கரூர் மாவட்டம், தாந்தோணி கிழக்கு ஒன்றியம் K. பிச்சம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அபிராமி வேலுசாமி மற்றும் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் புங்கம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் P. மாரியப்பன் அதிமுகவிலிருந்து விலகி இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
Category: தமிழகம்
Tamilnadu
சோமூர் ஊராட்சி மன்ற தலைவர் G.செந்தில்குமார் திமுகவில் இணைந்தார்
நன்னியூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா முருகேசன் திமுகவில் இணைந்தார்
மகாகவி பாரதியார் செல்லம்மாள் 124 வது ஆண்டு திருமண விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு
ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு
சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண உதவி
திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக தலா ரூ.4,000 அமைச்சர் கே.என். நேரு வழங்கினார். அத்துடன் 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கி அவர்களை ஊக்குவித்தார்.
அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் ஒரு நாடகத்தை வி.கே.சசிகலா அரங்கேற்றி வருகிறார்
கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கோயம்புத்தூரில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதிமுக கொறடாவும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சட்டப்பேரவை தேர்தலின்போது, தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்கள் மூலம் வி.கே.சசிகலா பகிரங்கமாக அறிவித்தார்.
ஆனால், அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக, ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன்பேசுவதாக வினோதமான ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றி வருகிறார்.சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை. அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு இக்கூட்டம் அவருக்குகடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
ஒரு குடும்பத்தினர் மீண்டும் அதிமுகவை அபகரித்து விடலாம் என வஞ்சக வலை விரிக்கின்றனர். அவர்களுக்கு அதிமுக ஒருபோதும் அடிபணியாது என்பதுஉள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், எம்எல்ஏக்கள் கே.ஆர்.ஜெயராம், அம்மன் கே.அர்ச்சுணன், அமுல் கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி.கந்தசாமி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
நகராட்சிகளின் இயக்குநரகம், அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியை நேரில் பார்வையிட்டார்.
முதியோர் உதவித்தொகை வேண்டி மனு உடனடி தீர்வு
கழிவுநீர் மற்றும் குடிநீர் பராமரிப்பு பணிகளை ஹசன் மௌலானா துவக்கி வைத்தனர்
வேளச்சேரி உதயம்நகரில் சென்னை மெட்ரோ குடிநீர் சார்பில் கழிவுநீர் மற்றும் குடிநீர் பராமரிப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இப்பகுதியில் நீண்டகால பிரச்சனைகளான பைப்லைன் மூலம் குடிநீர் வழங்குதல் கழிவுநீர் உந்தி நிலையம் அமைப்பது ஆகிவைகளை சரிசெய்து தர கோரிக்கை வைத்தனர்.