ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கோவிட் -19 தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு

கோவிட் -19 யை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான கோவிட் -19 தடுப்பு பணிகள் குறித்து நேற்று அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு மேற்க்கொண்டார்.


மேலும், கோவிட் -19 யை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிகழ்வில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் கோவிட் -19 பரிசோதனை செய்த 15 தனியார் ஆய்வகத்திற்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்

தமிழகத்தில் கோவிட் -19 பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கோவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகம் என 5 இடங்களில் கோவிட் -19 பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் சில தனியார் ஆய்வகம் மற்றும் மருத்துவமனைகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி பெறாமல், கோவிட் -19 பரிசோதனை செய்து சேலம், கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி முடிவுகளை சேகரிப்பதாகவும், அவற்றை முறையாக சுகாதாரத்துறைக்கு தெரிவிப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் கோவிட் -19 நோயாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே 15-க்கும் மேற்பட்ட தனியார் ஆய்வகத்துக்கு சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

சோழிங்கநல்லூர் – நீலாங்கரையில் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சோழிங்கநல்லூர் – நீலாங்கரையில், கோவிட் -19 சிகிச்சை, தடுப்புப் பணியில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களுக்குப், பகுதிச் செயலாளர் திரு.மதியழகன் ஏற்பாட்டில், நலத்திட்ட உதவிகளை தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில், பகுதிச் செயலாளர் திரு.ரவிச்சந்திரன், வ.செயலாளர்கள், கழக நிர்வாகிகள், முன்னணியினர், உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

தடுப்பூசிக்கு பயந்து கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்…!

நாடு முழுவதும் கோவிட் -19 பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டால் ஆபத்து என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி குறித்து மக்களிடம் மத்திய-மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படவில்லை.


இந்நிலையில் கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் அருகே உள்ள காந்தி சவுக், சக்கரகட்டி, கொல்லவாடே ஆகிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடுவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது கொல்லவாடே கிராம மக்கள் அதிகாரிகளை பார்த்ததும், கோவிட் -19 தடுப்பூசி போட பயந்து கிராமத்தை விட்டே வெளியேறினர்.

அதிகாரிகள் அவர்களை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர், ஆனாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்த அவர்கள், தடுப்பூசி போடுவதாக இருந்தால் ஊரை விட்டே செல்கிறோம் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தீண்டாமை சுவரை அகற்றக்கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா அவர்களிடம் தன்னார்வலர்கள் மனு

வேளச்சேரி காந்திசாலையில் இயங்கி வந்த ஐஐடி நுழைவு வாயில் திடீரென்று மூடப்பட்டது. மூடிய நுழைவு வாயிலை திறக்கவும் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்ககோறும் மனுவினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா அவர்களிடம் பொ.த.மதிவாணன் தலைமையில் தன்னார்வலர்கள் கடிதம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கோவிட் -19 தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு


கோவிட் -19 யை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கோவிட் -19 தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். கோவிட் -19 யை கட்டுப்படுத்த மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததார்.

அமைச்சர் கே.என் . நேரு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையை பார்வை

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் கோவிட் -19 னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்காக இயங்கவரும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை நேரில் அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு பார்வையிட்டார்.

மேலும், மக்களிடம் இருந்து பெறப்படும் அழைப்புகள் மற்றும் புகார்களுக்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டான்லி மருத்துவமனையில் கரும்பூஞ்சை பிரத்தியேக வார்டு திறப்பு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுத்தலின்படி, சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் கரும்பூஞ்சை பிரத்தியேக வார்டு திறப்பு, சற்று முன் தகவல் பலகை திறப்பு மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் துறைமுக பொறுப்பு க்கழகத்திடமிருந்து பெறுதல் போன்ற நிகழ்வுகள் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொருளாதாரத்தில் நலிந்த கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மாதம் ரூ.3000 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கல்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த – மேலும் 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மாதம் ரூ.3000 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இத்திட்டத்தால் அகவை முதிர்ந்த செவ்வியல் – கிராமியக் கலைஞர்கள் 6600 பேர் பயன்பெறுவர்கள் என்று தமிழக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் 70 மருத்துவர்களுக்கு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பணி ஆணைகள் வழங்கல்

 


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் சற்றுமுன் தகவல் பலகை திறப்பு, 70 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 60 படுக்கைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முதலிய பணிகள் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.