தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட “இரண்டாவது கொரோனா சிகிச்சை மையம்” இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். மொத்தம் 1000 ஆக்ஸிஜன் படுக்கைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Category: தமிழகம்
Tamilnadu
நீண்ட நாட்களாக சேதமடைந்திருந்த சாலைகள் ஆய்வு செய்து மேம்பாட்டு பணி தீவிரம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கருமண்டபம் அசோக் நகரில் நீண்ட நாட்களாக சேதமடைந்திருந்த சாலைகள், தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
இதனை நேரில் ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கே. என். நேரு உத்தரவிட்டார்.
சிறு குறு தொழில் முனைவோர் சந்தைப்படுத்துவதற்கு இலவச இணையதளம் சேவை
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் இடமாற்றம்
கோயம்புத்தூர் மாநகராட்சி கமிஷனராக குமாரவேல் பாண்டியன் உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயம்புத்தூர் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சி கமிஷனராக இருக்கும் குமாரவேல் பாண்டியன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் சமூக நலத்துறை இயக்குனர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கோயம்புத்தூர் மாநகராட்சி கமிஷ்னராக, சென்னை பெருநகர மாநகராட்சி தெற்கு மண்டல துணை கமிஷ்னராக பதவி வகித்த ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தேஜஸ்வி கல்லூரியில் கோவிட் -19 சிகிச்சை மையத்தை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் பார்வை
கோயம்புத்தூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இருந்தபோதும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கோயம்புத்தூரில் மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் சூலூர் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள தேஜஸ்வி கல்லூரியில் கோவிட் -19 சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்.
நஞ்சுண்டாபுரம் பகுதியில் சுமார் 50 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி
கோயம்புத்தூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இருந்தபோதும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கோயம்புத்தூரில் மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கோயம்புத்தூரில் கோவிட் -19 பாதிப்பு 22 சதவிகிதம் குறைந்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து வீதிவீதியாக சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மேற்கு புதூர் பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 658 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் சுமார் 50 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வீதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
11- ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து
சென்னையிலுள்ள 218 அர்ச்சகர்களுக்கு ரூ.4000 நிவாரண உதவி வழங்கல்
சென்னை – மயிலாப்பூரில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை மாவட்டத்திற்க்கு உட்பட்ட 218 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு நிவாரண உதவிகள், ரூ.4000 இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின்,தமிழச்சி தங்கப்பாண்டியன், மற்றும் மயிலை த.வேலு ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் அறநிலையத்துறை ஆணையர் திரு.குமரகுருபரன் இ.ஆ.ப, துறை அதிகாரிகள் ற்றும் பகுதிச் செயலாளர்கள் ஏழுமலை, நந்தனம் மதி, முரளி, ஆகியோருடன் கலந்துகொண்டனர்.
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவிட் -19 நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ள சுகாதார ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் துப்புரவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் பலர் கோவிட் -19 னால் இறந்துள்ளனர்.
எனவே அவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்க சுகாதாரப் பணியாளர்கள் கோயம்புத்தூர் மருதமலை சாலையில் உள்ள பி.என்.புதூர் மாநகராட்சி வார்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வி.கே. சசிகலா: பெங்களூருவில் இருந்தாலும் 4 வருஷமா என் உடல்தான் அங்கே இருந்ததே தவிர என் உயிர் தமிழக மக்களை சுற்றியே இருந்துச்சு
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். அந்தவகையில் தேனியை சேர்ந்த கர்ணன் என்பவரிடம் நேற்று பேசுகையில், கட்சி இப்படி வீணாகிட்டு இருக்குறதை இனியும் என்னால் பாத்துக்கிட்டு சும்மா இருக்கமுடியாது. ரொம்ப மோசமான நிலைமைக்கு கட்சி போயிட்டு இருக்கு. அதை சரி பண்ணி கொண்டுவரணும்.
நான் இருக்கும் காலம் தொட்டு அதை நிச்சயம் செய்வேன். சொன்னபடி அவங்க ஜெயிச்சு காட்டுவாங்கன்னுதான் நான் ஒதுங்கியிருந்தேன். ஜெயிச்சியிருந்தா கூட அம்மா ஆட்சி 3-வது முறையாக வந்திடுச்சுனு சந்தோஷத்துலேயே நானும் இருந்துருப்பேன். அதை செய்யலையே. இப்போது என்கூட பேசுற தொண்டர்களையும் கட்சியை விட்டு நீக்கிட்டு இருக்காங்க. எனக்கு 4 வருட சிறைத்தண்டனை அப்படினு தீர்ப்பு வந்ததுமே, அடுத்த 10 நிமிஷத்துல அடுத்தக்கட்ட வேலையை ஆரம்பிச்சுட்டேன்.
உடனடியாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி, உடனடி முடிவு எடுத்து ஆட்சியை நல்லபடியா அமைச்சு கொடுத்துட்டுதானே போனேன். நான் பெங்களூருவில் இருந்தாலும் 4 வருஷமா என் உடல்தான் அங்கே இருந்ததே தவிர என் உயிர் தமிழக மக்களை சுற்றியே இருந்துச்சு என வி.கே. சசிகலா தெரிவித்தார்.