பீட்டர் அல்போன்ஸ் சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்

தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் , கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13 ஆம் நாள் அன்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து , அதன் தலைவராக எஸ் . பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடம்பூர் ராஜூ : சசிகலா ஒரு கட்சியை தொடங்கிய பின்னர் சுற்றுப்பயணம் செய்தால் அதை யாரும் தடுக்க முடியாது.

கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களிடமே சசிகலா பேசி வருகிறார். விளாத்திளத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.வில் சசிகலாவை ஏற்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அவர் அ.தி.மு.க.வுக்கு வர முயற்சிப்பதற்கு என்ன நிர்ப்பந்தம் என்று தெரியவில்லை.

சசிகலா ஒரு கட்சியை தொடங்கிய பின்னர் சுற்றுப்பயணம் செய்தால் அதை யாரும் தடுக்க முடியாது. மாறாக அவர் அ.தி.மு.க. என்ற போர்வையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் வரக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து. சசிகலா ‌அ.ம.மு.க.விற்கு தலைமையேற்று வழி நடத்தலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபனை கிடையாது.

தமிழகத்தில் சசிகலா சுற்றுப்பயணத்தின்போது அ.தி.மு.க.வினர் யாரும் செல்லப்போவதில்லை. ஆகையால் சசிகலா சுற்றுப்பயணத்தினால் அ.தி.மு.க.விற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என தெரிவித்தார்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் 2017-ல் எடப்பாடி ஆட்சியில்தான் ‘நீட்’ தேர்வு முதல் முறையாக திணிக்கப்பட்டது

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் ‘நீட்’ தேர்வு திணிக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமாக பதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் திரும்பத்திரும்பப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சி மீது பழிபோட அ.தி.மு.க. முயல்கிறது. ‘நீட்’ தேர்வு குறித்து இத்தகைய கேள்வியை எழுப்புவதற்கு அ.தி.மு.க.வினருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வைத் திணித்தது பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும்தான் என்பதற்கு நிறைய ஆதாரங்களை கூற முடியும். தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த துரோகத்தை எடப்பாடி பழனிசாமி ஆயிரம் அறிக்கைகள் விட்டாலும் மூடிமறைக்க முடியாது.

எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மத்தியில் 2014-ல் இருந்த வரை தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு திணிக்கப்பட வில்லை. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் 2017-ல் எடப்பாடி ஆட்சியில்தான் ‘நீட்’ தேர்வு முதல் முறையாக திணிக்கப்பட்டது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது என தெரிவித்தார்.

முதல்வர் பதவிக்கு ஜாதி தடையாக இருந்ததா?

வி. கே. சசிகலா: கொங்கு மண்டல மக்கள் எல்லாருமே தலைவர் மேலும், அம்மா மேலும் ரொம்ப பாசமா இருப்பாங்க… அந்த மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டு பழக்கப்பட்டவங்க… அந்த மக்கள் நம்ம மேல வச்ச பிரியம் எனக்கு பெரிசா பட்டுச்சு… அதனால்தான் கொங்குமண்டல மக்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை தரலாம்னு நினைச்சுதான் அந்த வாய்ப்பை கொடுத்துட்டு போனேன்.

இந்தியா ஃபஸ்ட் ஆசிரியர்: கொங்கு மண்டலத்திலுள்ள தலித் மக்கள் தான் 80 % பேர் குறிப்பாக அருந்ததிய மக்கள் தான் 99% அதிமுகவிற்கு ஓட்டு போட்டவர்கள் அதில் ஒரு தலைவர் (சபாநாயகர் தனபால்) உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? இல்லை முதல்வர் பதவிக்கு ஜாதி தடையாக இருந்ததா?

ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி அமைச்சர் மா. மதிவேந்தன் அவர்கள் வழங்கினார்

நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் திருமங்கலியத்திற்கு தங்கத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் அவர்கள் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.பொன்னுசாமி. பெ .ராமலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி: நத்தம் விஸ்வநாதன் புதிய மின் திட்டம் குறித்து Google கூட விடை சொல்ல தவிக்கிறது

மின்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் இருந்த போது, மக்கள் துவைத்த துணிகளை மின் கம்பியில் காயப்போடும் அளவுக்கு 18 மணிநேரம் வரை மின்வெட்டு இருந்தது.

இதைத் தீர்க்க விஸ்வநாதன் எதாவது புதிய மின் திட்டம் தொடங்கினாரா என தேடிப்பார்த்தால், Google கூட விடை சொல்ல தவிக்கிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக வழக்கறிஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் கே.கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் பார்வை

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், நத்தத்துப்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணியை நேற்று அமைச்சர் கே.கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் பார்வையிடடார்.

அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 2.02 ஏக்கர் நிலம் மீட்பு

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை-குரோம்பேட்டை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 2.02 ஏக்கர் நிலத்தினை சில தனிநபர்கள் புல எண்களை மாற்றி விற்பனை செய்து, அந்த நபர்கள் மேற்படி நிலத்தினை ஆக்கிரமித்து வந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு

 


ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒளி-ஒலி அமைப்பு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, நேரு நகர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.