ற கூடுதல் கட்டமைப்புகளை ஏற்படுத்த உள்ள நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இ.எஸ்.ஐ.மருத்துவமனை வளாக அரங்கில் நடைபெற்றது.


இதில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் மருத்துவர் ரவீந்திரன், கண்காணிப்பாளர் மருத்துவர் ரவிக்குமார் மற்றும் அரிமா சங்கம் 324 பி.1 மாவட்ட ஆளுநர் கருணாநிதி, செய்தி தொடர்பாளர் செந்தில் குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்: கருவாடு கூட மீன் ஆகலாம். ஆனால் ஒரு காலமும் சசிகலா அ.தி.மு.க.வில் உறுப்பினராக முடியாது

கடந்த ஒரு சில நாட்களாகவே சசிகலா தொண்டர்களிடம் பேசும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த சசிகலா தொண்டர்களிடம் பேசும் விவகாரம் அதிமுக மேல்மட்டம் முதல் அடிமட்ட தொண்டர் வரை ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி முதல் ஒரு சில அமைச்சர்கள் சசிகலா குறித்து போட்டி கொடுத்து கொண்டுள்ளனர்.

அதன் வரிசையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியில், சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. இதை நீதிமன்றமும் சரி என தீர்ப்பு கூறியுள்ளது. கருவாடு கூட மீன் ஆகலாம். ஆனால் ஒரு காலமும் சசிகலா அ.தி.மு.க.வில் உறுப்பினராக முடியாது என தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் வீடியோ கால் மூலம் காவல்துறையில் புகார் தெரிவிக்கும் சேவை அறிமுகம்

பொதுமக்கள் காவல் நிலையம் வந்து புகார் தெரிவிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் சிரமம் இன்றி தங்களது புகார்களை தெரிவிக்க ஏதுவாக நேற்று முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் புகார் தெரிவிக்கும் சேவையை கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.


இந்த சேவையானது திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை தினம் தோறும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெறும். இதில் பொதுமக்கள் தங்களுடைய புகார்களை வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பதிவு செய்யலாம்.மேலும் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்க இயலாதவர்கள் கொடுக்கப்பட்டுள்ள 77 08 100 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்


தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குலையநேரி கிராமத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.