தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்அவர்கள் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் மகத்தான பணிபுரிந்த மருத்துவர்களின் சேவைதனை சிறப்பிக்கும் விதமாக, பாராட்டு விழா சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் நடைபெற்றது,
Category: தமிழகம்
Tamilnadu
காவல்துறையினரின் மனிதாபிமானம் – பொதுமக்கள் பாராட்டு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கணவரின் இறுதிச்சடங்கை செய்ய முடியாமல் தவித்த மூதாட்டிக்கு காவல்துறை இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தது அப்பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘ ஒற்றை தலைமை வழிநடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் தூயர் தீர்க்க.. என்ற வாசகத்துடன் மதுரையில் போஸ்டர்கள்
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், இன்று அ.தி.மு.க புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சுஜாதா (எ) ஹர்ஷினி சார்பில் ‘ ஒற்றை தலைமை வழிநடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் தூயர் தீர்க்க, கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே சின்னம்மா’ என்ற வாசகத்துடன் மதுரை மாவட்டம் முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்.
மதுரையில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் போஸ்டர் ஒட்டியதைத் தொடர்ந்து இன்று மீண்டும் அ.தி.மு.க நிர்வாகிகளிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்: கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக தகவல்
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகாரில் அடையாறு அனைத்து மகளிர் காவலதுறை 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, பெங்களூரூ பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த போது கடந்த 20-ந் தேதி தனிப்படை காவலதுறை அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து செல்போனை ஆய்வு செய்தபோது, நடிகையுடன் அந்தரங்கமாக இருந்தற்கான ஏராளமான ஆதாரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்திய நிலையில், வருகிற ஜூலை 2-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக கோபாலபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவர் அருண் காவலதுறையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மு.க. ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தை பார்வை
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தை இன்று பார்வையிட்டார்.
“மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடமிருந்து கற்றுக் கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்” என்று பேரறிஞர் பெருந்தகை நமக்கு வகுத்து தந்த பாதையிலேயே கழக ஆட்சி பீடு நடை போடும்! என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
“தமிழ்நாடு காவல்துறை தலைவராக சைலேந்திர பாபு நியமனம்” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி: தந்தையின் கடனுக்காக மகனின் சேமிப்பு கணக்கு முடக்கம்
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள மேற்கு குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.75 ஆயிரம் பயிர்கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் சில மாதங்களிலேயே இறந்துவிட்டார். அதே வங்கியில் அவரது மகன் கனகராஜ் கணக்கு வைத்திருந்தார். அதில் ரூ.2½ லட்சம் இருந்தது. அதில் ரூ.1 லட்சம் தனது சிகிச்சைக்காக எடுத்துள்ளார்.
மேல் சிகிச்சைக்காக மீதி தொகையை எடுத்துச் சென்றபோது வங்கி தரப்பில் தந்தையின் கடனை கட்டி விட்டு பணத்தை எடுக்குமாறு கூறியுள்ளனர். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது சிகிச்சைக்காக அவரை கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது தகவல் அறிந்து விவசாய சங்க பிரதிநிதிகள் வங்கி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பணம் எடுக்க முடியவில்லை. இந்நிலையில் திடீரென கனகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாய சங்க பிரதிநிதிகள் வங்கியில் தனது கணக்கில் இருந்த பணத்தை சிகிச்சைக்காக எடுக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த கனகராஜூக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவேண்டும், அதற்கு காரணமான வங்கி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.