கோவில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகள் பாதுகாக்க உயர்மட்ட குழு

தமிழ்நாட்டின் சுற்றுலாத் திறனை முழுமையாக வெளிக்கொணரும் வகையில் பாரம்பரியச் சுற்றுலா ஊக்குவிக்கப்படும்

குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்

ராமதாஸ் பாராட்டு: வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட், சேவை உரிமை சட்டம்

தமிழ்நாட்டில் வேளாண்மை வளர்ச்சிக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 13 ஆண்டுகளாக பா.ம.க. சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வரப்படும்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக்குழு அமைக்கப்படும். தமிழக அரசின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்பவை உள்ளிட்ட தமிழக அரசின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என தெரிவித்தார்.

“தமிழகமெங்கிலும் இருக்கும் சிறப்பு முகாம்கள் எனப்படும் வதைக்கூடங்களை மூடி, கௌரவமான வாழ்க்கைத்தரத்தையும் உருவாக்க வேண்டும்!”

“தமிழகமெங்கிலும் இருக்கும் சிறப்பு முகாம்கள் எனப்படும் வதைக்கூடங்களை மூடி, ஈழச்சொந்தங்களுக்குப் பாதுகாப்பான நலவாழ்வையும், கௌரவமான வாழ்க்கைத்தரத்தையும் உருவாக்க வேண்டும்!” – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கைஅவர்கள் தலைமையில் வழங்கினார்.

 

K.S. மூர்த்தி அவர்கள் தலைமையில் முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களும் வழங்கும் விழா நாமக்கல் மேற்குமாவட்ட கழக செயலாளர் K.S.மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் ஒன்றிய,நகர செயலாளர்கள்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இயந்திரங்களின் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணி துவக்கம்

சென்னையில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 454 இயந்திரங்களின் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணி சைதாப்பேட்டையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.

துரைப்பாக்கத்தில் சித்த கோவிட் -19 சிகிச்சை மையம் திறப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துரைப்பாக்கத்தில் ‘இம்ப்காப்ஸ்’சார்பில் அமைத்திருந்த சித்த கோவிட் -19 சிகிச்சை மையம் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற அலுவலகத்தை தொகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் திறந்து வைப்பு

சென்னை சைதாப்பேட்டையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சட்டமன்ற அலுவலகத்தை தொகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, பகுதிச் செயலாளர்கள்‌ துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, வட்ட செயலாளர்கள் S.P. கோதண்டம், M. நாகா கழக நிர்வாகிகள், முன்னணியினர், உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.